செவ்வாய், 22 அக்டோபர், 2019


RLC அவர்களின் தலையீடு மிகுந்த மகிழ்ச்சியை ஊழியர்கள் மத்தியில் நிர்வாகத்திலும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

மூன்று மாத சம்பளம் தீபாவளிக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் ஆட்குறைப்பு பிரச்சினையைப் பொருத்த வரையில் யாரையும் வீட்டுக்கு அனுப்ப சட்டரீதியான முகாந்திரம் இல்லை என்பதை வலியுறுத்தியும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனை தீர்வுக்கு கொண்டுவர கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து அதை முடிவு செய்ய கூடிய வல்லமை பொருந்திய அதிகாரி நேரடியாக பேச்சுவார்த்தைக்கு அடுத்த கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொழிலாளர் துறை மண்டல ஆணையர் மதிப்பிற்குரிய அண்ணாதுரை அவர்கள் உத்தரவிட்டார்.இதனை ஏற்றுக் கொண்ட BSNL நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு முறையாக இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை பற்றி அறிவிப்பதாக வும் அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதை உறுதி அளித்தனர்.ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனையை அறிந்த தொழிலாளர் துறை மண்டல அதிகாரி அண்ணாதுரை அவர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உடனடியான ஏற்பாடுகளை செய்து, நமது அலுவலகத்திற்கு வந்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து ஒரு நல்ல தீர்வினை எட்ட செய்த Regional Labour Commissioner அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நமது மாநில சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டுகிறோம் . தொழிலாளர்கள் 9 மாத காலமாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் உணர்வினை எடுத்துரைத்த அதிகாரியை பார்க்கையில் இவர் அதிகாரியா ? இல்லை தொழிலாளி வர்கத்தின் போர்வாள் என்று நினைக்கத் தோன்றியது. RLC அவர்களின் தலையீடு மிகுந்த மகிழ்ச்சியை ஊழியர்கள் மத்தியில் நிர்வாகத்திலும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.



Image may contain: 1 person, sitting and indoor

Image may contain: one or more people, people sitting, basketball court, living room and indoor


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக