சனி, 5 அக்டோபர், 2019


நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நமது சங்க நிர்வாகிகளும் அதிகாரிகளும் கலந்துகொண்டு கருத்துப் பரிமாற்றத்தில் விளைவாக ஒருமனதாக கையெழுத்திட்ட உடன்படிக்கை இந்த அறிக்கையில் மதிப்பிற்குரிய தொழிலாளர் நலத்துறை ஆணையர் அவர்கள் இந்த வழக்கை 21ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் அதுவரையில் எந்த ஒரு ஒப்பந்த தொழிலாளியும் பணியில் இருந்து நீக்கக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட சென்னை தொலைபேசி அதிகாரிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து அனைத்து மட்டங்களிலும் அறிவிப்போம் என்று உறுதி கூறினார்.வரும் 21 ஆம் தேதி அன்று சென்னை தொலைபேசி மாநிலத்தில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில் தமிழகம் மற்றும் சென்னை டெண்டர் எடுத்துள்ள அனைத்து ஒப்பந்ததாரர்கள், தொழிற்சங்க வாதிகளும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொழிலாளர் துறை மண்டல ஆணையர் முன்னிலையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆகவே மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒப்பந்ததாரர் பெயர், விலாசம் மற்றும் அவர் எந்தப் பணிக்காக டெண்டர் எடுத்துள்ளார் எத்தனை பேர்கள் அவரிடம் வேலை செய்கிறார்கள் என்ற விவரங்களை உடனடியாக மாநில சங்கத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


No photo description available..





No photo description available.
No photo description available.
No photo description available.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக