வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கம்யூ.,கட்சியை மிஞ்சிட்டாங்கப்பா ! 
                         கெஜ்ரிவாலுக்கு கோடி, கோடியாக நிதி !!

                                

புதுடில்லி: கட்சி துவங்கியது முதல் பல இடங்களில் , பல முனைப்புகளில் நிதி என்ற பெயரில் கட்சிக்கு பணம் சேர்த்து வரும் கெஜ்ரிவால் தற்போது வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். நாடு முழுவதும் கட்சிக்கு நிதி திரட்டும் பணியில் ஆம்ஆத்மி கட்சியினர் உண்டியல் ஏந்தியும், துண்டு ஏந்தியும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 1. 15 கோடி ரூபாய் கட்சி கஜானாவுக்கு வந்து விழுந்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாரணாசியில் தேர்தல் பணியாற்றும் கட்சி தொண்டர்களுக்கு 10 லேப்டாப்புகள் வழங்கி இங்கு கட்சி பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசியில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்கையில் கட்சிக்கு நிதி கொடுங்கள் என்றார், தனது டுவிட்டரில் , ராகுலையும், மோடியையும் எதிர்கொள்ள பண பலம் தேவைப்படுகிறது. கட்சிக்கு நிதி அளியுங்கள், என்று ஒரு வரியில் வேண்டுகோள் வைத்தார். அதுவும் ' ஒயிட்டாக ' இருக்கட்டும் என்றாராம். இதன் 48 மணி நேரத்தில் 1. 15 கோடி வியாழக்கிழமை ( 80 லட்சம்), வெள்ளிக்கிழமை ( 35 லட்சம்) , கிடைத்துள்ளது. இது, ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்தும், உலகம் முழுவதும் இருந்து நிதிகள் வந்துள்ளன. எங்களின் ஆதரவாளர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஒமன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து நிதி அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு நபர் மட்டும் ஒரு லட்சம் நிதியாக கொடுத்துள்ளார். 10 ரூபாய் முதல் நிதி வசூலிக்கப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆம் ஆத்மியின் நிதி குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் கெஜ்ரிவாலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் நடப்பதால் மத்திய அரசு எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் வாய் மூடி விட்டது.

பின் குறிப்பு: கட்சி, அமைப்புகளில் நிதி வசூலிப்பதில் தி.மு.க., வுக்கு என ஒரு தனிப்பெயர் உண்டு, இடதுசாரிகளும் வசூல் செய்வதில் வல்லவர்கள். இந்த வரிசையில் ஆம்ஆத்மியும் சேர்ந்துள்ளது. சமீபத்தில் கூட இலங்கை புலிகள் அமைப்பினர் தங்களுக்கு நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபய ராஜபக்சே அச்சம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே கூறுகையில், 'இலங்கைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு உதவவும், சர்வதேச அளவில் 30 நாடுகளில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிரான பிரசாரத்திலும் அங்கு ஈடுபட்டுள்ளனர்,' என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி.க்கு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

                                    


தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், மத்திய தணிக்கைத் துறை(சிஏஜி) அமைப்புக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதி மத்திய அரசுக்கு கட்டணமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாய் ஆதாரங்களை தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய தணிக்கைத் துறைக்கு உள்ளது. அதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி. முயன்றபோது அதை எதிர்த்து அந்நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசுடன் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை பகிர்ந்து கொள்வதாக சிஏஜி அமைப்பு தவறாக கருதியுள்ளது. இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிமக்கட்டணம் மட்டுமே செலுத்துகின்றன. அது, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக உள்ளது,” என்று தெரிவித்தன.
இதை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “தொலைத்தொடர்பு நிறுவனங் களின் கணக்கில் மத்திய அரசின் வருவாய் அடங்கி இருப்பதால், அந்த கணக்கை தணிக்கை செய்ய சிஏஜி அமைப்புக்கு சட்ட அதிகாரம் உண்டு,” என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு , மொபைல்போன் நிறுவனங்களின் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகி ருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள உத்தரவில், “தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்கை தணிக்கை செய்ய சிஏஜி அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானதே,” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக