சனி, 5 அக்டோபர், 2019

சாதிவெறி கொண்ட தமிழ்நாடு BSNLEU சங்கத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்:
தேசப் பிதாவின் 150 வது பிறந்தநாளான 02-10-19 அன்று அண்ணா சாலை வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு தொழிலாளர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுமுறை நாளிலும் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். NFTE-BSNL, TEPU, SEWA- BSNL, NFTCL சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சி.கே.எம். ; பி.என்.பெருமாள், சுப்பராயன், விஜயகுமார், ஆனந்தன், இளங்கோவன், லோகநாதன், பலராமன், பாபு, முருகையன், நாகராஜன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முன்னதாக தோழர்கள் விஜயகுமார், ஆனந்தன் இணைந்து காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Image may contain: 3 people, including PN Perumal, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்...