பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளராக வி.ராஜு பொறுப்பேற்பு
பிஎஸ்என்எல் தமிழகப் பிரிவு தலைமைப் பொது மேலாளராக வி.ராஜு புதன்கிழமை பொறுப்பேற்றார். பிஎஸ்என்எல் தமிழகப் பிரிவு தலைமைப் பொது மேலாளராக இருந்த ஆர்.மார்ஷல் ஆண்டனி லியோ கடந்த 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு வி.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், இந்திய அரசின் தொலைத்தொடர்பு சேவைப் பணியில் கடந்த 1983-ஆம் ஆண்டு சேர்ந்தார். இதற்கு முன்பு, திருச்சி, குவாஹாட்டியில் முதன்மைப் பொது மேலாளாராகவும், அந்தமான் நிகோபார் தீவுகளில் தலைமைப் பொது மேலாளராகவும், திருநெல்வேலியில் பொது மேலாளராகவும், தில்லி பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகத்தில் இணை துணைத் தலைமை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். வி.ராஜு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் பி.எஸ்சி பட்டமும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மின்னணு பொறியியலில் பி.டெக் பட்டமும், ஹைதராபாத் ஜேஎன்டி பல்கலைக் கழகத்தில் டிஜிட்டல் சிஸ்டம்ஸ் மற்றும் கணினி பொறியியல் பிரிவில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பணி சிறக்க NFTCL மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக