தோழர்!! தோழியர் !!!கவனத்திற்கு ...
நமது பி.எஸ்.என்.எல் துறையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் நமது ஒப்பந்த ஊழியர்களை குறைக்கச் சொல்லி கார்ப்ரேட் அலுவலகத்திலிருந்து ஒரு உத்தரவு அனைத்து மட்டங்களையும் சென்றடைந்து அதற்குண்டான வேலையில் முழுமையாக மாவட்ட மாநில அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டிருப்பது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.ஒப்பந்த முறையில் பணியாற்றி கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தராமல், ஒப்பந்ததாரர் எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் , ஒப்பந்தத் தொழிலாளர்களை நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லும் அதிகாரம் எந்த அதிகாரிக்கும் இல்லை. ஆகவே எந்த ஊரு அதிகாரியும் அதிகாரிகள் நாளை முதல் பணிக்கு வர வேண்டாம் என்று கூறினால் அதை ஒப்பந்ததாரர் மூலம் தெரிவிக்கச் சொல்லுங்கள் சேரவேண்டிய 6 மாத சம்பளத்தை வழங்காத பட்சத்தில் நாங்கள் வேலையை விட்டு போக முடியாது. முறையாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தையும் EPF செலுத்திய ஆவணங்களை முறைப்படி கொடுக்காத வரையில் நாங்கள் பணியை விட்டு நீக்க முடியாது என்பதை ஆணித்தரமாக அதிகாரிகளை எதிர்த்து சொல்லுங்கள். கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்க துப்பில்லாத நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கையில் எடுப்பது சட்டபூர்வமாக தவறான செயல் என்பதை உணர்த்துவதற்காக நமது மாநில சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது தொழிலாளர் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது அது அதன் தீர்ப்பு வரும் வரை தோழர்கள் அனைவரும் உறுதியுடன் போராடுவோம்!!! வெற்றி பெறுவோம் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக