சனி, 2 ஏப்ரல், 2016

முட்டாள்களாகும் தினம்

ஏப்ரல் ஒன்று.
வழக்கமாக முட்டாள்கள் தினம் என்று சொல்வார்கள்.
ஆனால் தோழர் அபிமன்யூ 2016 ஏபரல் ஒன்றை
பி.எஸ்.என். எல் ஊழியர்களை முட்டாள்களாகும் தினமாக மாற்றியுள்ளார்.
ஆறு வருடங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் பொழுதைக் கழித்து, பொன்னான போனசைப் பறிகொடுத்தது BSNLEU.
லாபமோ நட்டமோ 10000 ரூபாய் போனஸ் உறுதி செய்து சாதனை படைத்து விட்டோம் என்று சொல்லி ஊழியர்களை ஏமாற்றியது BSNLEU.
உற்பத்தியுடன் இணைந்த போனசை லாபத்துடன் கூடிய இன்செண்டிவ் ஆக மாற்றி உடன்பாடு கண்டு துரோகம் இழைத்தது BSNLEU.
உயிரிழந்த போன்சுக்கு மீண்டும் உயிர் கொடுக்க் வைத்த்து NFTE இயக்கம்தானே.
போன்சுக்காக கமிட்டி அமைக்க வைத்தது NFTE இயக்கம்தானே.
2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் போனசுக்காக இயக்கம் நடத்தியது NFTE இயக்கம் மட்டும்தான்.
இனி போனஸ் என்பதை எவராலும் பெற முடியாது என்று சென்னையில் பேசியது அபிமன்யூ அல்லவா?
30.03.2016 போன்ஸ் கமிட்டி கூட்டத்தைப் புறக்கணித்தது யார்?
புறக்கணித்தது மட்டுமல்லாமல் வாக் அவுட் செய்து விட்டோம் என்று வாய் கூசாமல் பொய் சொன்னது யார்?
புறக்கணித்தது மட்டும் அல்லாமல் NFTE இயக்கம் மீது பழி சுமத்தும் தோழர் அபிமன்யூ அவர்களே உண்மை வெளி வரும் போது உங்கள் சாயம் வெளுக்கும்.
போனசே கிடையாது என்று சொன்ன நிர்வாகத்தை போனஸ் தருவோம் என்று சொல்ல வைத்த NFTE இயக்கத்தின்  பெருமையை பொய்களால் குலைக்க முடியாது.
போனஸ் என்பது மீண்டும் கிடைக்கும் என்ற நிலை உருவானதை, சகித்துக் கொள்ள முடியாமல்  ஆர்ப்பாட்டம் அதுவும் ஏப்ரல் ஒன்று  அன்று அறிவித்து ஊழியர்களை முட்டாளாக்கும் முயற்சியை மே 10 அன்று ஊழியர்கள் முறியடிபார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக