திங்கள், 12 ஆகஸ்ட், 2019

2013 முதல் 2019 வரை தீர்க்க முடியாத பெரிய பிரச்னை BSNL லில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த மாத சம்பளம் அந்த மாதமே கிடைக்க வேண்டும் என்பதே. இந்த உத்தரவு அன்றைக்கு Labour Enforcement Officer ராக அன்று புதுவையில் பணியாற்றிய மரியாதைக்குரிய சரவணன் அவர்களால் போடப்பட்ட உத்தரவு இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து , ஒப்பந்ததாரர் நமது இலாக்காவில் பணத்தை பெற்றுதான் ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் அளிப்பது என்பது தவறு, முதலாளி என்பவன் முதல் போட்டுத்தான் பணிவாங்க வேண்டும், நிர்வாகம் கொடுக்க தவறும் பட்சத்தில் . அல்லது நமது இலாக்கா கொடுத்த பணத்தை ஒப்பந்ததாரர்  கொடுக்காமல் ஏமாற்றும் பட்சத்தில் இலாக்காவே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நேரடியாக சம்பள பட்டுவாடா செய்து சம்பந்தப்பட்ட பணத்தை ஒப்பந்ததாரர் கொடுக்கும் BILL கழித்து கொள்ளலாம். இன்றைய நிலையில் யாரை குற்றம் சொல்வது என்று தெரியா நிலை. நிர்வாகம் ஒரு மாதம் இரண்டு மாதம் தரவில்லை என்றால் ஒப்பந்ததாரர் கேட்கலாம் 6 மாதமாக வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கு தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த இன்னலுக்கு ஆட்படுத்திவிட்டது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக