Saturday, 18 January 2020

NFTCL போராட்டம் ஒத்திவைப்பு !
********************
கோயமுத்தூரில் 30/12/2019 அன்று நடைபெற்ற தமிழ்நாடு NFTCL மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக
22/01/2020 அன்று மாவட்ட தலைநகரங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கோரிக்கையின் பால் தீர்வு எட்டப்படவில்லை என்றால் 29/01/2020 அன்று தஞ்சாவூரில் தார்ணா போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இதனை முறைப்படி நிர்வாகத்திற்கும் - சென்னை மண்டல தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கும் தெரிவித்து விட்டோம்.
போராட்ட அறிவிப்பினை பற்றி விவாதிக்க திரு.அண்ணாதுரை , RLC / சென்னை நமது மாநிலச் சங்கத்தை 17/01/2020 அன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பினை ஏற்று 17/01/2020 அன்று நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில பொருளாளர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய தொழிலாளர் மண்டல ஆணையர் அவர்கள் ஏற்கனவே NFTCL சங்கம் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் தருவாயில் எந்த ஒரு போராட்ட நடவடிக்கைகளில் உங்கள் சங்கம் ஈடுபடக் கூடாது அது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்றும் வலியுறுத்தினார் அதேசமயம், இரண்டு CGM களும் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிது காலஅவகாசம் கோருவதாகவும் NFTCL 2020 ஜனவரி 22 மற்றும் 29 தேதிகளில் நடத்த அறிவித்துள்ள இரண்டு கட்ட போராட்டங்களை கைவிட வேண்டும் என்று திரு.அண்ணாதுரை , RLC வேண்டுகோள் ( Appeal) விடுத்தார். இந்த வேண்டுகோளை நிராகரிக்கும் சூழலில் நமது சங்கம் இன்று இல்லை. எனவே வேறுவழியின்றி இரண்டு போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில் RLC அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பத்து மாத சம்பள நிலுவையை விரைவில் வழங்கிட சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு CGM களுக்கு கூடுதல் அழுத்தம்/ நிர்பந்தம் அளிக்கும் படியான கடிதத்தை அனுப்ப விருப்பதாக தெரிவித்தார் . எனவே நாம் இம்மாவட்டத்தின் இறுதியில் நடத்தவிருந்த இரு இயக்கங்களையும் ஒத்திவைத்துள்ளோம். நமது மாநிலச் சங்க நிர்வாகிகள்/ மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவினை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி!
தோழமையுடன்
S.ஆனந்தன்
மாநிலச் செயலாளர்
NFTCL-தமிழ்நாடு.
18/01/2020.

Sunday, 5 January 2020

தமிழ்நாடு NFTCL மாநிலச் செயற்குழு முடிவுகள்:
30/12/19 ல் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன.
1) ஒப்பந்த தொழிலாளர்களின் தாமதப் படுத்தப்பட்ட பத்து மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்
கோரியும்- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு ( ஆண்டுக்கு 240 நாட்கள் பணிபுரியும் பட்சத்தில்) வேலை செய்யும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிர்வாகம் நிரந்தரமாக்கிட கோரியும்

* மாவட்ட தலைநகரங்களில் 2020 ஜனவரி 22 ல் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்.
* தஞ்சாவூரில் 2020 ஜனவரி 29 ல் மாநிலந்தழுவிய தார்ணா போராட்டம்.
2) அடுத்த மாநில மாநாட்டை திருநெல்வேலியில் 2020 மே மாதத்தில் நடத்துவது. இதற்கான வரவேற்புக் குழு ஜனவரி மாத இறுதியில் அமைக்கப்படும்.
நிரந்தர ஊழியர்களுக்கும் , ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பல மாத ஊதியம் கிட்டாத நெருக்கடியான சூழலில் - உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான 30/12/2019 அன்று கோவையில் நடைபெற்ற இந்த மாநிலச் செயற்குழு கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம் சிறப்பாக அமைய நிதி திரட்டி ஏற்பாடுகளை செவ்வனே செய்த தலைவர்கள் சுப்பராயன், ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் மற்றும் எண்ணற்ற தோழர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி.Image may contain: 5 people, including Babu Varadharaj, people smiling, people standing

Thursday, 5 December 2019

BSNL நிர்வாகமும், ஒப்பந்தத்தரும், ஒப்பந்த தொழிலாளர்
பிரச்சனையில் தவறு செய்யும் பட்சத்தில் NFTCL தலையீடும் எச்சரிக்கை. புதுவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்காக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை, ஒப்பந்தாரர் TENDER இல் இருந்து விலகுவதாக அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தால், உடனடியாக நிர்வாகமும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விட்டுக்கனுப்ப முடியாது. நன்றி விசுவாசம் அற்ற நிர்வாகமே உனக்காகத்தானே ஒப்பந்த தொழிலாளி உழைத்தான், உழைப்பு என்றால் சாதாரண உழைப்புயில்லை. காட்டில், மேட்டில், மழையில், குளிரில்,மற்றும் வெட்ட வெயிலில். BSNL நிர்வாகத்தை 10 மாதம் சம்பளம் இல்லாமல் இன்றும் டாய்லட் சுத்தம் செய்து நறுமணம் குறையில்லாமல் பார்த்து கொள்கிறான். கேபிள் JOINDER என்ற  பெயரில் சாக்கடை ,சங்கடத்தையும் அனுபவிக்கும் ஒப்பந்த தொழிலாளி, எல்லோரும் அலுவலகத்தைய வீட்டுக்கு போனாலும் நான் பார்த்துக்ககொள்வேன் என்கிற காவலாளி (EOI ). 

Image may contain: 11 people, people smiling

பாரத் ரத்னா- பாபா சாஹிப் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவு நாள்- டிசம்பர் 6:
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினவு தினத்தை முன்னிட்டு டெய்லர்ஸ் ரோடு BSNL ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு வழக்கம் போல NFTE-BSNL மற்றும் NFTCL சம்மேளனங்கள் சார்பில் மாநிலத் தலைவர்கள் M.K.ராமசாமி, V.பாபு‌ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். தோழர் சி.கே.எம் , மாமேதை அம்பேத்கரின் மாண்புகள்- ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அவரது செயல்பாடுகள்குறித்து புகழஞ்சலி உரை நிகழ்த்துவார். 06-12-2019 ( வெள்ளி) காலை 9.30 மணிக்கு நமது தோழர்கள் பெருந் திரளாக டெய்லர்ஸ் ரோடு BSNL குடியிருப்பு வளாகத்தில் வருகைதர வேண்டுகிறேன்.‌ நன்றி !
தோழமை அன்புடன்
சி.கே.எம்,
மாநிலச் செயலாளர்
NFTE-BSNL
பொதுச் செயலாளர்
NFTCL.

NFTE-BSNL & NFTCL ஆர்ப்பாட்டம் - டிசம்பர் 04:

சென்னை தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர்கள் ராமசாமி, பாபு ஆகியோரின் கூட்டுத் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் இன்று மதிய வேளையில் நடைபெற்றது. ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் கூடாது; மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களின் எட்டு மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் G.மகேந்திரன் , சி.கே.எம் . கோஷங்களை முழங்கினர்.‌தோழர்கள் சபாபதி, தனபால் , இளங்கோவன், உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் சி.கே.மதிவாணன் கோரிக்கைகளை விரிவாக விளக்கினார். உயரதிகாரிகளான ITS கேடர் அதிகாரிகள் சங்கம் தங்களின் இரண்டு மாத ஊதியம் தாமதமாவது குறித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு எதிராக தொடுத்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிர்வாகத்தையே நடத்தும் ITS அதிகாரிகள் எட்டு மாதங்களாக வழங்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பது படுகேவலம் என தோழர் சி.கே.மதிவாணன் குற்றம் சாட்டினார். அரசு நிறுவனமே ஊழியர்களுக்கு மாத ஊதியம் தராமல் இழுத்தடிக்கும் அநியாயத்தை அவர் கண்டித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

Image may contain: 3 people, including Babu Varadharaj, people standing and outdoorImage may contain: 2 people, outdoor
Image may contain: 17 people, including Babu Varadharaj, Rajendharan You Chidambaram and Kamaraj Sengulathan, people standing and outdoor
Image may contain: 5 people, including இரா.தமிழ் பெருமாள், crowd and outdoor

Image may contain: 17 people, including Sundara Moorthy and இரா.தமிழ் பெருமாள், people smiling, people standing, crowd and outdoor
ITS அதிகாரிகள் இரண்டு மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வழங்கப்படாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்தை அணுகி, இன்று 5 ஆம் தேதிக்குள் சம்பளப் பட்டுவாடா நடைபெற வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் உத்தரவாக பெற்றுள்ளனர்.நிரந்தர தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நிரந்தர தொழிலாளிக்கு சம்பள பட்டுவாடா உடனடியாக தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 4 ஆம் தேதி அன்று மதிய உணவு இடை ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.ஆனால் கேட்பாரற்று கிடக்கும் ஒப்பந்தத் தொழிலாளி 10 மாதங்களாக சம்பளத்தை பெறவில்லை இதைப்பற்றி குறைந்தபட்சம் கோரிக்கையை கூட வைக்க எந்த கையாலாகாத சங்கமும் முற்படவில்லை.ஆனால் தொடர்ச்சியாக நமது ஒப்பந்த தொழிலாளர் சலுகைக்காக உரிமைக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் ஒரே சங்கம் NFTCL.ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை குறித்து கோரிக்கை வைத்துப் போராட இன்று 04/12/2019 மதியம் ஒரு மணி அளவில் நமது சங்கத்தின் சார்பாக சென்னை CGM அலுவலகம் முன்பு நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். நிரந்தரத் தொழிலாளி வேறு ஒப்பந்தத் தொழிலாளி வேறு என்பதை பாரபட்சமில்லாமல் 2 தொழிலாளி வர்க்கத்திற்கும் போராடக்கூடிய சங்கம் என அணிதிரள்வோம் வாரீர் !!!வாரீர்!!!

Saturday, 30 November 2019

            தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்                                     தமிழ்நாடு மாநில சங்கம்                                      பதிவு எண் : 3550/ CNI

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாநிலச் செயற்குழு கூட்டம்                                               நாள் : 30/12/2019.
இடம் :ஜீவஜோதி ஹால், மைக்கேல் ஸ்கூல் பின்புறம், குட் ஷெட் ரோடு, கோவை-18.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அருமைத் தோழர்களே !

நமது NFTCL சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 30 -ந் தேதி (திங்கட்கிழமை ) காலை 10 மணியளவில் கோயமுத்தூரில் நடைபெற உள்ளது. இன்றைய சூழலில் நமது NFTCL சம்மேளனத்தை மேலும் வலுப்படுத்த - விரிவுபடுத்த வேண்டிய கடமை நம்முன் உள்ளது. எனவே அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் முக்கியமான இந்த கூட்டத்தில் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.V. பாபு மாநில தலைவர்
முன்னிலை: தோழர் N.இராமகிருஷ்ணன் மாநில செயல் தலைவர்
அஞ்சலி : தோழர் N. அன்பழகன் மாநில துணைத் தலைவர் .‌
வரவேற்புறை: K.ஜெயச்சந்திரன் மாவட்ட செயலாளர் -கோவை
அறிமுக உரை : தோழர் S.ஆனந்தன் மாநிலச் செயலாளர். துவக்க உரை: தோழர் L. சுப்பராயன். அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர்
**********************
சிறப்புரை : தோழர் C.K. மதிவாணன் சம்மேளன பொதுச் செயலாளர்.
**********************
ஆய்படுபொருள் :
----------------------------
(1) செயல்பாட்டு அறிக்கை.
(2) சம்பள பிரச்சனை
(3) ஆட்குறைப்பு ஆளெடுப்பு
(4) நிதிநிலை அறிக்கை
(5) மாநில மாநாடு
(6) செயற்குழு தீர்மானங்கள் . (7) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புத்தாக்க திட்டம்- நமது அணுகுமுறை.
இன்ன பிற தலைவர் அனுமதியுடன் ...
**********************
நன்றியுரை : தோழர் E.சம்பத் மாநில பொருளாளர் .
**********************
கோயம்புத்தூர் வருவதற்கான பயணத்திற்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.
தோழமையுடன்
S.ஆனந்தன்
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு மாநில சங்கம்