சனி, 21 ஜூன், 2014

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அரசு சாதகமாகசெயல்படுதல் என்பது கூடாது; கூடாது.

"வரிதீவிரவாதம் கூடாது" என்ற சொற்றொடர் NDAஅரசின் மந்திரிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாக உள்ளது.

காரணத்தை ஆழ்ந்து பார்ப்போம்

வோடாபோன் நிறுவனத்தின் மீது அன்றைய நிதியமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி அவர்கள் விதித்த வரியை தான் இன்றைய அரசு மந்திரிகள் குறிப்பிட்டு சொல்லி வருகிறார்கள்.

vodafone நிறுவனம் தனது மூலதனத்தை வேறு நாட்டின் மூலதனம் என்று சொல்லி அதன் மூலமாக வருமானவரிதவிர்ப்பு செய்ததை அடையாளம் கண்டு வரி விதிக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் அது சுமார் 2000 கோடி ரூபாயாக உள்ளது.

ஆனால், வோடாபோன் கம்பெனி, அரசின் உத்திரவிற்கு
கட்டுப்படாமல், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்
போம் என்று மத்திய அரசை மிரட்டி வருகிறது.

அந்நிய நாட்டின் மூலதனம் நம் நாட்டிற்கு வரவேண்டுமென்றால் எனக்கு போடப்பட்ட இந்த வரியை நீக்கவேண்டும் என்று வோடாபோன் சொல்லிவரும் நிலையில் மத்திய அரசு அதற்கு ஏதுவான சூழ்நிலையில்
வரிதீவிரவாதம் கூடாது என்று புதிதாக ஒர் வியாக்யானம் சொல்வது தனியார் கம்பெனிகளுக்க்கு ஆதரவாக புதிய அரசு செயல்பட துவங்கியுள்ளதை தெளிவாக்குகிறது.

இந்த நிலை, வோடாபோனுக்கு சாதகமானது  மட்டுமல்ல,  
நாட்டு நலனுக்கு கெடுதலானதும் ஆகும்.

அடுத்து, சட்டத்திற்கு புறம்பாக 3G ஸ்பெக்ட்ரத்தை லைசன்ஸ்
பெறாத பகுதிகளுக்கும் தனியார்கம்பெனிகள் கள்ளத்தனமாக
பங்கு போட்டது தவறு.... அதை சரிஎன்று சொன்ன தொலைத்
தொடர்பு தீர்ப்பாயத்தின் தவறானதீர்ப்புக்கு எதிராக  மேல்
முறையீடு தொடராது இருக்க அரசுமுடிவு எடுக்க உள்ளதாக
செய்திகள் கசிகின்றன. இந்தமுடிவும் தனியார் கம்பெனிகளான
வோடாபோன், ஐடியா, ரிலையன்ஸ்ஆகியோருக்கு சாதகமாகவும்,
BSNL நலனுக்கு எதிராகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.


நிதியமைச்சர் திரு அருண் ஜேட்லே கூறுகிறார், தான் இந்த 
விவகாரத்தில்ஈடுபடப்போவதில்லை என்று. இதிலுருந்தே புரிகிறது. 

இது 
எவ்வளவு மோசமான முடிவு! 
எந்த அளவிற்கு தனியார் கம்ப்பெனிகளுக்கு 
சாதகமான முடிவு!

வெளியீடு:சென்னை தொலைபேசி மாநிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக