திங்கள், 16 பிப்ரவரி, 2015


மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடக்கோரி போராட்டம் வேர்க்கால் வேந்தன்  கோ.ஜெயராமன் 
Image result for g jayaraman nfte-bsnl

I am NFTE-BSNL  "  என்று ப்ரிண்ட் ஆன T-shirt 

பனியன் விற்றவருக்கு சம்மேளனச் செயலர் பதவியா ?  என்று ஒரு அரைவேக்காடு கேள்வி கேட்டதாம் !

" I am NFTE -BSNL "  என்று ப்ரிண்ட் ஆன T-shirt ஐ ஜபல்பூரில் நடந்த 
அகில இந்திய மாநாட்டில்   விற்பது ஒன்றும் தகாத செயல் அல்ல !  

எனக்குதான் எல்லாம் தெரியும், ஆகவே, நான் சொல்வதைத்தான்
நீங்கள் எல்லாம் கேட்கவேண்டும் என்று தன்னையே  பெரிய 
 பிம்பமாக நினைத்துசெயல்படாமல், எந்தப் பணியும்  கீழ்த்தரமானது அல்ல என்று கருதி செயல்படும்  எளிமைக்கு சொந்தக்காரர்.

 நிலத்தின் மேலே இருக்கும்  மரங்களின் பல வண்ண இலைகளும் தழைகளும், கிளைகளும் தான் மரம் என்று யாராவது கருதினால் அவர் முட்டாளாக இருப்பார். அந்த மிகப்பெரிய மரத்தையே தாங்கும் வல்லமை படைத்த வேர்கள் வெளியே தெரியாது. அப்படி சங்கத்தின் தலையாய வேராக இருப்ப்பவர்களில் அவரும்  ஒருவர் என்றால் அது மிகையாகாது.   

எல்லோரிடமும் அன்போடும் பண்போடும் பழகும் இனிய குணம் படைத்தவர். மற்றவர்கள் மனம் புண்பட்டுவிடுமே என்று  கருதி  மென்மையாக பேசுபவர்.

தனது உயர்நிலை பள்ளி காலத்திலேயே வடநாட்டு தலைவர்கள், 
தமிழ் மக்கள் மீது ஹிந்தியை திணித்த போது, அதை தட்டிக் கேட்டு  
ஒரு நாள் சிறை வாசம்  இருந்து பொது வாழ்க்கையை துவக்கியவர்.

 கல்லூரி நாட்களிலேயே தி.மு.க மாணவர் அணி துணைச்செயலராக பொறுப்பேற்று  இலங்கை தமிழர்களின்  உரிமைக்காக போராடியதால்  கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.

1980ல்  கள்ளகுறிச்சியில் இலாகா பணி துவங்கிய நாள் முதல் சங்கப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் .

கடலூர் மாவட்டத்தின் மூத்த முன்னோடிகளான தோழர்கள் ரகு,ரங்கநாதன்  ஆகியோரால் அடையாளங்காணப்பட்டு  இடதுசாரி அரசியலுக்கும் தொழிற்சங்க  பணிக்கும் ஆட்படுத்தப்பட்டவர்.

பண்ருட்டிக்கு  மாற்றலில் சென்றவுடன் கிளைச்செயலருக்கு 
நடந்த போட்டியில் பெருவாரியான வாக்குகள் பெற்று 
தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அப்போது கடலூரில் தேசிய சங்கம் வலுவாக இருந்தது. 
கடுமையான  இயக்கப்பணிகள்.... அனைத்திலும் தன்னை 
ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் மாவட்ட துணைச்
செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து போராட்டமே வாழ்க்கையானது. கேசுவல் ஊழியர்களின் சம்பளப் 
பிரச்னைக்காக தீரமுடன்  போராடியதால் 46  நாட்கள் 
சஸ்பென்ஷனில் இருந்தார்.

மூன்றாம் பிரிவு ஊழியரின்  பிரச்னைக்காக ஓங்கி குரல் கொடுத்த காரணத்தால் மீண்டும்  48 நாட்கள்  சஸ்பென்ஷனில்  இருந்தார்.

( பாவம் ! மற்றவர்களுக்கு சஸ்பென்சன் வாங்கிக் கொடுத்துவிட்டு 
தான் மட்டும்  தப்பிக்கும் கலையை அறியாதவர் )

 இவரது செயல்பாட்டில் ஈர்க்கப்பட்ட தோழர் ரங்கநாதன், 
இவரை லைன்-ஸ்டாப் சங்க  மாவட்ட செயலராக்கி அழகு பார்த்தார்.அடுத்த பத்து ஆண்டுகள் லைன் ஸ்டாப் சங்க 
மாவட்ட  தலைவராக  பொறுப் பேற்று  லைன்-ஸ்டாப் மாவட்ட செயலருக்கு உறுதுணையாக இருந்தார்.

அவரது செயல்பாடு அனைத்து தலைவர்களையும் 
தோழர்களையும் மனங்குளிர வைத்த  காரணத்தால் 
அவருக்கு ஒரு அரிய பெருமையை வழங்கினார்கள். 
கடலூரில் பிரம்மாண்டமாய்  நடந்த லைன்-ஸ்டாப் 
மாநாட்டின்போது  தொண்டர் படையின் தலைவனாய் , 
NFPTE   சங்க  செங்கொடியினை  அம்பாரியின்  
மேல் அமர்ந்து  எடுத்துச் சென்று  தலைவர்களிடம்  ஜெயராமன்தான்  வழங்க வேண்டும் என்று  முடிவெடுத்தார்கள்  வரவேற்பு குழுவினர். 

கடலூரில் நடந்த NFTE-BSNL இணைப்பு மாநாட்டில் மாநில 
துணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பணியை 
செவ்வனே ஆற்றினார்.திருநெல்வேலி மாநில மாநாட்டில் 
மாநிலப்  பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கோவை, தஞ்சை 
மாநில மாநாடுகளிலும் மீண்டும், மீண்டும்  மாநிலப் பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கப் பணத்தை  விரயமாக்காமல், 
சிக்கனமாக செலவு செய்து சேர்த்து வைத்தார். மாநில பொருளராக மட்டுமில்லாது அனைத்து அமைப்பு பிரச்னைகளிலும் தனது முத்திரையை பதித்தார்.

 கோவூர் வைத்திய நாத தெருவில் உள்ள சங்க கட்டிடத்தை 
புனரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் அதில் 
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.அவரது சீரிய சிந்தையில் உதிர்த்தது தான் புரவலர் திட்டம். ஐந்தாயிரம் 
ரூபாயோ அதற்கு மேலோ கட்டிட நன்கொடையாக வழங்கும் தோழர்களின் பெயர் சங்க அலுவலகத்தில் பொறிக்கப்படும் என்று கடலூரில் நடந்த மாநில செயற்குழுவில் அறிவித்தார்.
 திருச்சி  தோழர் R.V, கோவை  எல்.சுப்பராயன் முதலிலும்
இரண்டாவதாகவும்  தங்கள் பெயரை பதிவு செய்து துவக்கிட, 
பல லட்சங்களை இந்த திட்டத்தின் மூலம் திரட்ட முடிந்தது.

  தனது அயராத அர்ப்பணிப்பு காரணமாகவே அவர் பாட்னாவில்
 நடந்த அகில இந்திய மாநாட்டில் சம்மேளனச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மதுரையில் தோற்கடிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது 
அவர் கூறிய கருத்து. " வெற்றியோ தோல்வியோ அது குறித்து 
நான் சிறிதும் கவலைப்படவில்லை.. என்னை ஆளாக்கிய  அமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டேன் என்பதே எனக்கு முழு மகிழ்ச்சியை அளிக்கிறது "  அந்த  கட்டுப்பாட்டின் காரணமாகத்தான் வேறு பலருக்கும்   கிடைக்காத பெருமை  அவருக்கு  கிடைத்துள்ளது. 

அவரது சீரிய பணி தொடரும். காலம் மாறும் ! காட்சிகளும் மாறும் !!  அவருக்கே உரிய அனைவரையும் அரவணைத்து செல்லும் பாணியின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக