மதிப்பிற்குரிய சென்னை CGM அவர்களும் மற்றும் அதிகாரிகளும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினையில் மிகுந்த ஆர்வத்துடனும் ,அக்கறையுடனும் அவர்களின் குறைகளை கேட்டு அதற்கு உண்டான நடைமுறை சிக்கல்களை சரி செய்வோம் என்று உறுதி அளித்தனர். வட சென்னை அடையார் ,திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் படும் வேதனையை நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தோம் .பணி நேரத்தை குறைக்கவும் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை எதிர்த்தும் நமது பொதுச்செயலாளர் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் சரி செய்து மாநிலம் முழுவதும் ஒரே டெண்டர் முறையை அமல்படுத்துவது எனவும் மற்றும் Cable Jointer பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு திறனுக்கேற்ற ஊதியத்தை வழங்கிட விரைவில் உத்தரவு வெளியாகும் என்பதையும் உறுதியளித்தது
மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.சரியான நேரத்தில் சரியான ஏற்பாட்டினை செய்த தலைமையை மாநில சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டுகிறோம்.


மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.சரியான நேரத்தில் சரியான ஏற்பாட்டினை செய்த தலைமையை மாநில சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டுகிறோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக