Saturday, 29 November 2014

கோவையில் நடைபெற்ற NFPTE வைரவிழா காட்சிகள்
ஆயிரம் வெடிகள் வெடிக்க வைரவிழா களை கட்டியது
No comments:

Thursday, 27 November 2014

(அரவணைப்பு)இவர்தான் NFTE பாரமபரியதிற்கு சொந்தக்காரர் தஞ்சாவூர் மாவட்ட செயலரின் அனுகுமுறை!!!.
நமது JAC அறை கூவலை ஏற்று 27-11-2014 அன்று நடைபெற்றஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெற செய்த அனைத்து தோழர் மற்றும் தோழியர்களுக்கும் நமதுநெஞ்சார்ந்த  நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்துதோழர்களுக்கும் போராட்டக்குழு சார்பாகவாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம்.
பங்கேற்காத தோழர்கள்  2015 பிப்ரவரியில் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்
          விடுபட்ட தோழர்களுக்கு தொழிற்சங்க உணர்வு ஊட்டிடஅனைத்து சங்கங்களும் பாடுபட உறுதி ஏற்போம்.


                            நன்றி!  நன்றி!! நன்றி!!!
--------------------------------------------------------------------
  கடலூர் மாவட்ட செயலரின் அனுகுமுறை!!!
"தான்" என்ற ஆணவத்தின் ஊட்சகட்டம்^^^^ 
 *அன்புடன் அழைக்கின்றோம்!!!!!

*கடுமையாக கண்டிக்கிறது.!!!!!


இரண்டு சொல்லுக்கும் பொருள் உண்டு

வீரவாழ்த்துக்கள்!
              JAC அறிவித்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில்
 80 சதவீததிற்குமேல் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய
 தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்
 மாவட்ட சங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கிளைச்செயலர்களுக்கும்,                   JACதோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிளைகளில் 12 கிளைத் தோழர்கள்95 சதவீதம் பேர்  கலந்துகொண்டனர்.
கடலூர் வெளிப்பகுதி, விழுப்புரம், திட்டக்குடி கிளையிலிருந்து சிலர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
மாவட்டச்செயலர் உண்ணாவிரத போராட்டம்  அறிவித்த (19-11-2014) அதே நாளில் கடலூரில் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் நடத்தி அதில் வீரமாக கர்ஜித்த ஆனந்தன், மஞ்சினி, மற்றும் அக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தோழர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாதது கண்டனத்துக்குரியது.
இச்செயலை மாவட்டசங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

Thursday, 20 November 2014                         NFPTE (1954 - 2014)


சம்மேளன வைர விழா... சிறப்பு கூட்டம் 

கடலூர் தொலைபேசி நிலையத்தில் 19-11-14 

அன்று  நடைபெற்ற 

NFPTE வைர விழா கொண்டாட்டத்தில் 1968 

போராட்ட தளபதி 

மூத்த தோழர் கனகசொரூபன், தோழர் காதர் 

 ஆகியோர் மூத்த 

தோழர் ரகு அவர்களால் கௌரவிக்கப் பட்டனர்.

மாநில பொருளாளர் அசோக்ராஜன்,

மாநிலதுணை செயலாளர் சுப்பராயன், மாநில 

அமைப்பு செயலாளர் அன்பழகன் மற்றும் 

NFTCL மாநில செயலாளர் ஆனந்தன் ஆகியோர் 

கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

Friday, 7 November 2014


பெற்ற தாய் தந்தை, வீடு, சொந்தம், பந்தம் என அனைத்தையும் மறந்து மக்கள் நலனுக்காக விடிய விடிய டூட்டி பார்த்து, தூங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல், நடுரோட்டில் யாரும் அற்ற அனாதை போல படுத்து உறங்குகின்றனர் என் ஆருயிர் தோழர்கள், பார்க்கும் போதே கல்மனம் கொண்டவர்கள் கூட கரைந்துவிடுவார்கள்..!

ரசிய புரட்சி தினம் நவம்பர் - 7


னிதகுல வரலாற்றில் சிலர் சுகபோகமாக வாழ்வதற்கு ஏகபெரும்பான்மையினரின் உழைப்பைத் திருடியும், அபகரித்தும், அடக்குமுறை செலுத்தியும், அதிகாரம் செலுத்திய ”அடிமை சமுதாயம்” முதற் கொண்டு, உலகத்தின் கடைசி துரும்பில் இருந்து தாயின் கருப்பை வரை விலை பேசி மனித மாண்பு , பாசம், உணர்வு, நேர்மை என அனைத்தையும் அடித்து நொறுக்கும் இன்றைய முதலாளித்துவ சமுதாயம் வரையில், சுரண்டும் வர்க்கங்களே அதிகார பொறுப்பில் இருந்ததை முதன் முதலில் தகர்த்து அடிமைப்பட்டு கிடந்த மக்களை ஆட்சி அதிகார பீடத்தில் அமர வைத்த நாள் ரசிய புரட்சி தினம்.

அனைவருக்கும் புரட்சி தின நல்வாழ்த்துக்கள்!

Wednesday, 5 November 2014

தோழர். ஆர்.நல்லகண்ணு அவர்களின் 
89 வது பிறந்த நாள்
இன்று 89 வது பிறந்த நாள் காணும் தலைவர் ஆர். நல்ல கண்ணு அவர்கள், வேறுயாருமே சந்தித்திராத பல்வேறு அடகுமுறைகளை சந்தித்த தலைவர். கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்டக் காலத்தில், ஓராண்டிற்கு மேல் தலைமறைவு வாழ்க்கை. அதன் பின்னர் சிறை வாழ்க்கை.
இவர் கைது செய்யப்பட்ட விதம், நம்மை பெரிதும் அதிர்ச்சியுற வைக்கிறது. 1948 ஆம் ஆண்டில் நாங்குநேரி தாலுகா புலியூர் குறிச்சி என்னும் ஊரில், தலித் மக்களின் குடியிருப்பில், நள்ளிரவில் ஒன்றில், பொதுமக்களுக்குப் பேரச்சத்தை உருவாக்குமாறு காவல்துறையினரால், இவர் கைது செய்யப்பட்டார்.
அடர் தலைமுடியும், அடர்த்தியான மீசையையும் கொண்டர். கம்பீரமும், உயரமும் கொண்ட உடல் வாகு. இண்டர்மிடியட் படித்து முடித்திருந்தார். சகித்துக் கொள்ள இயலாத தாக்குதல் இவர் மீது ஏவப்பட்டது. கொடிய வெறி கொண்ட காவல்துறை இன்பெக்டரால், இவரது மீசை சிகரட் நெருப்பின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக பொசுக்கிக் கருக்கப்ட்டது. மிகவும் கொடுமையான சித்ரவதை.
நெல்லை சதிவழக்கு வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டûனையும், கைது செய்யும் போது வெடிகுண்டுகளை வைத்திருந்தார் என்பதற்காக மேலும் ஆறு ஆண்டுகள் தண்டணையும் இவருக்கு வழங்கப்பட்டது.
சிறை வாழ்க்கையில் ஒரு கைதி செய்ய வேண்டிய கட்டாயப் பணியாக, நூலகத்தில் இவருக்கு வேலை கொடுக்கப்பட்டு, அதனை விருப்பபூர்வமாக செய்திருக்கிறார்.தியாகி பாலு, தூக்கிலிடப்பட்ட போது, இவரும் அதே மதுரை சிறையில் கைதியாக இருந்திருக்கிறார்.
பாலுவின் சிறைக் கொட்டடிக்கு அருகில் தான், இவரது சிறைக் கொட்டடியும் அமைந்திருந்தது என்கிறார். அவர் தூக்கிலிடப்பட்ட முதல் இரவு முழுவதும் எங்களால் தூங்க முடியவில்லை. அதிகாலை தூக்கிலிட்ட போது, புரட்சி ஓங்குக என்ற முழக்கம் எங்களுக்கு கேட்டது. நாங்கள் அந்த முழக்கத்தை ஆமோதித்து வேதனைக் கண்ணீரோடு, ஆதரவு முழக்கம் எழுப்பினோம் என்று இப்பொழுதும் உணர்ச்சி பொங்க ஆர்.என்.கே அவர்கள் கூறுகிறார்கள்.
தண்டனைக் குறைக்கப்பட்டு இவர் 1956 ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

Tuesday, 4 November 2014

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,
ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,
" நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது
இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்
எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!!
தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.
இதைத் தான் கண்ணதாசனும் " நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை