செவ்வாய், 3 செப்டம்பர், 2019

          தேசிய தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்  

                                               (பதிவு எண் -3550/ CNI - தமிழ்நாடு)

யார் வேலைக்கு வரவேண்டாம் என்று யார் சொல்வது ?

நமது உழைப்பில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் காண்ட்ராக்டர் சொல்வதா ? இல்லை நம்மிடம் உழைப்பை சுரண்டி ஆறு மாத காலமாக சம்பளத்தை தராத நிறுவனம் சொல்வதா ?.யாருக்கும் உரிமை இல்லை எதற்கும் அஞ்சத் தேவையில்லை .

தோழர்களே!!! தோழியர்களே!!!


நமது இலாக்கா நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயமே ஆதலால்தான் கடந்த ஆறு மாத காலமாக நமது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றாலும் நமது உழைப்பை இந்த நிறுவனத்துக்காக தொடர்ச்சியாக தந்து கொண்டிருக்கிறோம். குடிக்க கஞ்சி இல்லை கொடுக்க பால் இல்லை என்றாலும் வேதனையில் ஆறு மாதங்களுக்கு மேல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நமது ஒப்பந்த ஊழியர்கள் சொல்லொணாத் துயரத்தில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கச் சொல்லி கார்ப்ரேட் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கும் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு நன்றிகெட்ட நமது நிர்வாகம் ஆட்குறைப்பு என்ற பெயரில் அவர்களை வீட்டுக்கு அனுப்பும் எந்தவித செயலையும் நமது சங்கம் ஏற்காது. ஒருவேளை நமது நிர்வாகமோ, இல்லை ஒப்பந்ததாரர் நம்மை வேலைக்கு வர வேண்டாம் என்று சொன்னால் நமது தோழர்கள் கலங்க வேண்டிய அவசியமில்லை எங்களுடைய ஆறு மாத சம்பளத்தோடு இணைந்த EPF செலுத்தியதற்கான விவரங்களை எங்களிடம் தந்தால் மட்டுமே நாங்கள் வேலைக்கு வருவதா ? இல்லை வேலையைவிட்டு நிற்பதா ? என்பதை பற்றி யோசிக்க முடியும் .ஆகையால் எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் உரிமைகளும் பெற்றபின் தான் நாங்கள் இந்த அலுவலகத்தை விட்டுச் செல்வோம் என்று கூறி நமது தோழர்கள் தங்களது பணிகளை தொடருங்கள்
நாளை நமதே !!! நாளும் நமதே !!!
                      தோழமையுடன்
                                        S.ஆனந்தன் மாநிலச் செயலாளர் ,
                                        NFTCL -தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக