திங்கள், 17 டிசம்பர், 2018

O.P. குப்தா ஒரு தீர்க்கதரிசி
நமது தொலை தொடர்பு இலாகாவை இரண்டு நிலைகளில்தான் மதிப்பிட முடியும் அது குப்தாவிற்கு முன் , குப்தாவிற்கு பின் என்றுதான் .
தோழர்.குப்தாதான் கார்பரேஷனுக்கு ஒப்பு கொண்டார் நங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னவர்கள்தான் BSNL உருவான அன்று முதல் பந்தில் உட்கார்திருந்தது.நங்கள் கார்பொரேஷன்னுக்கு வரவில்லை என்று இன்றைய ITS அதிகாரி போல் இருந்திருக்கலாம் , ஆனால் குப்தாவை குறை சொல்லியே சங்கம் நடத்த தெரிந்த இவர்களுக்கு அவருக்கு பின் சங்கத்தை எவ்வாறு நடத்துவது என்று தெரியவில்லை. விளைவு நடுத்தெருவில் நாம் . தோழர் .O.P. குப்தா ஒரு தீர்க்கதரிசி இதனை தவிர்க்க இயலாது, அதனை ஏற்று, நமது தோழர்களுக்கு எதாவது இயன்றவரை செய்ய வேண்டும் என்று யோசித்து தொலைநோக்கு பார்வையோடு பார்த்த தலைவன் வாழ்ந்த காலம் ஓ.பி.குப்தாவிற்கு முன். அடுத்த காலம் ஓ.பி.குப்தாவிற்கு பின் ஒன்றுமே சொல்லத்தேவையில்லை போராடி பெற்ற சலுகைகளையும் உரிமைகளையும் இழந்த காலம் அதுதான் இன்றைய காலம். தோழர் குப்தா செப்டம்பர் போராட்டத்தில் யாரையும் நம்பி போராட்டத்தை துவக்கவில்லை தன்நம்பிக்கையை வைத்து களம் கண்டார் வெற்றியடைந்தார் . அன்று மத்திய அரசாங்கம் கூறியது 1000 நாள் போராடினாலும் பென்ஷன் என்பது உங்கள் நிறுவனத்திற்கு கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறியாது . போபால் சென்ற அன்றைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை மூன்றாவது நாள் போராட்டத்திற்கு விமானம் மூலம் வரவைத்து ஒரு நலத்தோரு பென்ஷன் உடன்பாட்டை போட்ட ஓ.பி.குப்தாவின் சங்கமா ? இன்று அமைச்சருக்காக ஏழுநாட்கள் காத்திருக்கும். அடகு பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் வைர அட்டிகை கழுத்தில் அழகுதரும் என்று எதிர்பார்ப்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டது போன்று இருக்கிறது
Image may contain: 4 people, including Babu Varadharaj, people smiling, people sitting and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக