செவ்வாய், 2 மே, 2017

சென்னையில் கூடுவோம்…

கோடிக்கணக்கில் உணவு உற்பத்தி…ஆனால் கோடிக்கணக்கில் மக்கள் பட்டினி…கோடிக்கணக்கில் பால் உற்பத்தி…ஆனால் கோடிக்கணக்கில் குழந்தைகள் பட்டினி…கோடிக்கணக்கில் மருந்துகள் உற்பத்தி…ஆனால் கோடிக்கணக்கில் மக்கள் சாவு…ஏன் இந்தக்கொடுமை…? யார் காரணம்?விடை தெரியாக் கொடுமைக்கு…விடைபகர்ந்தான் மே 5 1818ல் பிறந்த…கார்ல் மார்க்ஸ் என்னும் ஒரு மாமனிதன்…மார்க்ஸ் பிறந்தார்…மார்க்ஸின் வறுமை தீரவில்லை…ஆனால் மக்களின் வறுமை தீரத்தொடங்கியது…”மார்க்ஸின் குழந்தைகள் பிறந்தபோதுஅவர்களுக்கு பாலுக்கு காசில்லை…மார்க்ஸின் குழந்தைகள் இறந்தபோது..அவர்களுக்கு சவப்பெட்டிக்கு காசில்லை…”என மார்க்ஸின் வரலாற்றை எழுதிய ஹென்றி ஓல்கவ்… மனம் நொந்து எழுதினார்…வறுமையிலே பிறந்து… வறுமையிலே முடிந்தஒரு மாமனிதன் தன் வாழ்நாள் முழுவதும்வறுமையைப் போக்கும் பணி பற்றியே சிந்தித்தான்…ஆண்டுகள் 200 ஆனபோதும்…இன்றளவும் மக்கள் போற்றும் மகத்தான சிந்தனையாளனின்…200வது பிறந்த நாளில்…சென்னையில் கூடுவோம்…மார்க்சியம் இல்லாமல் மாற்றங்கள் இல்லை….மாற்றங்கள் இல்லாமல்… முன்னேற்றங்கள் இல்லை…



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக