Friday, 31 March 2017

ரொம்ப குழப்பத்தில் இருக்காங்களோ !!
Image may contain: one or more people


தஞ்சை மற்றும் குடந்தை இணைந்த......!


TMTCLU...! ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு...!

கொண்டாட்ட...! சிறப்புக் கூட்டம்...! என்று சேலம் வலைத்தளம் சொல்லுது ... 

ஆனால் மாவட்ட தலைநகரங்களில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு வழங்க வலியுறித்தி 5 ஆம் ஆர்ப்பாட்டம்  மற்றும் 15ஆம் தேதி  மாவட்ட தலைநகரங்களில்ஆர்ப்பாட்டம் என்று கும்பகோணம் வலைத்தளம் சொல்லுது . 

எவ்வளவுதான் எண்ணையை தடவிகிட்டு மண்ணுல புரண்டாலும் ஓட்டறதுதான் ஓட்டும். இதை போலத்தான் 3 மாதத்திற்கு முன் கடலூரில் ஒரு 40 பேர் பட்டியல்- கருத்தரங்கம் கடைசியில் ஒரு நாடக போட்டுமுடிப்பதற்குள் இவர்கள் நாடகம் வெளுத்துவிட்டது .குறிப்பு என்வென்றால் 40 பேர் பட்டியலில் இருபவர்கள் கூட வரமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கே தெரியாது அவர்கள் பெயர் போட்ட விஷயம்  . பாவம், MGR பாட்டுதான் நினைவுக்கு வருகிறது " இன்னும் எத்தனை  காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ". 

சரி  புதிய சம்பளம் தர சொன்னது மத்திய அரசாங்கமும் ,தொழிலாளர் ஆணையமும் ,தர உத்தரவிட்டுவிட்டது BSNL நிர்வாகம் .

தஞ்சாவூர்,காரைக்குடி ,கடலூர்,புதுச்சேரி,நாகர்கோயில் மற்றும் அணைத்து மாவட்டங்களில் இந்த உத்தரவை அமுல்படுத்த அந்தந்த பொது மேலாளர்கள் உத்தரவு பிறப்பித்துவிட்டனர் . உத்தரவை அமுல்படுத்தாத பொழுது அதை செய்ய அதற்கென உள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள் . அசிங்கமே இல்லாமல் கொடுத்த உத்தரவுக்கு கருத்தரங்கம் நடத்துவதும் , கொடுக்கப்போற சம்பளத்திற்கு போராடுவது போல நடிப்பதும் நமது NFTE பாரம்பரியத்தை அசிங்க படுத்தும் செயல் என்றால் மிகையாகாது. 


Tuesday, 28 March 2017

குறைந்த பட்ச ஊதியம் 
         நிர்வாக உத்திரவு
...

ஒப்பந்த ஊழியர்களுக்கான 
குறைந்தபட்ச ஊதியம் 
19/01/2017 
முதல் உயர்த்தப்பட்டு 
மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
தற்போது மத்திய அரசின் நிர்வாக உத்திரவு 
 17/03/2017 
அன்று 
டெல்லி முதன்மை தொழிலாளர் ஆணையர் 
CLC 
அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசிதழில் 
விலைவாசிப்படி VDA உயர்வு 
பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் எந்த தேதியில் இருந்து 
என்பது குறிப்பிடப்படவில்லை.
தற்போதைய நடைமுறைகளின்படி 
VDA 
என்னும் விலைவாசிப்படி உயர்வு
ஆண்டுக்கு இருமுறை 
ஏப்ரல் மற்றும் அக்டோபர் 
மாதங்களில் அறிவிக்கப்படும்.

எனவே புதிய விலைவாசிப்படி உயர்வு 
01/04/2017 
முதல் அறிவிக்கப்படும் என
CLC 
அலுவலக உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.Friday, 24 March 2017

மதுரை எத்தனை புகழை உள்ளடக்கும்என்ன அருமையான நிகழ்ச்சி காலை தொடங்கி இரவு வரை கட்டுப்பாடோடு இருந்த கூட்டம். கூட்டத்தில் யாராவது பேச வேண்டுமா ? ,யாராவது பேசணும் என்றால் பேசலாம் என்று காரைக்குடி மாவட்ட செயலர்  மாரி கூறுவதும் சிரித்த முகத்தோடு அனைவரையும் அரவணைப்பில் வைத்து கொண்டிருக்கும் மதுரை மாவட்ட செயலர் சிவகுருநாதன் ,ராஜேந்திரன் ,அக்கா பரிமளம் ,தனம் என்று தோழமை உள்ளங்களோடு இணைந்த சந்தோஷம் சொல்லி மாளாது .மொத்தத்தில் சிறப்பு !!!  ஒரே சந்தேகம் அணைவரும் கூறியது போல் இது மாவட்ட செயற்குழுவா ? அல்லது மாநில செயற்குழுவா ? என்பதுதான் . அதில் என்ன நல்ல விசியம் என்றால் அடுத்த மாநில செயலரை ஏன் மாவட்ட செயற்குழுவிற்கு  அழைதீர்கள் என்று நமது தோழர்கள் தலைவர்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் கோளாறுதான் ....

Image may contain: 1 person, sitting and indoor

Image may contain: 3 people, people sitting
Image may contain: 4 people, people sitting and table
Image may contain: 6 people, people smiling, people sitting and people standing

Image may contain: 6 people, people smiling, people sitting

Image may contain: one or more people, people sitting and indoor

Image may contain: 9 people, crowd and indoor

Tuesday, 21 March 2017

Image may contain: one or more people and text18 தேதி வரையில சம்பளம பட்டுவாடா ஒரே ஒரு ஒப்பந்தகாரர் போட வில்லை சரி நிதி நிலைமை BSNL க்கே சரியில்லாத பொழது எப்படி போராட்டம் என்று யோசித்து 20 ஆம் தேதி Asst.Labour Commissioner யிடம் நமது சங்கம் சார்பாக Strike notice கோடுத்தோம். உடனடியாக ALC யும் நமது கோரிக்கை உணர்ந்து ,நமது AGM, DGM என்று தொலைபேசியில் வலம் வந்தார் மிக கடுமையாக பேசினார்.செய்வதரியாத மாவட்ட நிர்வாகம்,சம்பள பட்டுவாடா செய்யாத CONTRACTOR க்கு showcase notice என்று துரித நடவடிக்கை எடுத்த ALC க்கு நன்றி கூறுவோம். ALC தலையிட்டின் பெயரில் சம்பள பட்டுவாட 22 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று முடிவான பின் நமது வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கபட்டது. இவ்வளவு பிரச்சனை நாம் செய்தது அறிந்து அங்கரிக்கபட்ட சங்கம் BSNLEU பெயருக்கு ஒரு ஆர்பாட்டம் நடத்தி 21 தேதி நடத்தி தங்கள் உருப்பினரை தக்க வைக்க பெரும்பாடு பட்டனர். ஆனால் நமது பங்காளி எப்ப பாரு மாலை நேர தர்ணா,இரவு நேர ஆர்ப்பாடம், இரண்டு சங்கமும் இணைந்த உண்னாவிரதம் (வேறும் 40 பேர் வைத்துக்கொண்டு) பெருக்கு சங்கம் நடத்தி பெருக்கு போராட்டம் நடத்தி தொழிலாளர்களை ஏமாற்றதிர்கள். பாவம் முன்பே பல முனைகளில் ஏமாற்றபட்டு இருக்கிறான். சங்களும் ஏமாற்றினால்...அசிங்கமாய் இருக்கிறது.5.30 மணிக்கு மேல் யாருமே இல்லாத அலுவலகத்தில் யாரை எதிர்த்து போராட்டம் அட து...
இப்போழதாவது புரிகிறத பலகுமார...இந்த
ராத்திரி நேரத்தில்
பூஜையில் ரகசிய தரிசன ஆடையில் ...

Sunday, 19 March 2017Image may contain: 1 person, outdoor

நான்மாடக்கூடலில்….
நாற்பெரும் விழா…
மார்ச் – 23 – மதுரை
காலை 10 மணி 
மனமகிழ் மன்றம் – தல்லாகுளம்
மதுரை – காரைக்குடி
NFTE மாவட்டச்சங்கங்களின்
இணைந்த மாவட்டச்செயற்குழு
------------------------------------------------------------------------
மாலை 03.00 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகம்
NFTCL
ஒப்பந்தத் தொழிலாளர் சிறப்புக்கூட்டம்
-----------------------------------------------------------------------
மாலை 05.00 மணி
மாவீரன் பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு
------------------------------------------------------------------------
மாலை 06.00 மணி
3வது ஊதியக்குழு நமது கோரிக்கைகள் கருத்தரங்கம்..
-----------------------------------------------------------------------
தோழர்களே… வாரீர்….
அன்புடன் அழைக்கும்...
NFTE – NFTCL
மதுரை மற்றும் காரைக்குடி
மாவட்டச்சங்கங்கள்

                                              குறைந்த பட்ச ஊதியம்...ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது சென்னையில் 07/04/2016 அன்று நானும் தோழர் M .சேகரும் , நமது சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஒரு court CASE விவரம் பற்றி அறிய சென்னை சென்றோம் .அப்பொழுது நமது பொது செயலர் தோழர் சி.கே மதிவாணன் அவர்களிடம் சென்னை வந்து கொண்டிருக்கிறோன் நிங்கள் வந்தால் குறைந்த பட்ச ஊதியம் பற்றி Advocate அவர்களிடம் பேசி விடலாம் என்று கூறினோன்.அவரும் வந்துவிட்டார்.நமது Advocate தோழர் .தேவராஜன் யிடம் மூவரும் குறைந்த பட்ச ஊதியம் பற்றி பேசினோம் . குறைந்தபட்ச ஊதியம் ஐந்து வருடததிற்கு ஒருமுறை திருத்தி அமைக்கபட வேண்டும் ஆனால் 2008 - யில் மாற்றியமைத்த ஊதிய 2013 ஆம் ஆண்டு திருத்தம் செய்ய வேண்டும் ஆனால் 2016 வரை திருத்தபடவில்லை என்றோம்.வழக்கறிஞர் அவர்கள், தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் முறையிடுவோம் பதில் கூறினால் பார்ப்போம் இல்லையென்றால் கோர்ட் மூலம் அனுப்பிய கடிதத்தை வைத்து Case போடலாம் என்று சொன்னர் .அன்றைக்கு அனுப்பிய நகல் இதுதான். இன்றைக்கு குறைந்தபட்ச ஊதியம் மாற்றி அமைக்க உத்தரவுகள் வெளியாகிவுள்ளன. இதனை அன்றே யோசித்தோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். நமக்கு வாய்த்த சட்ட ஆலோசகர் அப்படி ,ஒரு கொடுகெட்டகெட்ட ஆலோசகர் பற்றி பிறகு பார்க்கலாம்.No automatic alt text available.
வெளியே போராடு…
உலகமே புகழ்ந்து போற்றிப்பாடிடும்..
உச்சியில் பொதிந்து மின்னும் கல்லிடம்…
உனக்குத் தேவையில்லை பொறாமை…
நீ… கண்ணுக்குத் தெரியாத அடிக்கல்லாக இரு..
உயர்ந்து பரந்து விரிந்த கட்டிடம்…
உன் மார்பினில் எழும்பி நிற்கட்டும்…
துன்பம் சுமப்பதிலேதான் உண்மை இன்பம்…
இதயத்திலே மென்மையைப் போற்று…
வேளை வந்தால் முரட்டுத்தனம் காட்டு…
அநீதியைக் கண்டால் சீறு…
நீதிக்கு சிரம் தாழ்த்து…
உள்ளத்தில் நேசம் கொள்…
வெளியே போராடு…
- பகத்சிங்கின் தோழர். ராம்சரண்தாஸ் எழுதிய
- கனவு தேசம் என்ற கவிதைத்தொகுப்பிற்கு
- பகத்சிங் சிறையில் இருந்தே எழுதிய
- முன்னுரையிலிருந்து…

Thursday, 16 March 2017

வரலாறு TMTCLU அழிந்த அழிக்கப்பட்ட வரலாறு!!!
திருச்சி மாவட்டத்தில் NFTE -TMTCLU  ஒப்பந்த தொழிலாளர்கள் மாநாடு cuddalore இருந்து ஒரு பேருந்து சுமார் 60 பேர் இருக்கும் ஒரே ஆடல் பாடலோடு சந்தோஷம். இலாகாவில் புதிது நான் .   திருச்சியை நெருங்கியது பேருந்து தெருவெல்லாம் விழா கோலம் எங்குபார்த்தாலும் கொடியும் தோரணமும் NFTE -TMTCLU  பதாகைகள் மெய் சிலிர்த்து போனேன் இந்த வழக்கம் திருச்சி மாவட்ட தோழர்களுக்கு அன்றிலை இன்றுவரை உண்டு  . அருமையான கூட்டம் எங்கு பார்த்தாலும் நமது தொழிலாளர்கள்.படிப்பறிவு வாரியாக  அனைவரையும் ஒன்றிணைக்கும் பந்தல்கள் ,சார்பாளர்கள் பட்டியல் என்று ஒரே கலவரம் சாப்பாட்டிற்கு தோள்மேல தோள்மேல என்று தவிப்பிடித்து வாங்கிய சாப்பாடு அவ்வளவு கும்பல் அன்றைய நிலையில் BSNLEU சங்கத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை . இவ்வளவு கூட்டமும் NFTE யை நம்பி வந்த கூட்டம்  என்று ஒரு பேரணி நடந்தது திருச்சி மாவட்டமே  நீலைகுலைந்தது . அதில் உணர்ச்சிவசப்பட்டு அவ்வளவு வேலை செய்தேன் .
ஆனால்  அந்த கூட்டம் எங்கே ஏன் திசை மாறியது ? தெரியுமா .....   திசை மாறிய பயணத்தை சொன்னால் அசிங்கம் . .....

Wednesday, 15 March 2017


TMTCLU விற்கு தலைவர்களும் இல்லை தொண்டர்களும் இல்லை ...NFTCL மட்டுமே ....ஒப்பந்த தொழிலார்களை காப்பாற்றும்...நிறைய தலைவர்களை பெயர்கள் நோட்டீஸில் போட்டிருந்தது,ஆனால் மூவர் அணி என்பது அறிந்தோம் . 100 கணக்கில் ஒப்பந்த தோழர்கள் திரளுவார்கள் என்றனர் அதுவும் இல்லை கடைசியில் GM அலுவலக வளாகத்தில் என்று இருந்தது அது GM அலுவலகமா ? எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள். எல்லாம் ஏமாற்று வேலை. எல்லா தலைவர்களும் உங்களை போல் இருக்க மாட்டார்கள். எல்லாருக்கும் தெரியும் NFTE -க்கு  NFTCL தான் பொருத்தம் என்று .ஜெகத்தை காண்பிக்க புறப்பட்ட தோழர் முதலில் அவர் மாவட்டதில் எவ்வளவு உறுப்பினர் என்று சொல்லமுடியிமா ?   
Tuesday, 14 March 2017


NFTCL -தேசிய தொலை தொடர்பு ஒப்பந்த

 தொழிலாளர் சம்மேளனம் உருவானதேன் ?.....


அருமை தோழர் ! தோழியர்களே!!!

அன்று முதல் இன்றுவரை தோழர் ஜெகனுக்கு 

பின் ...TMTCLU சங்கத்திற்கு

 என்று இருந்த மாவட்டங்கள் ஐந்து 

அதாகப்பட்டது தஞ்சாவூர்,கும்பகோணம், 

ஈரோடு ,காரைக்குடி மற்றும் கடலூர் 

வேறேங்கும் கிளைகள் இல்லை என்று 

சொல்வதை போல் வேறேங்கும் மாவட்டங்கள் 

இல்லை .ஆனால் இந்த 

ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை துவக்கி 

ஒப்பந்த தொழிலாளகளுக்கு (NFTE ) 

நாம் போராட வேண்டும் என்று சொன்ன 

தலைவன்தான் தோழர் .ஜெகன். 

அன்றைய CASUAL LABOUR ஆகட்டும் இன்றைய 

CONTRACT LABOUR ஆகட்டும்

 தொழிலாளி பிரச்சனையில் கடைசிவரை 

போராடிய  தலைவன் தோழர் .ஜெகன்....

1)  14 வருடம் வனவாசம் என்பது போல் TMTCLU பதாகையை தூக்கிப்பிடித்த ஒரே மாவட்ட செயலர் இந்த சங்க பெயரை LABOUR COURT தொடங்கி HIGH COURT வரை சென்று போராடியவன். போராட்டம் பற்றி சொன்னால் ....


2) NFTCL என்ற ஒப்பந்த தொழிலாளர் சங்கம் துவங்கியதற்கு முன் இந்த தமிழ் மாநில சங்கம் -TMTCLU சங்கத்திற்கு கொடுத்த மரியாதையை பற்றி ...


3) உறுப்பினர் அட்டை என்ற பெயரில் TMTCLU சங்கத்தில் ....


4) இன்று வரிந்துகட்டி கொண்டு  ஒப்பந்த தொழிலாளர் உரிமைக்காக போராட துடிக்கும் தற்பொழுதிய மாநில தலைவர்தான் புதுவை TMTCLU மாவட்ட செயலர் என்ன செய்தார் எத்தனை பேரை TMTCLU  சங்கத்திற்கு உறுப்பினர் ஆக்கினார் .புதுவையில் சங்கம் உண்ட?

 5) போனஸ் நிரந்தர தொழிலாளி பெறாத காலத்தில் TMTCLU பதாகையோடு பெற்று தந்த Cuddalore  மாவட்ட சங்க நோட்டீசியை NFTE  நோட்டீஸ் போர்டில் இருந்து கிழித்தவன் யார் ?


5)  6000 தொழிலாளர்களை ஒன்றிணைத்து TRICHY யில் மாநாடு நடத்தி இன்று பெயர் சொல்லமுடியாத அளவுக்கு உறுப்பினர் குறைய காரணம் ?


6) கும்பகோணம்  கோபாலு துடிக்கிறாராய் LIMITED TENDER என்ற பெயரில் கும்பகோணத்தில் நடந்தது தெரியாத என்ன ...?


7) என்னமோ துடிக்கிரிகங்க BSNLEU தோழர்களை வென்று எடுக்க துப்புயில்ல,போட்டிக்காக நடத்துவது சங்கமல்ல, தொழிலாளிக்கு  ஏதாவது நல்லது செய்ய யோசிப்போம் .....நிறைய பேசலாம் சிரிய இடைவேளைக்கு பின் .....


Thursday, 9 March 2017

ஈரோடு வீச்சு அருமை 

"காரைக்குடி இணையதளத்தின்எதுகை மோனை எழுத்து முறைபல தோழர்களைவசீகரித்துள்ளது.
மாரியின் எழுத்துமுறைவீச்சாக சென்றூள்ளது."
இந்த வரிகள் வேலூர் மாநில மாநாட்டுசெயல்பாட்டு அறிக்கையில் உள்ளது.
வேலூருக்கு முன்புவசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்வீச்சாக இருந்த எழுத்துக்கள்அமைப்பு நிலைக்குஉட்பட்டவையாகத் தெரிந்துபாராட்டப்பட்டதா?
வேலூருக்குப் பின்புவசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்  வீச்சாக இருக்கும் எழுத்துக்கள்அமைப்பு நிலைக்கு மாறுபட்டவையாகத் தெரிகிறதா?
மாறியது அமைப்பு விதிகளா?மனித மனங்களா?
வீச்சு சாதகமாக இருந்தால் வசீகரிக்கும்.
வீச்சு பாதகமாக இருந்தால் கரிக்குமோ?
நிலை மாறும் உலகில் எல்லாமேநிரந்தரம் என்ற கனவில் வாழக் கூடாது.

Monday, 6 March 2017

NFTCL

தேசியத் தொலைத்தொடர்புஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம்

காரைக்குடி மாவட்டக்கிளை

மாவட்டச்செயற்குழு

08/03/2017 – மாலை 03.00 மணி

கண்ணதாசன் மணிமண்டபம் – காரைக்குடி

தலைமை 

 தோழர்.S.முருகன்

NFTCL மாவட்டத்தலைவர்

வரவேற்புரை 

 தோழர்.மாரிமுத்து

NFTCL மாநில உதவிச்செயலர்

துவக்கவுரை

 வெ.மாரி

NFTCL மாநில செயல்தலைவர்


சிறப்புரை
 
 தோழர்.S.ஆனந்தன்

NFTCL மாநிலச்செயலர்

தோழர்.PL.இராமச்சந்திரன் – AITUC

நன்றியுரை  

தோழர்.வீரசேகர்
 
NFTCL மாவட்டப்பொருளர்

ஆய்படு பொருள்

  • மாநில மாநாடு சிறக்கச்செய்த தோழர்களுக்கு பாராட்டு
  • ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினைகள்
  • மார்ச் 23 மதுரை NFTCL பெருவிழா
  • சமவேலைக்கு சம ஊதியம் கையெழுத்து இயக்கம்
  • சென்னைப்பேரணி
  • மற்றும் பிற

தோழர்களே… வாரீர்வாரீர்

அன்புடன் அழைக்கும்

B.முருகன்

NFTCL மாவட்டச்செயலர்
காலணியைக் கையிலேந்து
மீத்தேன் ஆழ்துளைக்கிணற்றை
மக்கள்  செருப்பால் அடிக்கும் காட்சி...

செருப்பால் அடிப்பேன் 
என்று சொல்வது
தமிழர்களின் உச்சக்கட்ட 
கோபத்தின் வெளிப்பாடு

அந்த வார்த்தைகளை
உணர்ச்சிப்பூர்வமாக உக்கிரமாக
நெடுவாசலில் 
நாம் நேரடியாகக் கண்டோம்

04/03/2017 அன்று 
அக்கப்போர் வாசல் 
செல்வதைத் தவிர்த்து விட்டு 
அறப்போர் நடக்கும் 
நெடுவாசல் நோக்கி 
காரைக்குடித் தோழர்கள் பயணித்தனர்.

நெடுவாசல் நெடுக
இயற்கை என்னும் 
இளைய கன்னி சிரிக்கிறாள்

தென்னை… வாழை… கரும்பு… பருப்பு என
பசுமை என்னும் 
அன்புத்தாய் பரவசம் தருகிறாள்

பாவிகள் விடுவார்களா
நீரோடும் பூமியில் 
நெருப்பெரிய விட்டார்கள்..

கண்ணைக்கெடுத்து சித்திரம் வரைகிறார்கள்
கருவழித்து தலைமுறை காக்கிறார்கள்
உருவழித்து உடைகள் தருகிறார்கள்
நீரை அழித்து நெருப்பைத் தருகிறார்கள்

எரிவாயுத் தேவைக்கு 
எத்தனையோ வழி இருக்க
எரிவாயு மேடைக்கு 
மக்களை இட்டுச்செல்கிறார்கள்

எரியப்போகும் கொள்ளிவாய்க்கு எதிராக
மக்கள் துள்ளி எழுந்துவிட்டனர்

நெருப்புக்கு எதிராக மக்கள்
நெருப்பாய் கொதித்து விட்டனர்

முதியவர்கள்… இளையவர்கள்...மாணவர்கள்
ஆண்கள்...பெண்கள்...படித்தவர்கள்.. பாமரர்கள்
உழைப்பவர்கள்… உணர்வு கொண்டவர்கள் என..
நெடுவாசல் நிறைந்திருக்கிறது….
நெஞ்சம் நிமிர்ந்து நிற்கிறது

சனியனே… ஒழிந்து போ” என
தாய்மார்கள் செருப்பைக் கையிலெடுத்து
மீத்தேன் ஆழ்துளைக்கிணற்றை
ஆவேசமாக அடித்த காட்சி

முறத்தால் புலியடித்த
முன்னோரின் நினைவைத் தந்தது

தமிழன் தலை சாய்ந்து விட்டான்
உணர்வற்று ஓய்ந்து விட்டான்
என்றொரு ஏக்கம் 
எப்போதும் மனதில் உண்டு..


இதோ ஏக்கம் தீர்ந்தது
ஜனவரியில்… கடலலை திரண்டது..
பிப்ரவரியில் கழனிவாசல் நிமிர்ந்தது

வறட்சி ஒழிந்தது
திரட்சி துவங்கியது
அதோ… புரட்சி தெரிகிறது