செவ்வாய், 16 மே, 2017


Image may contain: 2 people, people sitting, people standing and text

NFTCL திருச்சி மாவட்டச்செயற்குழு
NFTCL திருச்சி மாவட்டச்செயற்குழு மாவட்டத்தலைவர்
தோழர்.முத்து அவர்கள் தலைமையில்
இதமான சூழலில் 13/05/2017 அன்று திருச்சி 
பொதுமேலாளர் அலுவலக கூட்ட அரங்கில் கூடியது.
கூட்டம் துவங்குமுன்பே
கெடுவாய்ப்பூனை ஒன்று குறுக்குமறுக்காக ஓடியது.
பூனையை அப்புறப்படுத்தி..
புதிய எழுச்சியோடு கூட்டம் துவங்கியது.
சகுனம் பார்த்து சங்கடப்படுவதல்ல சங்கம்...
சலசலப்புகளை சந்திப்பதுதான் சங்கம்…
சங்கடங்களை தீர்ப்பதுதான் சங்கம்…
எனவே இன்னல்படும்
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளைப் பற்றி
இதயசுத்தியோடு செயற்குழு விவாதித்தது...
வருங்கால கடமைகளை வகுத்தெடுத்தது..
ஒப்பந்தஊழியர் பிரச்சினைகளை
உரிய முறையில் தீர்த்திடவும்…
அமைப்பை மேலும் வலுப்படுத்தவும்…
போராட்டங்களில் முழுமையான பங்கெடுத்திடவும்….
NFTCL செங்கொடியை மேலும் உயர்த்திப்பிடிக்கவும் ..
செயற்குழு உறுதி பூண்டது.
தோழர்.முத்து தலைமையேற்க…
தோழர்.மில்டன்
மாவட்டச்செயலர் வரவேற்புரையாற்ற…
தோழர். மாரி
மாநில செயல்தலைவர் துவக்கவுரையாற்ற…
தோழர் பழனியப்பன்
NFTE மாவட்டச்செயலர் – எதார்த்தயுரையாற்ற..
தோழர் ஆனந்தன்
மாநிலச்செயலர் எழுச்சியுரையாற்ற..
தோழர் காமராஜ்
AIBSNLEA மாநில உதவிச்செயலர் ஆதரவுக்கரம் நீட்ட..
திருச்சி மூத்ததோழர்..பாலகுரு...
மாநில உதவிச்செயலர்.
தோழர். பாலசுப்பிரமணியன் -
மாநில அமைப்புச்செயலர்
தோழர். வில்லியம் ஹென்றி –
NFTE மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். K.ஆசைத்தம்பி
மற்றும் கிளைச்செயலர்
தோழர் .ஜோசப் வில்லியம் –
ஆகியோர் கருத்துரையாற்ற…
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி…
பொதுமேலாளர் அலுவலத்தில்
புதிய கிளை ஒன்றைத் துவங்கி..
மாவட்டப்பொருளர்
தோழர். P.ஆறுமுகம் நன்றி நவில..
இனிதே முடிந்தது…
NFTCL மாவட்டச்செயற்குழுக்கூட்டம்…Image may contain: 6 people, people sitting, people standing, people walking and crowd

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக