சனி, 5 அக்டோபர், 2019

வாழும் வரை போராடு !!!
ஆம், நமது இலாகாவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் தராமல் நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நமது நிர்வாகம் நிலைகண்டு தோழர்கள் தங்கள் பணியில் சிறிதளவும் தொய்வின்றி நமது நிறுவனத்துக்காக தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்கிடையில் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பல்வேறு உத்தரவுகள், ஒப்பந்த ஊழியர்களை குறைக்க சொல்லி வந்த மயம் இருப்பது நாம் அறிந்ததே. பணிபுரியும் தொழிலாளிக்கு சம்பளமும் இல்லை அவனை வீட்டுக்கு அனுப்புவதும் ஞாயமில்லை வாதத்தை ஏற்க மறுத்து சம்பளம் கொடு ஆள விடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வருத்தத்துக்குரிய நிலையை நமது சங்கத்தின் சார்பாக மண்டல தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டோம். நிர்வாகத்தின் நியாயத்தை அதிகாரிகள் விளக்கினர்.நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மண்டல தொழிலாளர் துறை ஆணையர் -RLC , 8 மாத சம்பளத்தை வழங்கும் வரை அந்தத் தொழிலாளர்கள் பிரச்சினையில் நிர்வாகம் தலையிடுவது என்பது சட்டபூர்வமாக தவறு என்பதை உணர்த்தினார்.அதுமட்டுமல்லாமல் சம்பள பாக்கி தரும்வரை இன்றைய நிலை எப்படி இருக்கிறதோ, அதுவே தொடர வேண்டும்(Status -CO). வழக்கு விசாரணை இருக்கும்வரை ஒப்பந்த தொழிலாளர்கள் குறைப்பதோ அவர்கள் பணி நேரங்களை குறைப்பதோ பணி மாறுதல்கள் செய்வதோ கூடாது என்பதையும் வலியுறுத்தி உத்தரவிட்டார் .இந்த உத்தரவின் மூலம் இன்று 1 10 2019 முதல் பணி நீக்கம் செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது இந்த உத்தரவை அடுத்து மாநில நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நிறுத்தச் சொல்லி நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையாகவே சந்தோஷம் அளிக்கிறது.முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தற்சமயம் இந்த பிரச்சனையில் ஒரு நல்லதொரு முடிவை எட்ட செய்த மண்டல தொழிலாளர் நல ஆணையர் அவர்களுக்கும், மாநில நிர்வாகத்திற்கு நமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகத்தை அக்டோபர் 4ஆம் தேதியே பணிக்கு வாருங்கள் என்றழைக்க வைத்த பெருமை நமது சங்கத்தையே சாரும் என்றால் அது மிகையாகாது.தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவோம் சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்குவோம் தேவைப்பட்டால் அகில இந்திய முழுவதும் நிலவி வரும் இந்த பிரச்சனை குறித்து நமது சம்மேளனத்தின் சார்பாக வழக்குத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வலியுறுத்துவோம்.
தோழமையுடன்
S.ஆனந்தன் மாநிலச் செயலாளர்
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் -தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக