சனி, 2 ஆகஸ்ட், 2014

     

          நமது கூட்டுறவு சங்கம்  GTECS

" சிறப்பாக நிர்வகிக்கப்படும்  நிறுவனம் " 

என்று மத்திய அரசின் கூட்டுறவு துறையால்   

தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான  விருது வழங்கப் 

படுகிறது. 

மேலும் இந்திய நேபாள நட்புறவு விருதும் நமது 

 கூட்டுறவு  சொஸைட்டிக்கு ழங்கப்படுகிறது. 

இந்த விருது  3-8-14 அன்று காத்மண்டுவில் 

நடைபெறும் விழாவில்   சொஸைட்டி தலைவர் 

தோழர் வீரராகவன் அவர்களிடம்  வழங்கப்பட  ள்ளது.

 இந்த பாராட்டுகளை பெற உழைத்த சொஸைட்டி 

தலைவர், நிர்வாகிகள், மற்றும் ஊழியர்களுக்கு 

நமது  நல்வாழ்த்துக்கள்
             NFTCLன்   சிறகுகள் விரிகின்றன !

NFTCL
                

வருங்காலத்தில் நமது நிறுவனத்தில் அதிகாரிகள் மட்டத்திலும் 
"ஒப்பந்த அதிகாரிகள்" முறையை இனிப்பு கலந்து  திணித்திட 
நவீன முதலாளித்துவ வாதிகள் முயல்வர். அதன் ஒரு பகுதி 
முயற்சிதான் டிலாய்ட் அறிக்கை.

 ஆகவே NFTEன் மரபு சார்ந்த ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை 
இந்தியா முழுவதும் கட்டுவது இன்றைய காலத்தின் கட்டாயம்.

     அதன் ஒரு பகுதியாக மராட்டிய  மாநிலத்தில் பீட்,  ஜல்கான் மாவட்டங்களில் NFTCL அமைப்பின் மாவட்ட அமைப்பு கூட்டங்கள் 
3-8-2014 அன்று நடைபெற உள்ளது மனதை மகிழ வைக்கும் 
செய்தியாகும்.

  
நமது ஒப்பற்ற தலைவர்கள் O.P குப்தா, சந்திரசேகர், ஜெகன் 
ஆகியோரின் பெருமையே நிராதரவாக நின்ற லட்சக்கணக்கான 
மஸ்தூர் களின் வாழ்வில் ஒளிதீபத்தை ஏற்றினர் என்பதுதான்.

  அவர்களின் வழியில் NFTCL கொடியேந்தி இந்தியாவெங்கும் 
சங்கமமைத்து செயலாற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் 
உண்மையான அஞ்சலியாக இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக