புதன், 21 நவம்பர், 2018



சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவோம் என்ற தோழர் குப்தா அவர்களின் பொன்மொழியை இதயத்தில் ஏந்தி செயலாற்றும் தோழர் CKM அவர்களின் பாராட்ட வேண்டிய செயல்பாடு.
மனிதாபிமான அடிப்படையில் "மல்லி" கான்ட்ராக்டருக்கு வேண்டுகோள்.:
இன்று (21-11-2018) நேரடியாக" மல்லி" கான்ட்ராக்டர் அலுவலகம் சென்று நான் அதன் தலைமை நிர்வாகி கர்னல் மலையப்பன் உள்ளிட்டவர்களை சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தேன். குறிப்பாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வற்புறுத்தினேன். நேற்று வங்கிகளில் ஊதியம் போடப்பட்டு விட்டதாக அவர்கள் கூறினர். அங்கிருந்தே திரு. வினோத் PGM தஞ்சாவூர் BSNL அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் இத்தகவலை உறுதிப்படுத்தினார். இன்று வங்கிகள் விடுமுறை என்பதால் நாளைக்கு சம்பளம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கையில் கிடைக்கும் என்று நம்புகிறேன். போனஸ் தொகை சிலருக்கு மிகவும் குறைவாக வழங்கப்பட்டதையம் சுட்டிக் காட்டினேன். அதற்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு மாதம் மட்டுமே பணிபுரிந்ததே காரணம் என விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில் தூத்துக்குடி ஜெய்சங்கரை மீண்டும் பணியமர்த்துவது, மீஞ்சூர் மனோகரனின் சென்னை இடமாற்றல் உள்ளிட்ட பிரச்சினைகளில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண நான் அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உள்ள இன்னல்களை "மல்லி" கான்ட்ராக்டர் விரைவில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன்.
சி.கே.மதிவாணன்.
21-11-2018/சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக