புதன், 21 நவம்பர், 2018

22-11-2018 அனைத்து மாவட்ட தலைநகரங்களில் NFTCL அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து ..: மாதந்தோறும் சம்பளம் BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏழாந்தேதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் போக்கினை கண்டித்து நமது மாநிலச் சங்கம் 22-11-2018 ல் ஆர்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து நமது சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.கே.எம். இன்று இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.நாளை கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கும் சூழல் உள்ளது.எனவே நமது மாநிலச் சங்கம் திட்டமிட்ட 22-11-18 ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. உடனடியாக தலையிட்டு பிரச்சினை தீர்வுக்கு உதவிய தோழர் சி.கே.எம்.அவரகளுக்கு 



.Image may contain: 2 people, including Ragul Anandhan, beard, hat and outdoor
       நமது நன்றி!!! நன்றி!!! நன்றி!!!.....
                                        தோழமை அன்புடன்
                                             எஸ்.ஆனந்தன்
                                     மாநிலச் செயலாளர்
                                            NFTCL, தமிழ்நாடு.

பிரச்சினையின் தீர்வு இருக்கட்டும் ஒருபுறம் 

எந்த பிரச்சனைக்கு ஆவது நாம் இப்படி இறங்கி வேலை செய்கிறோமா ? என்பதை அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் யோசிக்க வைத்த இன்றைய நிகழ்வு அதுதான் நமது பொதுச் செயலாளர் தோழர் சி கே மதிவாணன் இன்று செய்த செயல் .
புயலால் பாதிக்கப் பட்டிருக்கும் திருவாரூர் தஞ்சை தூத்துக்குடி அறந்தாங்கி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மல்லி செக்யூரிட்டி ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காததை தமிழ்நாடு சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலாளரிடம் வருத்தத்தை பதிவு செய்தேன் தோழர் சிறிதளவும் யோசிக்காமல் நான் நேரடியாக சென்று அந்த ஒப்பந்ததாரரை சந்தித்து சம்பள பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்துகிறேன் என்றார் கேட்கவே வியப்பாக இருந்தது சிறிது நேரத்தில் அவர் முகநூலில் போட்டிருக்கும் பதிவை கண்டவுடன் அகம் மகிழ்ந்தேன் இன்று தொழிற்சங்கம் நடத்த தெரியாத தலைவர்களும் , நாங்களும் தொழிற்சங்கம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பெயரளவில் நடத்திக்கொண்டிருக்கும் தொழிற்சங்கவாதிகள் என்று ஏமாற்றும் தலைவர்கள் மத்தியில் இன்று நமது தோழர் செய்த செயல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரின் மனதிலும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.தான் கொண்ட கொள்கையும் தான் நடந்து செல்லும் பாதையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு உயர்வை ஏற்படுத்த வேண்டுமென்று இயங்கிக் கொண்டிருக்கும் தோழர் சி கே மதிவாணன் அவர்களுக்கு தமிழ்நாடு மாநில சங்கத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம் நன்றிகள் பல ....
Image may contain: 1 person, standing


சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவோம் என்ற தோழர் குப்தா அவர்களின் பொன்மொழியை இதயத்தில் ஏந்தி செயலாற்றும் தோழர் CKM அவர்களின் பாராட்ட வேண்டிய செயல்பாடு.
மனிதாபிமான அடிப்படையில் "மல்லி" கான்ட்ராக்டருக்கு வேண்டுகோள்.:
இன்று (21-11-2018) நேரடியாக" மல்லி" கான்ட்ராக்டர் அலுவலகம் சென்று நான் அதன் தலைமை நிர்வாகி கர்னல் மலையப்பன் உள்ளிட்டவர்களை சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தேன். குறிப்பாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வற்புறுத்தினேன். நேற்று வங்கிகளில் ஊதியம் போடப்பட்டு விட்டதாக அவர்கள் கூறினர். அங்கிருந்தே திரு. வினோத் PGM தஞ்சாவூர் BSNL அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் இத்தகவலை உறுதிப்படுத்தினார். இன்று வங்கிகள் விடுமுறை என்பதால் நாளைக்கு சம்பளம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கையில் கிடைக்கும் என்று நம்புகிறேன். போனஸ் தொகை சிலருக்கு மிகவும் குறைவாக வழங்கப்பட்டதையம் சுட்டிக் காட்டினேன். அதற்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு மாதம் மட்டுமே பணிபுரிந்ததே காரணம் என விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில் தூத்துக்குடி ஜெய்சங்கரை மீண்டும் பணியமர்த்துவது, மீஞ்சூர் மனோகரனின் சென்னை இடமாற்றல் உள்ளிட்ட பிரச்சினைகளில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண நான் அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உள்ள இன்னல்களை "மல்லி" கான்ட்ராக்டர் விரைவில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன்.
சி.கே.மதிவாணன்.
21-11-2018/சென்னை.

செவ்வாய், 20 நவம்பர், 2018

புயலில் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கும் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாதம் கூட சரியாக சம்பளம் போடாத ஒப்பந்ததாரரை ஏன் ஒப்பந்தத்தில் வைத்திருக்க வேண்டும் நமது பிஎஸ்என்எல் நிர்வாகம் ? . BSNL நிதிப்பற்றாக்குறை பற்றி அனைவரும் அறிந்த விஷயமே ஆனாலும் ஒப்பந்ததாரர்கள் பிஎஸ்என்எல் கொடுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்ய 
நடுத்தர கார்கள் போல் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயம் .BSNL பணம் கொடுத்தால் மட்டுமே அதை வாங்கிக் கொடுப்போம் என்ற நிலை என்பது முதலீடு வைக்காமல் லாபத்தை மட்டும் சம்பாதிக்க நினைக்கும் ஒப்பந்ததாரர்கள் தேவையா? இது போன்ற அவல நிலை தொடராமல் இருக்க 22/11/2018 அன்று நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்



போராட தயாராவோம்
அன்பார்ந்த தோழர்களே !!!தோழியர்களே !!!
அக்டோபர் மாத சம்பளம் 20 தேதி ஆகியும் நமது கையில் கிடைக்காத நிலையே நிலவுகிறது இதனை கண்டித்து பலமுறை நிர்வாகத்திடமும் ஒப்பந்ததாரரிடம் பேசி பயன் இல்லாத காரணத்தால் வருகின்ற
22 11 2018 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று மாநில சங்கத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து தலைநகரங்களில் மாநில நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்ததாரர்களை கண்டித்தோம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட மாநில சங்கம் கேட்டுக்கொள்ளப்படுகிறது போராடுவது புதிதல்ல!!!பிரச்சனைகளும் புதிதல்ல !!!புதியது என்னவென்றால் மாத சம்பளம் பிரதி மாதம் 7ஆம் தேதி கிடைப்பதுதான் !!!அதை பெற வலுவான போராட்டங்கள் மட்டுமே வழிவகை செய்யும் அதற்கான களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம் போராடுவோம் வெற்றி பெறுவோம் 
Image may contain: 3 people, people sittingவாழ்த்துக்களுடன் 

S.ஆனந்தன் மாநிலச் செயலாளர் NFTCL தமிழ்நாடு

செவ்வாய், 13 நவம்பர், 2018

ஒரு விரல் புரட்சி என்றால் என்னவென்று இதை பார்த்துதான் தெரிய வந்தது