திங்கள், 29 ஏப்ரல், 2019


ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டு




Image may contain: one or more people, crowd and outdoor


இன்றைய தினம் இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன. 

1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது. பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக் காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர். 10 நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்டப்பிறகுதான் பீரங்கிகள் ஓய்ந்தன. ‘‘சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்’’ என்று கொக்கரித்தான் பிரிகேடியர் ஜெனரல் டயர். இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர்இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 

ஆண்டுகள் 100 ஆனாலும், அன்று உயிர் இழந்தவர்களின் ரத்தம்தான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு உரமிட்டது. சுதந்திரத்துக்காக உயிர்நீத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாலியன்வாலாபாக் தியாகி களுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் கடமை வாழும் தலைமுறைக்கு இருக்கிறது. 

எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ உயிர்கள் சுதந்திரத்துக்காக பறிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான சரித்திர சம்பவம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலையாகும். ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்களை, ஆங்கிலேய ராணுவம் இப்படி கண்மூடித்தனமாக கொன்றுகுவித்ததை இன்றளவும் இந்தியா மட்டுமல்ல, உலகமே கண்டித்து வருகிறது. இன்னுயிரை இழந்தும், ரத்த வெள்ளத்தில் காயமடைந்தும் கிடந்த அந்த வீரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. வணங்குதலுக்குரியது. இந்த சம்பவத்துக்கு பிறகுதான் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தியாகமூச்சு காற்றிலேதான் சுதந்திர கொடி பறந்துகொண்டு இருக்கிறது. அந்த தியாகிகளின் ரத்தம்தான் நம் சுதந்திர நாட்டின் வெற்றி திலகம். இந்தநாளில் ஜாலியன்வாலா நினைவிடம் இருக்கும் திசைநோக்கி இந்தியர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்துவோம். 

(கெனல் ரெஜினால்டு எட்வர்டு ஹார்ரி டையர் பஞ்சாப் மாகாணத்தின் அமிருதசரசு நகரில் ஜாலியன்வாலா பாக் படுகொலை செய்தவன்.
தனது 62 வயதில் தீவிர பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு 1927ஆம் ஆண்டு உயிரிழந்தான்.

பஞ்சாபு மாகாணத்தின் துணைநிலை ஆளுநர், சேர் மைக்கேல் ஓ டயர், போராட்டம் நடத்திய இந்தியர்களை பஞ்சாபிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டவன் 
1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் படுகொலை நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர்,(13மார்ச்1940) பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து 
ஓ டையரை சுட்டுக் கொன்றார்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக