ஞாயிறு, 3 நவம்பர், 2019

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ...ஏற்றிவிட்ட ஏணியை எட்டி தள்ள நினைக்கலாமா ? கூட்டி வைத்து ஓட்டு வாங்கி தனிக்குடித்தன கூட்டாஞ்சோறு ஆக்கலாமா ? ஓட்டு வாங்க C.சிங்,பொதுச் செயலாளர் C.K.மதிவாணன் மூத்த அகில இந்திய துணைத் தலைவர் வேண்டும்.ஓட்டு வாங்கிய பின்னர் ஏன் ஏறினாய் முருங்கைமரம் மீண்டும்.

ஒரு ஓட்டு கூட உன் சங்கத்திற்கு வாங்கி கொடுக்க முடியாதவர்கள் பெயர் எல்லாம் பட்டியலே இருக்கிறது. ஓட்டு கேட்டு ஓடோடி வந்த தோழன் பெயரை நீக்கிவிட்டு நடத்துவதாக வெற்றிவிழா .தலைவன் கட்டளையிட்டு இருந்தால் தமிழகமே மட்டையாகி ஆகியிருக்கும்.சொல்லிப் பார்த்தோம் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று, அது நாய்வால் அப்படித்தான் இருக்கும் என்று எங்களுக்கு அறிவுரை சொன்னார். கடந்தகால வரலாற்றை மட்டும் எழுதத் தெரிந்த உங்களுக்கு நிகழ்கால தொழிற்சங்க நடைமுறைகளை பற்றி எழுத தெரியவில்லை.ஏனென்றால் தொழிற்சங்கம் உங்களோடு இல்லை. உங்களை நம்பி இருந்த தொழிலாளர்கள் உங்களிடம் இல்லை.பேருக்கு சங்கம் நடத்தி ஒவ்வொரு ஊருக்கும் உங்கள் கோஷ்டி கூட்டமே நடந்தேறி வருகிறது.அதில் இது ஒரு விழா .ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் இருவேறு பிரிவுகள் இருப்பது தெரிந்தும் இன்றும் மாநில சங்கம் ஒரு நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது என்றாள் ஏன் இந்தக் கூட்டத்தில் நமது சங்க தோழர்கள் கலந்துகொண்டு வேண்டும் என்ற வினா எழுகிறது ? எப்படியும் விருப்ப ஓய்வு திட்டத்திற்குப் பின் தமிழ்நாடும் சென்னையும் இணைக்கப் போகிறார்கள் என்பதை யாரும் தவிர்க்க முடியாது.விதி வலியது யாரும் வெல்ல முடியாதுநாளை நமதே!!! எந்த நாளும் நமதே !!!தோழமையுடன்S.ஆனந்தன் மாநிலச் செயலாளர்தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்-தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்...