இன்று(10-12-18) சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் விரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டம் தின் ரோஸ் இணைப்பக வளாகத்தில் நடைபெற்றது.170 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் ராமசாமி தலைமை ஏற்க தோழர் சி.கே.எம் ஆய்படு பொருளை விளக்கினார்.காலவரையற்ற வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது குறித்து விவாதம் நடந்தது. ஆறு தீர்மானங்கள் மூத்த தோழர் சபாபதி அவர்களால் முன்மொழியப்பட்டது. விரிவான விவாதங்களுக்கு பிறகு அவை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. நான்கு மாவட்டங்களில் தலா ஒரு மையத்தில் விளக்க கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட கோட்டச் சங்க மாநாடுகளை டிசம்பர் 31 க்குள் நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக