ஞாயிறு, 8 ஜூலை, 2018

தோழர்களே!!! தோழியர்களே!!



அம்பாசமுத்திரத்தில் 24/06/2018மாநில துணை தலைவர் தோழர்.கணபதிராமன் பணி ஒய்வு பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.தோழர்.பாபநாசம் தலைமைதாங்க,நொல்லை மாவட்ட செயலர் தோழர். கணேசன் வரவோற்று,தோழர் சுப்பராயன் துவக்கவுரை நிகழ்திய கூட்டம்,தோழர்.மாலிஅசோக்ராஜன் என்று நீண்ட பட்டியல் நமது பொது செயலர்.தோழர்.C.K.மதிவாணன் சிறப்புரையோடு நிறைவுபெற்றது.
மாலை 2.30 மணியில்l இருந்து செயற்குழ துவங்கியது. நல்ல விஷயம் காலையில் இருந்த கூட்டம் செயற்குழவில் இருந்ததுதான். அருமையான விவாதங்கள் நல்ல வழிகாட்டல் தோழர்.மதி மற்றும் மாலியிடமிருந்து. தோழர்கள் பாபு மற்றும் மாரி தலைமையில் கிழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவோற்றபட்டன(1) மாத சம்பளம் பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள் வழங்கபடாவிட்டால் ,தனிநபர் Claim petition தொழிலாளர் நல ஆணையரிடம் அளிப்பது.
(2) அனைத்து தௌழிலாளிக்கும் ESI பொருந்த வேண்டும் என்று Dy. Director -புது டெல்லி யிடம் மனு அளிப்பது.
(3) போனஸ் 7000/- ருபாய் வழங்க நிர்வாகத்திடமுமம், ஒப்பந்தகாரரை வலியுறுத்துவது.
(4) ஆட்குரைப்பு என்பதை அறவே நிறுத்த வேண்டும். சிக்கன நடவடிக்கை நிறைய விஷியங்களில் செய்யலாம். 10 வருடம் இந்த நிறவனத்திற்கு பாடுபட்டவனை வீட்டுக்கனுப்புவதை தவிர்த்து.
(5) அடையாள அட்டை அனைவருக்கும் வழங்க வலியுறுத்துவது.
(6) 2008 முதல் 2010 ஆண்டிற்கான நிலுவை தொகையை உடனே வழங்க வலியுறுத்துவது.
(8) திரனுக்கோற்ற ஊதியம் உத்தரவாய் மட்டுமே உள்ளது.ஒரு சில இடங்களில் மட்டுமே.அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முறையிடுவது
(7) எந்தவித சரியான காரணம் சுட்டிகாட்டபடாமல் வேலை விட்டு நீக்குவது
(8) எந்தவித தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்தாத ஒப்பந்ததாரர்களின் Licence யை ரத்து செய் என்று மல்லி Security services, Balaji security services, Alert Security. என்ற முதல் மூவரை வழக்கில் ஈடுபடுத்துவது.அதற்கான போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகர்களில் வெள்ளையனே வெளியோறு போராட்ட நாளான 09/08/2018 அன்று ஒப்பந்தம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் ஒப்ந்தமே வெளியோறு எள்றும்
(9) இவைகளில் தீர்வு வாராவிட்டால் தீர்வு காண திருச்சியில் தொடர்ச்சியாக ஒப்பந்த தொழிலாளர்கள் நலனில் எதிர்மரை போக்கை கடைபிடிக்கும் மற்றும் 280 ஒப்பந்த தொழிலாளிகளை வீட்டுக்கனுப்ப துடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து 21/08/2018 செவ்வாய்க்கிழமை மாநில தழவிய ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் திருச்சியில் நடத்திட இச்செயற்குழவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் புதிதல்ல கோரிக்கைகளும் புதிதல்ல
போராட போகும் நமக்கும் இது புதிதல்ல. தயராவோம் புறப்படு தோழா புதியவை காண....புதுமை படைக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக