ஞாயிறு, 9 செப்டம்பர், 2018



தொடரும் முயற்சி
நமது பொதுச் செயலாளர் தோழர் C.K. மதிவாணன் நேற்று மண்டல தொழிலாளர் நலத்துறை ஆணையர் 
(RLC ) புதுடெல்லி அவர்களிடம் கடந்த மாதம் 03/07/2018 அன்று அவர் பிறப்பித்த உத்தரவினை பற்றியும் அதற்கு நன்றி தெரிவித்து பேசினார்.அந்த உத்தரவுப்படி நமது சங்கத்தோடு நிர்வாகம் அனைத்து தல மட்டங்களிலும நாம் வைக்கும் கோரிக்கையினை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி போடப்பட்ட உத்தரவினை, நமது பிஎஸ்என்எல் கார்பரேட் அலுவலகம் அமல்படுத்த எந்தவித முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதை எடுத்துரைத்தார் . அதற்கடுத்தாற்போல் தமிழ்நாட்டில் சம்பளப் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு மாதமும் போராட்டமாகவே உள்ளது என்றும் பல மாவட்டங்களில் பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் ஒப்பந்த ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் வேதனையோடு பகிர்ந்துள்ளார் இதனைக் கேட்ட RLC Head quarters அவர்கள் இந்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றி BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சிக்கிறோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நிலவிவரும் சம்பள பிரச்சினையில் வரும் வாரத்தில் சரி செய்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.தொடர்ச்சியாக ஒப்பந்த ஊழியர்களுக்கான நலனைப் பற்றியே பல மட்டங்களில் போராடி வரும் நமது பொதுச் செயலாளரை தமிழ்நாடு மாநில கமிட்டியின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்Image may contain: 5 people, including Aruldosscharles Charles and Ragul Anandhan, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக