தொழிலாளர் கல்வி மையம்/ தமிழ்நாடு-------------
இன்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1) மே 04/05 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு 302 பிரதிநிதிகளை அனுமதிப்பது. பிரதிநிதி கட்டணமாக ரூபாய் 300 நிர்ணயம் செய்வது.
2) மாநாட்டில் தமிழக வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன், தோழர் தியாகு, டாக்டர் ஜுவானந்தம் , நாவலாசிரியர் பொன்னீலன் உள்ளிட்டோரை சொற்பொழிவு நிகழ்த்த அழைப்பது.
3) நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் கோவை/ தூத்துக்குடி/கன்னியாகுமரி/ சிவகங்கை/ ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம் நடத்துவது. குறிப்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தோழர்.சி.கே.எம். தலைமையில் ஏப்ரல் முதல் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் H.வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்துவது.
4) சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது. இதற்கான வழக்கு நிதியை ஊழியரிடமிருந்து முனைப்புடன் திரட்டுவது.
5) புதியஅமைப்பு விதிகளை உருவாக்க மூத்த தோழர் இரா.பூபதிக்கு பொறுப்பு அளிப்பது. அந்த விதிகளை தூத்துக்குடி நகரில் நடைபெறும் மாநில மாநாட்டில் உறுதிசெய்து அமுல்படுத்துவது.
6) அனைத்து கிளைகளும் மார்ச் மாதம் முடிய சந்தா பகுதிப் பணத்தை மாநில மாநாட்டுக்கு முன்பாக தொழிலாளர் கல்வி மையத்தின் வங்கிக் கணக்கில் 25-04-19 க்குள் தவறாமல் செலுத்திட வேண்டும். செலுத்த தவறும் கிளைகள் மாநில மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும்.
தோழமை அன்புடன்
சி.கே.மதிவாணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக