திங்கள், 17 டிசம்பர், 2018


டிசம்பர்- 3 துவங்கும் நாடுதழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட இன்றைய பொழுதை பயன்படுத்திக் கொள்வோம். இன்று (டிசம்பர் 2)நிர்வாகம் நமது தலைவர்களை மதியம் 12 மணியளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளது. எப்படியாவது நாளை துவங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்திட நிர்வாகம் சாகசங்கள் செய்கிறது. அது நாம் முன்வைத்துள்ள மிக நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்யாமல் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல வேலைநிறுத்தம் வேண்டாம் என்பதை மட்டுமே வற்புறுத்தி வருகிறது. இது நியாயமற்ற அணுகுமுறையாகும்.
ஜனவரி 2007 க்கு பின்னர் கடந்த 12 ஆண்டாய் நமக்கு ஊதியம் மாறாத அவலம் தொடர்கிறது. 2002 ஜனவரிக்குப் பிறகு அலவன்ஸ்கள் மாறாமல் " என்றும் 16 ஆக மார்கண்டேயனைப் போல" நீடிக்கும் கொடுமை. இந்த அக்கிரமம் போதாதென்று நிர்வாகம் அலவன்ஸ்கள் குறித்து பேச முடியாது என சண்டித்தனம் செய்கிறது. "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல" நமது அலவன்ஸ்களை 31-12-2016 தேதியில் இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப் போவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இந்த அநீதிகளை களைய முயலாமல் வெறுமனே நமது வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வற்புறுத்துவதால் எந்த பயனும் இல்லை.
முக்கிய பிரச்சினைகளான ஊதிய மாற்றம் மற்றும் அலவன்ஸ்கள் உயர்வு குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை எனில் வேறு எந்த காரணம்/ சாக்கு சொல்லி ஏ.யூ.ஏ.பி.தலைமை இப்போதைய வேலைநிறுத்தத்தை தவிர்க்க முயன்றால் அது நம் அனைவருக்கும் பெரும் இழிவையும் இழப்பையும் ஒருசேர அளிக்கும். எனவே காலவரையற்ற வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி துவங்குவோம். போராடாமல் புதுவாழ்வு இல்லை.
போராட்ட வாழ்த்துக்களுடன்
சி.கே.மதிவாணன்
தலைவர்/ஏ யூ ஏ பி
சென்னை தொலைபேசி மாநிலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக