எதார்த்தமான பரிந்துரையை எடுத்துரைப்போம் !!!
ஒப்பந்த தொழிலாளர்கள் என்றாலே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் மூலம்தான் நியமிக்கப்பட முடியும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.ஆனாலும் எந்த விதத்திலும் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக இவர்களின் பங்களிப்பு என்பது இம்மியளவு கூட கிடையாது.ஆனாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிகளாக இயங்கி வரும் இந்த ஒப்பந்ததாரர்கள் நமது நிறுவனத்தின் பல கோடிகளை தன்வயப்படுத்தி வியாபாரங்களை செய்துகொண்டு வருகின்றனர்.இவர்களால் தொழிலாளிக்கும் நஷ்டம்தான் நிறுவனத்துக்கும் நஷ்டம்தான்.பல கோடிகளை வருமானமாக நமது தொழிலாளியின் உழைப்பையும் நிறுவனத்தின் செல்வங்களையும் அபகரித்துக் கொண்டு இருக்கும் இந்த ஒப்பந்ததாரர் முறையை தான் நாம் ஒழிக்க வேண்டுமே தவிர அதை தவிர்த்து ஒப்பந்த தொழிலாளர்களை இத்தனை சதவீதம் அத்தனை சதவீதம் என்று குறைப்பது சட்டப்படியான குற்றமே அதுமட்டுமல்லாமல் நமது நிர்வாக முன்னேற்றத்துக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் இந்த தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஒப்பந்த தொழிலாளர் குறைப்பது என்பது மனிதாபிமானமற்ற செயலாகும் இதனை நமது மாநில சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.இதுகுறித்து அகில இந்திய மட்ட அளவில் நமது மாநில சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருக்கிறது நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்.இதற்கு எடுத்துக்காட்டாக சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருந்து வந்த உத்தரவு "அந்தந்த நிறுவனங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வைத்துக்கொள்ளலாம் ஒப்பந்ததாரர் தேவையில்லை" என்ற நீதிமன்ற உத்தரவு இருப்பதையே சுட்டிக் காட்டியுள்ளோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக