ஞாயிறு, 1 ஜூன், 2014

பணிக்கேற்ற ஊதியம்..
WAGE FOR SKILLED LABORERS 

ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது எழுதப்பட்ட சட்டம். காரைக்குடி மாநில மாநாட்டு தீர்மானங்களில் ஒன்று. ஆனால் BSNLலில் எங்கும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எந்தப்பணி செய்தாலும் அவர்களுக்கு UNSKILLED சம்பளமே வழங்கப்படுகின்றது.

இப்பிரச்சினையை மதுரை NFTE மற்றும் TMTCLU மாவட்டச்சங்கங்கள் மதுரைப்பகுதி தொழிலாளர் ஆணையரின் தலையீட்டிற்கு கொண்டு சென்றன. இரண்டு மூன்று விசாரணைகள் நடைபெற்றன. ஒப்பந்த ஊழியர்கள் நலச்சட்டங்களின்படி அவரவர் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் இதை உடனடியாக BSNLலில் அமுல்படுத்த வேண்டும் எனவும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். BSNL நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளித்துள்ள   தொழிலாளர் ஆணையர், BSNL  தவறும் பட்சத்தில் ஒருதலைப்பட்சமான உத்திரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
===========================================================
தற்போதைய கூலி விவரம் - நாளொன்றுக்கு 

                      A பிரிவு நகரம்   Bபிரிவு நகரம்   Cபிரிவு நகரம் 
UNSKILLED             329                        273                      220

SKILLED/CLERICAL 400                      363                       309
============================================================
மதுரை மாவட்டச்சங்கங்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

காரைக்குடி மாவட்டத்திலிருந்தும் இது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதி மாவட்டச்சங்கங்களும் இப்பிரச்சினையை அந்தந்த பகுதி 
தொழிலாளர் ஆணையரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

காரைக்குடி வலை தளம் .....,

பாவம்  காரைக்குடி தோழர்கள்!!!

NFTCL  சங்கம் உத்தரவு பெற்ற நாள் 

01/04/2014 இந்த உத்தரவை பயன்படுத்தி எங்கள்

  கடலூர் மாவட்டத்தில் இந்த மாத சம்பளமே VDA

 (அதாவது  புதிய பஞ்சபடி இணைந்த சம்பளம் 

பெற்றுவிட்டோம் )என்பதை 

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . 



தோழர்களே!தோழியர்களே!!

நமது மாநிலசங்கத்திற்க்கு  NFTCL  கிடைத்திட்ட முதல் வெற்றி!!!

01-04-2014 முதல் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு VDA  உயர்ந்துள்ளது.

 மாநில சங்கத்தின் தொடர் முயற்ச்சியின் காரணமாக உயர்த்தப்பட்ட* VDA

 * அனைத்து மாவட்ட தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் கிடைத்திட

 வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர் நலத்துறை

 அமலாக்க அதிகாரி ( LEO )  அவர்கள் நமது BSNL தலைமை பொது 

மேலாளர் அவர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.இந்த உத்தரவை 

பயன்படுத்தி அனைத்து மாவட்டத்திலும்  நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு

 புதிய VDA-உடன் கூடிய ஊதியம் கிடைத்திட NFTCL மாநில நிர்வாகிகள்

 முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.மேலும் விபரங்களுக்கு மாநில

 செயலர் தோழர்  S.ஆனந்தன்  அவர்களை அணுக வேண்டுகிறோம் 





Add caption







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக