தொழிலாளர் கல்வி மையத்தின் மாநில மாநாடு மே மாதம் 4, 5 தேதிகளில் கனி பேலஸ்,மணி நகர், தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது .இந்த மாநாட்டினையொட்டி மனித குல மாணிக்கம் காரல்மார்க்ஸ் கல்வி அறக்கட்டளை(NFTCL) நிதி உதவி விழா நடைபெறவிருக்கிறது.இந்த விழாவில் வருவாய் மாவட்டங்களான ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒப்பந்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு உதவித்தொகை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.அதற்கு தகுதியான ஒப்பந்த தொழிலாளர்களை அந்தந்த மாவட்டங்களில் அறக்கட்டளையின் தோழர் சுப்பராயனிடம் தகவல் அளிக்குமாறு வேண்டுகிறேன் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்களான நமது மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில சங்க பொறுப்பாளர்கள் , அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் 5 ஆயிரம் ரூபாய் நிதி அளிப்பது என்று அம்பாசமுத்திரத்தில் நடந்த மாநில செயற்குழுவில் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்படி அனைத்து தோழர்களும் தோழர் சுப்பராயனிடம் ரூபாய் 5 ஆயிரத்தை உதவி நிதியாக அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக