சனி, 26 அக்டோபர், 2019

உற்சாகம் இல்லாத தீபாவளி ..No photo description available.
பிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகம் இந்த தீபாவளியை அவர்கள் வாழ்வில் கருப்பு தீபாவளியாக ஆகிவிட்டது.9 மாத காலமாக சம்பளம் தராவிட்டாலும் தங்கு தடையின்றி தங்களது பணிகளை செம்மையாக வருத்தத்தோடு செய்தாலும் நிறுவன வளர்ச்சியில் தங்கள் பங்கை செலுத்திக் கொண்டே தான் வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இதனைக் கண்டித்து நமது சங்கத்தின் மூலமாக பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் சலிக்காது செய்து கொண்டேதான் இருக்கிறோம். இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலைதான். இந்த சட்டப் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் தொழிலாளர் நலத்துறை துறை ஆணையரும்(CLC- புதுடெல்லி ) அவர்களை சந்தித்து புகார் மனு கொடுத்த நமது பொதுச்செயலாளரும் பல்வேறு வழிகளின் மூலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார் ,தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் (Dy.CLC)அவர்களிடம் புகார் கொடுத்த நமது மாநில சங்கம் என்ற நீண்ட பட்டியலில் . உதவியாக அந்த வழக்கை விசாரித்த நமது தொழிலாளர் நலத்துறை மண்டல ஆணையர் (RLC) அவர்கள் தலையீட்டின் பெயரால் தீபாவளிக்குள் மூன்று மாத சம்பளம் உடனடியாக பட்டுவாடா செய்யப்படும் என்பதை உறுதியாக நமது சங்கம் நம்பியிருந்தது. ஆனால் கருங்காலிகள் யாரோ கார்ப்பரேட் அலுவலகத்தில், ஒரு மாநிலத்திற்கு இதுபோன்று நீங்கள் செய்து விட்டால் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வழக்குகளை நீங்கள் சந்திக்க நேரிடும் ஆகையால் தமிழ்நாட்டிற்கும் சென்னைக்கு மட்டும் 3 மாத சம்பளப் பட்டுவாடா நடைபெற கூடாது என்று நடக்கவிருந்த சம்பள பட்டுவாடாவை நிறுத்தி வைத்ததாக தகவல்கள் கசிகின்றன. அதைப்பற்றி நமது மாநில சங்கம் எந்தவிதத்திலும் கவலையடைய போவதில்லை நமது முயற்சிகளை தொடர்ச்சியாக நம்பிக்கையோடு சந்திப்போம். நம்பிக்கை வீண்போகாது வருகின்ற 13 ஆம் தேதி அடுத்தகட்டமாக இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஒரு நல்ல முடிவு ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனையில் ஏற்படும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதற்கிடையில் நிரந்தர ஊழியர்களை VRS என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் திட்டம் தீட்டி அதற்குண்டான ஏற்பாடுகளை முழுவீச்சில் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.ஒப்பந்த ஊழியர்களை ஒருபுறம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அதே நிர்வாகம் தான் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பல திட்டங்களைத் தீட்டி, இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, Land Line இணைப்புகளை பராமரிக்க ஆள் இல்லை என்று கூறி இந்த நிறுவனத்தை முடக்கி தனியாருக்கு கைமாற்றி விட கச்சைகட்டி கொண்டிருக்கிறது என்பது தகவல். ஊழியர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்ய ,வேஷம் போடும் மோடி அரசாங்கம்,தனியார் நிறுவனங்களுக்கு BSNL தாரை வார்த்து அதன் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.VRS கொடுத்ததற்கு பின் அந்த காலியிடங்களுக்கு மாற்றாக ஒப்பந்த ஊழியர்களை வைத்து தான் இந்த நிறுவனத்தையே நடத்த வேண்டும் என்ற நிலை கூடிய விரைவில் நம் முன்னே நடக்கவிருக்கிறது .பொருத்தது பொருத்தம் பொங்கி எழ வேண்டிய இடத்தில் எழுவோம்.மனிதாபிமானத்தோடு நமது அதிகாரிகளும் ஊழியர்களும் அவர்களால் இயன்ற உதவிகளை அனைத்து அலுவலகங்களில் செய்திருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன.தந்த பொருள் சிறிதானாலும் தருகின்ற மனங்களை வாழ்த்துவோம்.என்னோடு பணிபுரியும் சக தொழிலாளியான, என் ஒப்பந்த தொழிலாளி தோழன் நாளை தீபாவளி கொண்டாடாமல் இருக்கக் கூடாது என்று கரிசனத்தோடு தங்களால் இயன்ற உதவிகளை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொண்டு
நாளை நமதே!!
எந்த நாளும் நமதே!!! மிகப்பெரிய வேதனையோடு போராடிக்கொண்டே இருக்கிறாய் என்றால் மிகப்பெரிய சாதனையை செய்யப்போகிறாய் என்று கூறுவார்கள் அதுபோல இன்றைய துக்கம் நாளை கண்டிப்பாக சந்தோசமாய் மாறும் ...நம்பிக்கையோடு பயணிப்போம் .
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநிலச்செயலாளர்
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்- தமிழ்நாடு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்...