Saturday, 4 August 2018

National Federation of Telecom Contract Labours 

                தமிழ்நாடு மாநில சங்கம்.

தோழர்களே !தோழியர்களே! !
வணக்கம்.துவங்கிய சில காலத்திற்குள் நாடெங்கும் பரவி வரும் நமது சங்கம், நமது பொதுச் செயலர் மதிப்பிற்குரிய தோழர் C.K.மதிவாணன் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதல்,எழுச்சிமிகு செயல்பாடுகள் காரணமாக பல செயற்கரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அங்கீகாரச் சங்கங்கள் உட்பட எந்த சங்கத்தோடும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னையை BSNL நிர்வாகம் விவாதிக்கக் கூடாது என்று ஒரு சட்டவிரோத, அராஜக உத்திரவை BSNL Corporate அலுவலகம் 21/10/2016 அன்று வெளியிட்டது.
மற்ற சங்கங்கள் இந்த உத்திரவு குறித்து மயான அமைதி காத்தது. இந்த உத்திரவினைப்பற்றி தேசிய கவுன்சிலில் விவாதிக்கக்கூட BSNL நிர்வாகம் மறுத்தது.
ஒப்பந்த ஊழியர்களின் நலன் காக்க அமைக்கப்பட்ட NFTCL , எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இப்பிரச்னையை எதிர்த்து நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டது.
அகில இந்தியத் தலைவர் தோழர் ஆசிக் அகமது, பொதுச் செயலர் தோழர் மதிவாணன், துணைப் பொதுச் செயலர் தோழர் சுப்பராயன், தமிழ்நாடு மாநில செயல் தலைவர் தோழர் மாரி, மாநிலச் செயலர் தோழர் ஆனந்தன் ஆகியோர் 10/11/2016 அன்று டெல்லி்யில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மற்றும் உதவி தலைமை
தொழிலாளர் ஆணையர்( Dy.CLC ) ஆகியோரை சந்தித்து தொழிற்சங்க சட்டத்திற்கு எதிரான இந்த உத்திரவினை BSNL நிர்வாகம் வாபஸ் பெற உத்திரவிட வேண்டும் என்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் வேலையை பெற்றுக் கொள்ளும் BSNLதான் Principal Employer என்றும் ஆகவே ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் உறுதி செய்யவேண்டிய கடமையும் கடப்பாடும் BSNL நிர்வாகத்திற்கு உண்டு என்றும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தோடு விவாதிக்க BSNL நிர்வாகத்திற்கு உத்திரவிடவேண்டும் என்றும் கடுமையாக வாதாடினோம்.அந்த அடிப்படையில் BSNL நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.
3-7-2018 அன்று டெல்லியில் CLC அவர்களை தோழர்கள் மதிவாணன், ஆசிக் அகமது, ஆனந்தன் ஆகியோர் மீண்டும் சந்தித்து உடனடியாக உத்திரவினை வெளியிட வலியுறுத்தினர்.
அந்த அ்டிப்படையில் டெல்லி CLC அலுவலகம், BSNL உத்திரவினை ரத்து செய்து உத்திரவிட்டுள்ளது.
நமது அடிப்படை தொழிற்சங்க உரிமை நிலைநாட்டப்பட்டது.
மாதந்தோறும் சம்பளம் என்பது BSNLல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.இந்த பிரச்னை குறித்தும் டெல்லியில் சீஃப் லேபர் கமிஷனரிடம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அவர் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாட்டில் Asst.Labour Commissionerரிடம் நமது சங்கம் தொடர்ந்த வழக்கின் காரணமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் 19/7/18அன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தோழர்கள் ஆனந்தன், மாநிலத் தலைவர் பாபு, மாநிலப் பொருளர் சம்பத், வடசென்னை மாவட்டச் செயலர் கோதண்டபாணி ஆகியோர் நமது சங்கத்தின் சார்பாக பங்கேற்றனர்.தமிழகத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகள்,7ந்தேதிக்குள்
சம்பள பட்டுவாடாவை என்பதை கறாராக நடைமுறைப்படுத்துவது என்றும் இனிமெல் இதுபோன்ற பிரச்சனைகள் வராது என்றும் உறுதி கூறினர். அதற்கான உத்தரவையும் 19/7/2018 அன்றே மாநில நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இந்த உத்திரவை காலந்தவறாமல் அமலாக்க வலியுறுத்தியும்
முழுமையாக நடைமுறைபடுத்தப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கின்ற , நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியம் என்ற Dy.Chief Labour Commissioner பிறப்பித்த உத்தரவை அமலாக்க வற்புறுத்தியும்
ஆட்குறைப்பு செய்யாதே ! ஒப்பந்த ஊழியர் வயிற்றில் அடிக்காதே !! என்று வற்புறுத்தியும்
வருடந்தோறும் தரவேண்டிய போனஸ்தொகையை
தர வற்புறுத்தியும்
அடையாள அட்டை தராததை கண்டித்தும், உடனடியாக தர வலியுறுத்தியும்
9-8- 2018, அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்,
21-8-2018 அன்று தமிழகம் முழுவதும் இருந்து தோழர்களை திரட்டி திருச்சியில் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம் என்ற அம்பாசமுத்திரம் மாநில செயற்குழு முடிவை அமல்படுத்துவோம்,
வாரீர் ! வாரீர் !! அலைகடலென திரண்டு வாரீர் !!! 
அணி திரள்வோம் ! ஆர்பரிப்போம் !!
என அன்புடன் அழைக்கிறோம் !

No comments:

Post a Comment