செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

பட்டினிப் போராட்டம்

நேற்று திருச்சி மாநகரில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள்,மற்றும் தமிழகம் முழுதும் திரட்டப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் தழுவிய கூட்டம் திருச்சியை திணறச் செய்தது என்றால் மிகையாகாது. பட்டினிப் போராட்டம் துவக்கத்திலேயே நமது சம்மேளன துணைத்தலைவர் தோழர் மாலிஅண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து போராட்டத்தை துவக்கி வைத்தார் இனி முழுக்க கோஷங்களை தோழர் மகேந்திரன் முழங்க இந்தப் போராட்டத்தில் கூட்டுத் தலைமையாக தோழர்கள் வி பாபு மாநிலத் தலைவர் மற்றும் புதுக்கோட்டை முத்து திருச்சி மாவட்ட தலைவரும் தலைமையேற்று நடத்தினர்.இந்த பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று Y.மில்டன் திருச்சி மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும் AITUC மாவட்டச் செயலாளர் தோழர் மணி அவர்கள் தனக்கே உண்டான பாணியில் அருமையான ஒரு துவக்க உரையை நிகழ்த்தினார் இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் சார்ந்த தோழர் தோழியர்கள் இந்தப் போராட்டத்தை வாழ்த்தியது என்பது சிறப்பம்சமாகும். தோழர்.திராவிடமணி மாநகர மாவட்ட செயலாளர் சி பி ஐ
தோழர் சுரேஷ் மாவட்ட தலைவர் ஏஐடியுசி தோழர் செல்வராஜ் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் சிபிஐ மற்றும் AIBEA பொதுச் செயலாளர் ராமராஜன் என்று பலரும் போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும் என்று கூறியதும் நமது தோழர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதந்திருந்த தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் பால கண்ணன் பன்னீர்செல்வம் தோழர் கணேசன் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தோழியர் பரிமளம் மதுரை கடலூர் அன்பழகன் மஞ்சினி வேதாச்சலம் ரவி மதிவாணன் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோதண்டபாணி தென்சென்னை மாவட்டச் செயலாளர் நாகராஜன் தருமன் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் மகேந்திரன் தஞ்சாவூர் மாவட்ட தலைவர்கள் தோழர் பிரண்ட்ஸ் இளங்கோவன் பன்னீர் ஆறுமுகம் திருச்சி மாவட்ட தலைவர் சுந்தரம் மற்றும் முன்னாள் சம்மேளன செயலாளர் ராஜசேகரன் என்று NFTE பொறுப்பாளர்கள் என்று பெரிய பட்டியலையே தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஆதரவு தெரிவித்தனர் திருவள்ளூர் மாவட்டம் போராட்டத்திற்காக ஒரு பேருந்து அமர்த்தி நூற்றுக்கணக்கான தோழர்கள் திரட்டியது சந்தோஷமான விஷயம். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான தோழர்களை திரட்டிய பொறுப்பாளர்களை அனைவரையும் மாநில சங்கம் பாராட்டுகிறது. அனைத்து உண்ணாவிரதப் பந்தலில் குறிப்பிட்ட தோழர்கள் தோழியர்கள் உண்ணாநிலை என்பது சராசரியாக நடக்கக் கூடிய விஷயம் ஆனால் இந்த பட்டினிப் போராட்டத்தில் வந்திருந்த அனைவரும் பட்டினியாய் போராடியதுதான் நமது சங்கத்திற்கு கிடைத்த வெற்றி இந்தப் போராட்டத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்றால் தோழர் ஈரோடு மாலி சம்மேளன துணைத் தலைவர் காலையிலிருந்து நம்மோடு பட்டினி கிடந்தது மட்டுமல்ல ஆழ்ந்த சொல்லாடல் கொண்ட அருமையான உரை போராட்டத்தின் உச்சகட்டத்தில் அனைவரையும் ஈர்த்த கண்டன உரை. தோழர் மில்டன் அவர்களின் மகனும் தோழர் ஹென்றி மகளும் இந்த மாதம் 30ஆம் தேதி திருமணத்தை வைத்துக் கொண்டு சிறிதும் தயக்கமின்றி முழுமையாக நமது பட்டினிப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது நம்மை வியக்கச் செய்தது . உணர்வுப்பூர்வமான இந்தப் போராட்டத்தை தொழிலாளர் தொழிலாளர் நலத்துறையிடம் புகாராக அளித்துள்ளோம் நமது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்வதாகவும் நமது நிர்வாகத்தை அழைத்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை நம்மிடம் தொழிலாளர் துறை நல ஆணையர் அவர்கள் கூறியது என்பதே நமது போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மேலும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இந்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் எச்சரித்துள்ளோம். கூடிய விரைவில் இந்த போராட்டத்திற்கான இலக்கை எட்ட கூடும் என்பதை நம்புகிறோம். போராட்டத்தின் முடிவில் அனைத்து தோழர்களுக்கும் பழச்சாறு கொடுத்து தோழர் ராமராஜன் பொது செயலாளர் வங்கி ஊழியர் சங்கம் முடித்து வைத்தார் . நன்றி உரையாக தோழர் ஆறுமுகம் திருச்சி மாவட்ட பொருளாளர் அவர்கள் அருமையான ஒரு நன்றியுரையினை அனைவரும் மகிழக் கூடிய அளவில் தெரிவித்தார் என்பது சந்தோஷமான விஷயம் .

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக