வியாழன், 14 ஆகஸ்ட், 2014



சுதந்திரமும் இந்திய வர்த்தகமும்!!
 
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு காரணம் வியாபாரம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? இல்லை என்று நீங்கள் மறுத்தாலும் நம்பி தான் ஆகவேண்டும். கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்று இந்தியாவுக்குள் வியாபாரம் செய்ய வரவில்லை என்றால் இந்திய அடிமைபட்டிருக்காது. அப்படி அடிமை படாவிட்டால் இந்தியா சுதந்திர நாடாகவே இருந்திருக்கும். 
 
இன்று நாம் இந்தியாவை ஐடி துறையின் மையமாக விளங்குகிறது என்கிறோம். சுதந்திரத்திற்கு முன்பு அனைத்து இயறகை வளங்களுக்கும் இந்தியா ஹப்பாக விளங்கியுள்ளது. வெளிநாட்டு வியாபாரிகளுக்கு தெரிந்த இதனை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். இன்று நாம் மேலாண்மை படிப்பில் பயிலும் ''கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்‌ஷன்'' ''மார்க்கெட் ட்ரெண்ட்'' ''ஃபர்ஸ்ட் மூவர் அட்வான்டேஜ்'' ''மோனோபோலி'' போன்ற விஷயங்களை இந்திய வாடிக்கையாளர்களிடம் அன்றே நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறது கிழக்கிந்திய கம்பெணி.
 
 
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு வரை தனித்தனியே குறிப்பிட்ட பகுதியை சார்ந்த மக்கள் அவர்களது அருகில் உள்ள மக்களின் தேவைக்கு ஏற்றவாறு வியாபாரம் செய்து வந்தனர். சிலர் அந்நிய வணிகத்திலும் ஈடுபட்டு வந்தனர். பக்கத்து நாடுகளான இலங்கை, சீனா, பாகிஸ்தான் (அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியா), போன்றவற்றில் பொருட்களை விற்று வந்தனர். 
 
வாஸ்கோடகாமாவின் வருகை, அவரது குறிப்புகள் இந்திய வர்த்தக சந்தையை விளக்கி இருந்தன. அதன் அடிப்படையில் இந்தியா வந்தது கிழக்கிந்திய கம்பெனி இங்கிலாந்து ராணியின் அனுமதி பெற்று வந்த அவர்களை இந்தியாவும், இந்திய மக்களும் அவர்களது பொருட்கள் மீதுள்ள மோகத்தில் முதலில் ஏற்றுக்கொண்டனர் என்பது தான் உண்மை. அதனை தொடர்ந்து அவர்கள் தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 13 டாலராக இருந்தது. 
 
 
உங்களுக்கு இது அதிர்ச்சி அளிக்க தான் செய்யும் என்னது ஒரு ரூபாய் 13 டாலருக்கு சமமா? இந்த நிலையை மாற்ற தான் விரும்பி தான் ஆட்சியை பிடிக்க தொடங்கியது. இந்தியர்களது பழக்க வழக்கங்கள், அவர்களது பொருட்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த அவர்கள் வியாபாரத்தின் மூலம் இந்திய மக்களை அடிமைப்படுத்த துவங்கினர். 
 
இவையெல்லாம் சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலைமை சுதந்திரம் வாங்கியபோது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 
 
இனி இந்திய அடிமை நாடு இல்லை! சுதந்திர நாடு இந்தியாவின் சுதந்திரம் வியாபார உலகில் இந்தியர்களை தனித்து காட்டும் என புத்துணர்ச்சியோடு ஆரம்பித்தது புதிய இந்தியா. தனித்தனி அரசுகளாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கிணைக்கவே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதற்குபின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் புதிய வியாபாரங்கள், அதன் ஏற்றுமதி, அரசின் புதிய திட்டங்கள் என வியாபாரம் இந்தியாவில் உள்ள எல்லா பகுதிகளிலும் பரவ தொடங்கியது.
 
 இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனகளும் தன்னை நிலைபடுத்த துவங்கின. நேரு தலைமையிலான அரசு இந்தியாவில் 1950ம் ஆண்டு ஹிந்துஸ்தான் இரும்பு தொழிற்சாலையை துவங்கியது அப்படியே படிப்படியான மாற்றங்களால் இந்தியா வியாபார உலகில் தன்னை நிலைப்படுத்த ஆரம்பித்ததற்கு அடையாளமாக பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை 1990ல் கொண்டுவந்து இந்தியாவும் உலகமயமாக்கலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
 
புதிய முயற்சிகளால் இந்திய பொருளாதாரம் வளர தொடங்கியது. மீண்டும் அந்நிய நிறுவனங்கள் தன்னை வியாபாரத்திற்காக மட்டும் என்ற அளவில் அனுமதி பெற்று இந்தியாவில் கடை திறந்தன. இந்தியர்களும் ''இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவேன்'' சுதேசி இந்தியாவை விரும்புகிறேன் என்றவர்கள் கொஞ்சம் தங்களை தேவைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் தளர்த்தி கொண்டு அந்நிய பொருட்களையும் பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு மாறினர். 
 
 
அமெரிக்கர்கள் பயன்படுத்தும் ஜீன்ஸ், இத்தாலியினரின் காஃபி, ஜெர்மனியின் தோல் பொருட்கள் எல்லாம் இன்று சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்தியர்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துவிட்டதால் ஆப்பிள் போனுக்கு கூட இந்தியாவில் ஆடி தள்ளுபடியில் கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
 
அந்நிய முதலீடு வந்தால் இந்தியா மீண்டும் அடிமைபடுத்தப்படும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறும் அதேவேளையில் , இந்திய நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுக்கு இந்திய சந்தையிலும், சர்வதேச சந்தையிலும் கடுமையான போட்டியை அளிக்கின்றன. இந்தியா சுதந்திரத்திற்கு பின் தன் வர்த்தக உத்திகளை மாற்றி இருக்கிறது. உலக மக்களின் ரசனை கூட சில நேரங்களில் இந்தியர்களின் ரசனையை கொண்டு முடிவெடுக்கும் அளவிற்கு மாறியுள்ளது. 
 
எனவே இந்தியா வியாபாரமும் சுதந்திரத்திற்கும் அதன் பின் உண்டான மாற்றங்களுக்கும் காரணமாய் இருந்திருக்கிறது அன்று ஒரு ரூபாயாக இருந்த ஒரு டாலர் மட்டும் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய்க்கு மேல் மாறியுள்ளது. பொருளாதார உலகில் பல அந்நிய பிராண்டுகளுக்கு வாழ்வாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
 
முன்பு வியாபாரம் செய்தவர்கள் அடிமைப்படுத்தியது மாறி இப்போது வியாபாரம் செய்ய வந்த நிறுவனங்கள் நான் இங்கே வியாபாரம் செய்வதை தான் விரும்புகிறேன் என்று அடிமையாகி கிடக்கும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது என்பதை நினைத்து பெருமைப்படுவோம்.இந்திய வர்த்தகமும் சுதந்திரமும் பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்று!
 
 
-ச. ஸ்ரீராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக