செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றிகரமான அகில இந்திய 


மாநாடு !


























ஜபல்பூரில் அக்-10முதல் 12 வரை நடைபெற்ற அகில இந்திய 

மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் 

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தோழர் C.K. மதிவாணன், நிர்வாகிகள் பட்டியலை முன் மொழிந்தார்.



                                              தலைவர்: இஸ்லாம் அகமது (டெல்லி)

                                பொதுச்செயலர்:சந்தேஸ்வர்சிங். (பீகார்)


                                       பொருளாளர்: A.ராஜ்மௌலி (ஆந்திரா)

             சம்மேளனச்  செயலர்கள்:  K.S.சேஷாத்திரி (கர்நாடகா)
                                                                  K.K.சிங் (ஜார்கண்ட்)
                                                                  ராஜ்பால் (டெல்லி NTR))
                                                                  N.J.பாட்டியா ( குஜராத்)
                                                                 G.செயராமன்  (தமிழ்நாடு)
                                                                 குல்சார் சிங் (மத்தியபிரதேசம்)
                                                                 S.S.G  (தமிழ்நாடு)
                                                                 K.அஞ்சையா (ஆந்திரா)
                                                                 T.R.  ராசசேகரன் (சென்னை)


தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நமது மனம்

 நிறைந்த வாழ்த்துக்கள்.

---------------------------------------------------------------------------------------------------

                                    Mathivanan, the Great.......
 
 
Leaders become great not because of their power.
But because of their ability to empower others.
 




     தொழிற்சங்கங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோரில் பெரும்பான்மையினர் (Serving  Employee) பணியில் உள்ளோராக
 இருக்கவேண்டும்.

பணி ஓய்விற்குப் பிறகு நடக்கும் மாநாடுகளில் தங்களது சங்க பொறுப்பை மீண்டும் ஏற்காமல், இளைய தலைமுறைக்கு வழி விட்டு,அவர்களுக்கு ஆலோசகர்களாக, வழிகாட்டிகளாக மூத்த தலைவர்கள் இருக்க வேண்டும்.

இதனை பல அரங்குகளிலும் வலியுறுத்தி வருபவர் தோழர் சி.கே.மதிவாணன்.

   மாநாட்டில் அனைவரும் எழுச்சி பெறும் வகையில் நீண்ட உரையாற்றிய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன், 
இறுதியில்,  தனது நிலைபாட்டை  நிறைவேற்றும் வகையில்
தான் பணி ஓய்வு பெற்ற பிறகு முதன் முதலாக நடக்கும் 
இம்மாநாட்டில் மத்திய சங்க பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

பல தோழர்கள் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய 
வேண்டும் என்று வலியுறுத்திய போதும், தான் அவர்களது 
உணர்வை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், தனது நிலைபாட்டை மாற்றுவது  சாத்தியமில்லை என்று நயமாக எடுத்துரைத்தார். 

அது மட்டுமல்லாது, மற்ற புதிய நிர்வாகிகளை மன
மகிழ்ச்சியோடு அவரே முன்மொழிந்தார்.

சென்னை மாநிலத்தின் சார்பாக  தோழர் T.R ராஜசேகரன் 
(போன் மெக்கானிக்) அவர்களை செயலர் பொறுப்பிற்கும் 
இளைய தோழர் K.M.இளங்கோவன்  (போன் மெக்கானிக்) 
அவர்களை நிரந்தர அழைப்பாளர் பொறுப்பிற்கும் நியமிக்க வைத்தார். 

 புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்தவுடன் பல முன்னணி அகில இந்திய தலைவர்கள், சொன்னதை செய்த 

    " Com.Mathivanan, you are really great 

என்று கைகொடுத்து மகிழ்ந்தனர்.

 1994ல், நம்பூதிரி அணி கடும் அராஜகத்தை அரங்கேற்றிய  திருவனந்தபுரம் அகில இந்திய  மாநாட்டில், அதனை தைரியமாக எதிர்கொண்ட தளபதியாக செயல்பட்ட காரணத்தால், அம்மாநாட்டில் அகில இந்திய அமைப்புச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் மதிவாணன், 2014 வரை, நமது சங்க வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் சிறப்பாக செயல்ட்டுள்ளார். அவருக்கு நமது நன்றியையும் பாராட்டையும் உரிதாக்குகிறோம்.
-----------------------------------------------------------------

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள்


சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் 



சம்மேளனச் செயலர் தோழர் S.S.கோபாலகிருஷ்ணன்



நிரந்தர அழைப்பாளர்  புதுவை தோழர் P. காமராஜ் 
( தோழர் பட்டாபி அருகில்)








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக