திங்கள், 9 ஜூலை, 2018


அடிக்க அடிக்க அம்மியும் நகரும்........

21-10-2016 அன்று BSNL Corporate அலுவலகம் அனைத்து முதன்மைப் பொது மேலாளர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில்,
" ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை அங்கீகாரச் சங்கங்கள் உட்பட எந்த சங்கத்திடமும் விவாதிக்கக் கூடாது"

என்ற தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிரான ஒரு படுமோசமான உத்திரவினை வெளியிட்டது.
" நாங்கள்தான் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை தீர்க்க அவதாரம் எடுத்துள்ளோம் " என்று வெட்டி விளம்பரம் செய்துகொள்ளும் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் இந்த உத்திரவை எதிர்த்து எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தன.
BSNL நிர்வாகம், இந்த உத்திரவினைப்பற்றி தேசிய கவுன்சிலில் விவாதிக்கக்கூட மறுத்தது.
ஒப்பந்த ஊழியர்களின் நலன் காக்க புதியதாக அமைக்கப்பட்ட NFTCL , எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இப்பிரச்னையை எதிர்த்து நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டது.
அகில இந்தியத் தலைவர் தோழர் ஆசிக் அகமது, பொதுச் செயலர் தோழர் மதிவாணன், துணைப் பொதுச் செயலர் தோழர் சுப்பராயன், தமிழ்நாடு மாநில செயல் தலைவர் தோழர் மாரி, மாநிலச் செயலர் தோழர் ஆனந்தன் ஆகியோர் 10/11/2016 அன்று டெல்லி் சென்ற போது, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மற்றும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் ஆகியோரை சந்தித்து தொழிற்சங்க சட்டத்திற்கு எதிரான இந்த உத்திரவினை BSNL நிர்வாகம் வாபஸ் பெற உத்திரவிட வேண்டும் என்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் வேலையை பெற்றுக் கொள்ளும் BSNLதான் Principal Employer என்றும் ஆகவே ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் உறுதி செய்யவேண்டிய கடமையும் கடப்பாடும் BSNL நிர்வாகத்திற்கு உண்டு என்றும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தோடு விவாதிக்க BSNL நிர்வாகத்திற்கு உத்திரவிடவேண்டும் என்றும் கடுமையாக வாதாடினோம்.அந்த அடிப்படையில் BSNL நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.

3-7-2018 அன்று டெல்லியில் CLC அவர்களை தோழர்கள் மதிவாணன், ஆசிக் அகமது, ஆனந்தன் ஆகியோர் மீண்டும் சந்தித்து உடனடியாக உத்திரவினை வெளியிட வலியுறுத்தினர்.
அந்த அ்டிப்படையில் டெல்லி CLC அவர்கள், BSNL உத்திரவினை ரத்து செய்து உத்திரவிட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இனி நமது சங்கம் நிர்வாகத்தோடு பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற உரிமையோடு ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகளை எடுத்து தீர்க்க வழி பிறந்துள்ளது.
நிர்வாகத்தின் ஆணவப் போக்கிற்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளோம்.
தொடர்ந்து போராடி, ஒப்பந்த ஊழியர்க்கான அனைத்து உரிமைகளையும் மீட்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக