புதன், 20 டிசம்பர், 2017

சொல்லத்தான் வேதனையாய் இருக்கிறது ....


உழைத்தவன் வேர்வை மண்னை தொடும் முன் அவன் உழைபிற்கான ஊதியம் கொடுக்கப்படவேண்டும் இது நியதி . ஆனால் நமது நிர்வாகத்தில் எவ்வளவு குளறுபடிகள் சொல்ல முடியா சோகம் .
இன்றுவரை தமிழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழிங்கப்படவில்லை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் சங்கங்கள் ..
உண்மைதான். பாவம் தொழிலாளி வாடகை ,பால் பாக்கி ,அன்றாட செலவு என்பது எண்னி பார்த்தால் வருத்தம் நிறுத்தம் இல்லாமல் போகிறது . 
இதனால் தாங்கள் நமது சங்க நிலைபாடு ...
1). காண்ட்ராக்டர் பில் வந்தாலும் வராவிட்டாலும் சம்பளம் 10 தேதி வழங்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் காண்ட்ராக்டர் பில்லில்  பெனலிட்டி  போட்டு வசூலிக்க வேண்டும் .

2) காண்ட்ராக்டர் பில் வந்தவு டன்  சரிபார்ப்பு பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் நிர்வாகம் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிவிடவேண்டும் . அனுப்பாத பட்சத்தில் அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க பட வேண்டும் .

போராட்டம் அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக