சனி, 9 டிசம்பர், 2017

வேலை நிறுத்தம்

சில கேள்விகளும் பதில்களும்

டிசம்பர் 12,13 வேலை நிறுத்தம் முக்கியமானது ஏன்?

01.01.2017 முதல் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள மாற்றம் நடைபெற வேண்டும். இன்று பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 2020 க்குள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே சம்பள மாற்றம் மிக மிக அவசியம். ஒருவேளை சம்பள மாற்றம் ஏற்படாவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்று வரும் சம்பள விகிதமே தொடரும். விளைவாக ஓய்வூதியம் பாதிக்கப்படும். எனவே சம்பள மாற்றத்தை பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சம்பள மாற்றம் செய்திட BSNL நிறுவனம் விரும்பினாலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. அரசு அனுமதி தருமா? தராது என்றால் வேலை நிறுத்தம் அவசியமானது. வேறு வழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வழியில்லை.

BSNL நிறுவனம் ஏதும் செய்ய முடியாதா?

BSNL நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும்  ஒரு பொதுத் துறை நிறுவனம். மத்திய அரசின் கொள்கை நிலைபாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. விளைவாக கால்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியில் ஓட வேண்டியுள்ளது. உண்மையில் கடினமான முயற்சி காரணமாக போட்டியில் BSNL நிறுவனம் நிலைபெற்று நிற்கிறது. எனினும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கட்டணங்களை மத்திய அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை. விளைவாக லாபத்துடன் இயங்கி வந்த நிறுவனம் நஷ்டதில் தள்ளப்பட்டது. லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் காட்டி சம்பளம் மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசில் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பள மாற்றம் மறுக்கப்படவில்லை. எனவே மிக முக்கிய்மான கொள்கை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாப நஷ்ட கணக்கு பார்ப்பது அனுமதிக்கப்பட்டால் வருங்காலத்தில் சம்பள மாற்றமே நடைபெறாது. இந்த பின்னணியில் இந்த போராட்டம் அதி முக்கியமானது. அதில் பங்கேற்பது அவசியமானது.

BSNL நிறுவனத்திலிருந்து தொலைத் தொடர்பு கோபுரங்களை பிரித்து 

தனி அமைப்பு ஏற்படுத்துவதை ஏன் எதிர்க்க வேண்டும்? அது எப்படி 

ஊழியர்களைப் பாதிக்கும்?

BSNL நிறுவனத்திற்கு என  65000 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே தனியாருக்கு அவர்களின் கருவிகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்வே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் இல்லை. அந்த அமைப்பை BSNL நிறுவன ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் அதற்காக ஊழியர்கள் புதிய அமைப்பிற்கு மாற்றப்படுவார்கள். இட மாற்றம் என்பதைவிட ஊழியர்களின் சேவை விதிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கப்படவில்லை. குறிப்பாக இன்று BSNL ஊழியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் முதலியவை தொடருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களுடன் பேசி தீர்வு காணவேண்டும்.

போராட்டம் வெற்றி பெறுமா?


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த போராட்டம் வெற்றி பெறும் 
என்பதற்கான நம்பிக்கையே அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன என்பதுதான். வங்கி உட்பட பல நிறுவனகங்களில் அனைவரும் ஒன்றுபட்டு போராடி சம்பள மாற்றத்தைப் பெற்றுள்ளன. அதே வழியில் ஒன்றுபட்டு போராடி வெற்றியை ஈட்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக