புதன், 30 ஏப்ரல், 2014

NFTCLன் எல்லை விரிகின்றது

கேரளாவில் எழுச்சிமிகு NFTCL மாநில அமைப்பு கூட்டம்

      27-4-14  காலை 11 மணி அளவில் கேரளாவில் 

உள்ள  எர்ணாகுளம்  மாவட்டம்  பெரம்பாவூரில், 

NFTE மாநில தலைவர் தோழர் ராதாகிருஷ்ணன் 

தலைமையில் NFTCL மாநில அமைப்புக் கூட்டம் 

நடைபெற்றது.

தோழர் ராதாகிருஷ்ணன் தனது தலைமையுரையில், 

இலாகா பணியிலிருந்து சில மாதங்களுக்கும் முன் 

ஓய்வு பெற்ற பின்னும், ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், 

நமது தொலைத் தொடர்பு துறையில் கடும் சுரண்டலுக்கு

ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை அணி திரட்ட,அவர்களுக்கும் 

நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சிய வெறியோடு 

செயல்படும் தோழர் மதிவாணன் அவர்களை மனமுவந்து 

வரவேற்பதாக கூறியது நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது.   

தோழர் C.K.மதிவாணன், அகில இந்திய துணைப் 

பொதுச்செயலர்  சிறப்புரை ஆற்றினார். 

NFTCL துவங்கப்பட்டதன் நோக்கம், லட்சியம் ஆகியவற்றை 
விளக்கினார். 

AITUC, அகில இந்திய அமைப்பின் வழிகாட்டுதலோடு NFTCL துவக்கப்பட்டுள்ளது. 

BSNLல் தற்போது 60 சத பணிகளை ஒப்பந்த ஊழியர்கள்தான் 
செய்து வருகின்றனர். ஒருசில வருடங்களில் நிரந்தர ஊழியர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி அப்பாவி ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட திட்டமிடும் அரசின் சதியை முறியடிக்க வேண்டும். AirTel, 
Vodofone போன்ற  தனியார் துறையில் பணியாற்றும் ஒப்பந்த 
ஊழியரின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. இது போன்ற பிரச்னைகளை அகில இந்திய அளவில் எடுத்து தீர்த்திடவே NFTCL துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் அமைப்புரீதியாக திரண்டு வருகின்றனர்.
அவர்களை ஒருங்கிணைத்து NFTECL விரைவில் அகில இந்திய அமைப்பாக பரிணமிக்கும் என்று விளக்கினார் தோழர் C.K.M.

கடந்த 4 ஆண்டுகளாக  BSNLEU சங்கத்தின் தவறான  உடன்பாடு  காரணமாக BSNL ஊழியர்க்கு போனஸ் மறுக்கபட்டபோதும், 
தோழர் ஆனந்தன், கடலூர் மாவட்டச் செயலராக காண்ட்ராக்ட் ஊழியர்க்கு போனஸ் பெற்ற சாதனையை விளக்கினார்

கேரளத் தலைவர்கள் கேரள மாநிலச் செயலர் 

தோழர் தர்மதாஸ், அகில இந்திய நிர்வாகி 

தோழர் மைக்கேல், மூத்த தோழர் பௌலோஸ் 

உட்பட பலர் கலந்துகொண்டனர்.

NFTCL -ன் தமிழ் மாநில செயலர் தோழர் ஆனந்தன் 

தமிழகத்தில்  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு செய்த 

சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

சமீபத்தில் கடலூரில் இறந்த ஒப்பந்த ஊழியரின்  

குடும்பத்தாருக்கு இழப்பீடு பெற்று கொடுத்ததோடு 

அவரது மனைவிக்கு வேலை வாங்கிக் கொடுத்ததையும் 

விளக்கினார். 

தோழர் மோகன் குமார், NFTCL - ன் மாநிலச் செயலராக 

தேர்வுசெய்யப்பட்டார்.

கோவையிலிருந்து தோழர்கள் சுப்பராயன், ராமகிருஷ்ணன், குமரேசன்,    மோகன் குமார் கலந்து கொண்டனர்.

 புதிய நிர்வாகிகளுக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக