ஞாயிறு, 28 செப்டம்பர், 2014


சென்னை  NFTE-BSNL  மாநிலத் 

தலைவர் எம்.கே.ராமசாமி 

மாபெரும் பிரிவு உபசாரவிழா


சென்னை  NFTE-BSNL  மாநிலத் தலைவர் எம்.கே.ராமசாமி அவர்கள் 
இந்த மாதம் ஓய்வு பெறுவதை முன்னிட்டு மாபெரும் பிரிவு உபசார
விழா அண்ணாரோடு தொலைபேசியகத்தில்  26-09-2014 அன்று  நடைபெற்றது. 

 சென்னை  மாநிலச் செயலர் சி.கே.எம்.தலைமை வகித்தார். 

சகோதர சங்கத் தலைவர்கள் பாராட்டிப் பேசினார்கள். 

முன்னாள் சம்மேளன செயலர் ஆர்.கே, சம்மேளனச் செயலர் கோவி.செயராமன், மாலி, கோவை சுப்புராயன், கம்யுனிஸ்ட் 
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை ,
முதுபெரும் கம்யுனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் 
பாராட்டி பேசினார்கள்.

 நிர்வாகத்தின் சார்பாக நமது முதன்மை பொதுமேலாளர், 
பொது மேலாளர் நிர்வாகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

 இறுதியாக தோழர்.ராமசாமி ஏற்புரை வழங்கினார்.  

கிளை, கோட்ட, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் நூற்றுக்
கணக்கான தோழர்கள்  விழாவில் கலந்து கொண்டனர். 



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக