Wednesday, 30 March 2016

இன்று (30-03-2016) நெய்வேலியில் NLCஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுNLC AITUC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி இந்திரா நகரில் இன்று மாபெரும் பெருந்திரல் ஆர்ப்பாட்டம்.
பஞ்சப்படி, நிரந்தரம்,NLC க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தரப் பணி,வெளி மாநில பொறியாளர்கள் தொழிலாளர்களை வெளியேற்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
சங்கத்தின் துனை தலைவர் R.செல்வமணி தலைமை தாங்கினார்.
AITUC மாவட்ட பொது செயலாளர் தோழர் M.சேகர் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட தலைவர் ப.ஜெகரட்சகன்
தோழர் ஆ.மார்கஸ் மூத்த வழக்கறிஞர்
NFTE தேசிய செயலாளர் தோழர் G.ஜெயராமன்
தோழர் S .ஆனந்தன் NFTCLதேசிய தொலை தொடர்பு ஒப்பந்த  தொழிலாளர் சம்மேளனம்  மாநில பொது செயலாளர் 
உடன் AITUC மாவட்டக்குழு உறுப்பினர் G.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் SD.குணசேகர்,ஞானசேகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்
இறுதியில் சங்கத்தின் து.செ. முனியன்CS || நன்றி கூறினார்

Tuesday, 29 March 2016


அஞ்சலி

                     நமது மாநில சங்க அலுவலகக் காப்பாளராக பணிபுரிந்த தோழர் N.கார்த்தி நேற்று (27.3.2016) அகால மரணமடைந்தார். அவரது மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். அனைவரையும் ஊபசரித்து அரவணித்த தோழன் மறைவு நமது சங்கத்தின் பேரிழப்பு நம்மால் முடிந்த உதவி அவர் குடும்பத்திற்கு செய்ய அனைவரும் கடமைப்பட்டு இருக்கிறோம். 


           காற்றினில்... கலந்தான்... கார்த்தி...
ஊண் எரிந்து.. உயிர் பிரிந்து.. 
காற்றினிலே கலந்து விட்டான்..
ஜெகன் இல்லத்துச்  செல்லப்பிள்ளை..
நம் அன்புத்தோழன் கார்த்தி...

தேவகோட்டை கண்ணங்குடியில்..
ஒப்பந்த ஊழியனாய்ப் பணி செய்தான்..
ஒண்ட இடமின்றி...ஒதுங்க வழியின்றி...
கண்ணங்குடி தொலைபேசி நிலையத்தில் கண்ணயர்வான்...

அன்பு செய்தால்..அடங்கி நடப்பான்..
அநியாயம் கண்டால்..அடங்க மறுப்பான்..

ஆதலின்...
ஈரமற்ற ஒரு அதிகாரியால்.. சூடு பட்டான்...
அலுவலகத்தில் உறங்க விடாமல்... 
தெருவிலே நிறுத்தப்பட்டான்...

கண்ணங்குடி...
மேல்குடிகளுக்கு மட்டுமே இடம் தரும்..
கீழ்குடிகளுக்கு...   
உள்ளத்திலும் இடம் தராது...
இல்லத்திலும் இடம் தராது...

கண்ணங்குடியிலே கண்ணுறங்க வழியின்றி... 
கண்ணீர் சிந்தியவனை..
கரம் நீட்டி அழைத்துக்கொண்டது...
சிந்தாதிரிப்பேட்டை ஜெகன் இல்லம்...

ஜெகன் இல்லத்திலே....
காவல் பணியை கருத்துடன்  செய்தான்..
ஏவல் பணியை இன்முகத்துடன் ஏற்றான்..

ஓரிரவு உறங்கிட இடமின்றி தவித்தவன்...
ஓராயிரம் இரவுகள்  நம் தோழர்கள்... 
நிம்மதியாய் உறங்கிடப் பணி செய்தான்...

ஜெகன் இல்லத்தில்...
பணிவை விதைத்தான்...
அன்பை வளர்த்தான்...
ஐயா  என்னும் அடிமைச்சொல் மறந்தான்...
தோழா என்னும் உரிமைச்சொல் பகன்றான்..

தலைவர்களின் அன்புக்கு ஆளானான்..
தோழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானான்...

தனிமையில் கார்த்தி தவிக்கலாகாது...
வள்ளியோ.. தெய்வானையோ...
வாகாய் ஒருத்தியை இவன் வசப்படுத்துவோம்...
வாழ்வை வளப்படுத்துவோம்...என்றெண்ணி 
இருந்த வேளையிலே....
இதயத்தில் செய்தியும்...
இடியாய் விழுந்தது... 

நேற்றிருப்பார்... இன்றில்லை..
என்னும் நிலையாமை சொல்லி...
உறங்குவது போலும் சாக்காட்டில்...
உறங்கி விட்டான் நிரந்தரமாய்...

கார்த்தி...
காற்றிலே கலந்து விட்டான்...
நம் மூச்சிலே நுழைந்து விட்டான்...
மூச்சிலே அவன் நுழைந்து விட்டதனால்..
நம் மூச்சு வரை அவன் பேச்சிருக்கும்...
நம் பேச்சில் என்றும் அவன் நினைவிருக்கும்...

சென்னை தொலைபேசியில் 7-வது சங்க அங்கீகாரத் தேர்தலுக்கான 
பிரச்சாரத் துவக்க விழா குரோம்பேட்டை தொலைபேசி நிலையத்தில் 
 24-03-16 ன்று நடைபெற்றது. 

கூட்டணித் தலைவர்கள் பிரச்சார உரை நிகழ்த்தினர். ஆயிரத்திற்கும் 
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மகளிரின் வருகையும் கணிசமாக 
இருந்தது. 
.Thursday, 24 March 2016


கடலூர்  மாவட்டத்தில் ஒப்பந்த தொழிளார்களுக்கு  இந்த மாத சம்பளம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை  வந்தவுடன் நமது சங்கம்  
தலையிட்டு நமது மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் முறையிட்டோம் .அவரும் நமது கோரிக்கையை ஏற்று நமது அலுவலகத்தில் INSPECTION செய்தார் அவருடன் நமது மாநில செயலர் .  தொழிலாளர் நல ஆணையர் தலையிட்டின் காரணமாக இந்த மாத சம்பளம் உடனடியாக வழங்கப்பட்டது இதனை ஏற்ப்படுத்திய தொழிலாளர் நல ஆணையர்(LABOUR ENFORCEMENT OFFICER ) அவர்களுக்கு நமது சங்கம் பாராட்டுகிறது .  


SALES TEAM மற்றும் THIRUPAPULIYUR அதிகாரிகள் நடத்திய CELL மற்றும் புதிய தொலை பேசி இணைப்புக்கான MELA .அதில் நமது  மாநில செயலர் . 

Tuesday, 15 March 2016


                     தோழர் . C .K .M வாழும் வரலாறு ....

மூன்று எழுத்தில் இவர் பெயர் இருக்கும்  இவரால்தான்  NFTE வளர்ந்து நிற்க்கும்...,125th Birth Anniversary of Dr.B.R.Ambedkar on 26-01-2016 at Palayankottai.
The Special ll- District Committee of CPI 's Tamilnadu state has organised a well attended seminar on Dr. Ambedkar at Palayamkottai in Tirunelveli .Republic day was a best day to observe the birth anniversary of Ambedkar who was the chairman of the drafting committee of Indian Constitution .
The seminar was presided over by Comrade G .Jayaraman and addressed by comrades M.Veerapandian ,CPI's state assistant secretary,Kasi Viswanathan ,Tirunelveli District CPI Secretary ,C.K.Mathivanan,S.Kamaraj and others.

இந்த கூட்டத்தில் தோழர். C .K .M  நமது 7 வது  சரிபார்ப்பு தேர்தல் பற்றி கூறிய
விஷயங்கள்தான் இன்று வரை  அரங்கேரி கொண்டிருகிறது .

Com. Kohli withdrew his nomination on 09-03-16
We are very Happy to inform that the General Secretary of NFTBE , comrade R.K.Kohli has withdrawn today(March-9)his union's nomination for the seventh membership verification in support of NFTE-BSNL . This Union was in alliance with BSNLEU in the sixth verification and helped it. But after a bitter experience with com. Abhimanyu NFTBE has decided to come out of that alliance and now decided to support our union unconditionally by withdrawing from the contest itself. This will avoid confusion created in the last verification due to similarity of symbol of NFTBE. It may be recalled that Comrade Kohli publicly announced in Patna on 01-03-16 that he will merge NFTBE with NFTE in April. We welcome the decision of Com.Kohli and thank him and his comrades for the help and cooperation. TEPU All India conference on 20&21 of Feb'2016 in Chennai.
I along with our General Secretary Chandeswar Singh and BSNLMS General Secretary Suresh Kumar participated in the open session of TEPU's Conferance. Comrades RK,Pattabiraman,Jayaraman, Gopalakrishnan,Subbarayan ,Kamaraj and Kumar also attended the open secession .
NFTE leaders were very warmly welcomed by TEPU leaders RV,Subburaman,Chellapandi and J.Vijayakumar ,CS of Chennai Telephones.
Besides NFTE and BSNLMS the leaders of SEWA-BSNL Perumal and Ram also attended the TEPU's 4 th AIC.
 
TEPU Union to support NFTE-BSNL
TEPU leaders formally agreed to support NFTE-BSNL in the ensuing Seventh membership verification on 10-05-2016.This development is sure to boost the vote percentage of NFTE and the morale of our membership. Similarly this decision of TEPU will hurt the BSNLEU psychologically too much as BSNLEU is loosing its longstanding partner like TEPU which was in alliance with BSNLEU since the first verification in 2002.We welcome TEPU 's decision and thank its leadership including comrades Venkatraman , Subburaman and Vijayakumar , Kannadasan etc.

 

 
 


Thursday, 10 March 2016

 பூக்கடை தொலை பேசி  வாளகத்தில் BSNLEU சங்கத்தில் இருந்து நாமாது NFTCL சங்கத்தோடு தம்மை இனைத்து கொண்ட 25 தோழியர்கள் கூட்டம் .2 தோழியர்களை திடீர் என்று வேலை நிக்கம் செய்த ஒப்பந்தகாரரை அடிபணிய வைத்த மாவட்ட நிர்வாகிகளை மாநில சங்கம் பாராட்டுகிறது .  Tuesday, 8 March 2016 மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

.... நண்பன் வீட்டில் விருந்து சாப்பிடும்போது நண்பனின் மனைவி தவறுதலாக உங்கள் "பட்டு வேட்டியில் " தவறுதலாக கொஞ்சம் குழம்பை ஊற்றி விடுகிறார்... அதற்காக பதறிப்போய் மன்னிப்பும் கேட்கிறார்..
,,,,, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ? பரவாயில்லீங்க துவைத்தால் போய்விடப்போகிறது... அதற்காக ஏன் வருந்துகிறீர்கள் என்று மனித நேயத்தோடு நடந்துகொள்கிறீர்கள்...
ஆனால், உங்கள் மனைவி தவறுதலாக உங்கள் " அழுக்குக் கைலியில்" கொஞ்சம் குழம்பை சிந்திவிட்டால் ஏன் அடிக்கிறீர்கள்? திட்டுகிறீர்கள்?
யாருடைய மனைவியோ செய்யும்போதுள்ள அந்த மனித நேயம், உங்கள் மனிவியிடம் இல்லாமல் போவது ஏன்?
(தந்தை பெரியார்)

Sunday, 6 March 2016

Thirumalai Raman and Thamarai Senthil Kumar shared Sathiyanarayanan Rajendran Sathiyanarayanan's post.
Sathiyanarayanan Rajendran Sathiyanarayanan with Chandrakumar Singaramand 10 others.
புரட்சிப் 
பெருநெருப்பை
கம்பிகளுக்குள் 
அடைப்பீரோ...??
.
ஆண்டாண்டு 
காலமாய்
உரிமை இழந்த 
குடியை - அடக்கியே
ஆள நினைப்பீரோ..??
.
ஆண்டைகளுக்கும்
அரச பயங்கரத்திற்க்கும்
எதிராய்
முறுக்கி உயர்ந்த
எங்கள் கரங்களை
முடக்கிவிட
முனைவீரோ..??
.
காவிகளின்
களியாட்டத்திற்க்கு
கசையடி கொடுக்க 
உயர்ந்த கரம்
எங்கள் கரம்.
.
முதலாளிகளின்
மூத்திரக் குடுவைகளை
சுமக்கும் - தரித்திர நாய்களை
கொளுத்தும் கரம்
எங்கள் கரம்.
.
தொழிலாளிகளை
நசுக்கும் பூட்சுகளில்
ஆணி அறையும்
எங்கள் கரம்.
.
விரல் மடக்கி
நாங்கள் உயர்த்திய
எங்கள் கரம்.
வறியவர்கள்
வாழ்வின் நிறம்
மாறும் வரை
உங்களுக்கெதிராய்
உயர்ந்து கொண்டே இருக்கும்.
National Federation of Telecom Contract Labours
.
‪#‎புரட்சி‬ வெல்லும்