தொழிலாளர் கல்வி மையத்தின் மாநாடு தூத்துக்குடியில் நேற்று நிறைவு பெற்றது .இந்த மாநாட்டில் ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியான மனிதகுல மாமேதை காரல் மார்க்ஸ் கல்வி அறக்கட்டளை நீதி வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்காக ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நல்ல தலைமையின் கீழ் , நல்ல திசை வழியே நமது சங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மேன்மேலும் சுட்டிக்காட்டும் விதமாக இந்த நிகழ்வு நடந்தேறியது. ஏனென்றால் அன்று தானே புயல் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களின் சிரமத்துக்குள்ளாகி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.ஒப்பந்த ஊழியர்கள் தவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதது நமது தோழர் C .K. மதிவாணனின் தலைமை அன்றும் நிரந்தர ஊழியர்களிடம் வசூலித்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை அந்த பகுதிகளில் வாடிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பகிர்ந்தளித்து .அதே தலைமை தான் இன்றும் நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் சிக்கித்தவிக்கும் ஒப்பந்த ஊழியர்களின் வாரிசுகளின் படிப்பு செலவுக்காக உதவி இருக்கிறது. சந்தாவில் ஆரம்பித்து நன்கொடை ,வழக்கு நீதி என்று பல்வேறு நிதிகளுக்கு பெயர் சூட்டி ஒப்பந்த ஊழியர்களிடமிருந்து வசூலித்துத் கொண்டிருக்கும் பல்வேறு சங்கங்களுக்கு மத்தியில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிதியை கொடுத்து அவர்களின் துயர் துடைக்கும் ஒரே சங்கம் தான் நமது தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் .பெற்றவர் மகிழ்வை விட கொடுத்தவர் மகிழ்வே அதிகம் அவையில் அது அரங்கேறியது என்றால் அது மிகையாகாது.இந்த அறக்கட்டளை நிதியாக தந்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களையும், இந்த அறக்கட்டளையை நிறுவிய நமது பொதுச் செயலாளர் C.K.மதிவாணன் அவர்களுக்கும் இதற்கான நிதி வசூலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்பட்ட தோழர் எல் சுப்பராயன் அவர்களுக்கும் மற்றும் இந்த ஏற்பாட்டினை செய்த தூத்துக்குடி தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை NFTCL மாநில சங்கத்தின் சார்பாக உரித்தாக்குகிறோம்.மீண்டும் ஒரு முறை நமது தலைமை , நமக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது என்ற மகிழ்வோடு .
தோழமையுடன்
S.ஆனந்தன் மாநிலச் செயலாளர்
NFTCL-தமிழ்நாடு .

















தோழமையுடன்
S.ஆனந்தன் மாநிலச் செயலாளர்
NFTCL-தமிழ்நாடு .

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக