வியாழன், 28 ஏப்ரல், 2016

BSNLEU போல ஆமாம் சாமி சங்கமல்ல !  
               ஆர்பரித்த சங்கம்  NFTE !!

நமது துறை நிறுவனமாக மாற்றப்படும் என்று வாஜ்பாய் அரசு 
அறிவித்தவுடன் ஊழியர் நலன் காக்க 2000, செப்டம்பர் 6 முதல் 9 
வரை உக்கிரமான வேலை நிறுத்த போராட்டம் மூலம் நாட்டையே
ஸ்தம்பிக்க வைத்து,  மத்திய அரசை நிர்பந்தித்து அரசு பென்சன், 
வேலை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க வைத்து  
அனைத்து ஊழியரையும் நெஞ்சு நிமிர BSNLக்கு  Option கொடுக்க 
வைத்த பெருமைமிகு சங்கம் NFTE.

அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், காட்டிக் கொடுத்து  
BSNL தொழிற்சங்க வரலாற்றில்  கரும்புள்ளிக்கு ஆளானது  
நம்பூதிரி, அபிமன்யூ தலைமை.    

நிறுவனம் துவங்கும்முன் அதை அனுமதியோம் என்று வெற்று 
கோஷமிட்ட  நம்பூதிரி,  BSNL நிறுவனம் துவங்கிய நாளன்று முதல் வரிசையில் அமர்ந்து வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு
இருந்ததும் வரலாறு.

தனது கட்சிக்கென்று தனிக் கடை துவங்க சரியான நேரம் என்று முதன்முதலாக   BSNL பெயரில் சங்கம் துவக்கியவர்  நம்பூதிரி..

 BSNLக்கு Optionஐ முந்திக் கொண்டு கொடுத்ததும் அவர்களே !.

பென்சன் நாயகன் தோழர் குப்தாஅவர்கள் காலமான அன்றுதான் 
நம்பூதிரி தன் உள்ளத்தில் இருந்த உண்மையை கீழ்க்கண்டவாறு 
எழுதினார்.

(NFTE, FNTO, BTEF )மூன்று சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் 
கடும் எதிர்ப்பையும் புறந்தள்ளி மத்திய அரசு BSNL நிறுவனத்தை 
1-10-2000 அன்று உருவாக்கியது. BSNLக்கு விருப்பம் தரும் (option)  
ஊழியர்களுக்கு  அரசு பென்சன் வழங்கப்படும், DOTல் பணியாற்றிய  ஆயிரக்கணக்கான கேசுவல் ஊழியர்கள் நிரந்தரப் படுத்தப்படுவார்கள் என்று அரசுக்கும் மூன்று சம்மேளனங்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு உருவாவதில் தோழர் குப்தா அவர்களின் பங்கு மகத்தானது. 


From : vannamboodiri.com dated 3-2-2013


                                 VAN Namboodiri's Blog


                   BSNL formed

Despite strong protest and strike actions by the Federations and Unions in DOT, 

the government formed the new telecom corporation, Bharat Sanchar Nigam 
Limited (BSNL). It came in to being on 1st October 2000. An agreement was 
made by the three federations with the government ensuring govt. pension for 
the BSNL absorbed employees as also regularisation of thousands of casual 
labour engaged in DOT. Com.OPG played a dominant role in reaching this 
agreement.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக