Tuesday, 27 May 2014

மோடி அரசியல் இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி. ராஜா பேட்டி

இந்திமக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணியின் உருவாக்கத்தை வழக்கம்போல் கையில் எடுத்திருப்பவர்கள், இடதுசாரிகள்.
இதன் முக்கியக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா. மாநிலங்களவை உறுப்பினரான இந்தத் தமிழர், டெல்லியின் தலைமை அலுவலகத்தில் ‘தி இந்து'வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து...
மக்களவைத் தேர்தல் எந்தச் சூழலில் நடைபெறுவதாகக் கருதுகிறீர்கள்?
நம் நாட்டின் பொருளாதாரம் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில்தான் இந்தத் தேர்தல் நடை பெறுகிறது. இந்தப் பொருளாதாரச் சிக்கலால் நமக்கு அரசியல் நெருக்கடி, சமூக நெருக்கடி இன்னும் சொல்லப்போனால் தார்மீக நெருக்கடியும் ஏற்பட்டுள்ள சூழலில்தான் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிப்பது சாத்தியமில்லை.
ஒருபக்கம் பெருநிறுவனங்கள் பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. பில்லியனர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கூடிவருகிறது. ஆனால், ஏழைகள் எண்ணிக்கை உலகத்திலேயே அதிகமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 15 கோடி மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்து மேலே உயர்த்திக் கொண்டுவந்துவிட்டதாகக் கூறினாலும், அவர்கள் திட்டகமிஷனில் கூறிய வறுமைக் கோட்டினை அனைவரும் நிராகரித்தார்கள். மக்களுக்கு காங்கிரஸ் மீது கடும் கோபம் மற்றும் எதிர்ப்பு இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சி தோற்றுப்போகும்.
காங்கிரஸ் போனால், அடுத்துத் தாங்கள்தான் என்று பா.ஜ.க கருதிக்கொள்கிறது. பா.ஜ.க. ஒரு வலதுசாரி அரசியல் கட்சி. இந்தக் கட்சியை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துத்துவா எனும் மதவெறி அரசியலைக் கொண்டது. நம் நாட்டை ஜனநாயகம்தான் ஆள வேண்டும் என்ற முறையில்தான் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அமைத்திருக்கிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., இதற்கு நேரெதிராக இந்த நாடு ஒரு மதவாதக் கட்டமைப்புக்குள் அமைய வேண்டும் என்று சொல்கிறது.
மோடி பிரதமரானால் நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என பா.ஜ.க. சொல்கிறதே?
இன்றைக்கு இந்தியாவுக்கு ஒரு வலுவான தலைவர் தேவை என ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்துவருகிறது. இது ஏதோ ஒரு தனிநபரால்தான் முடியும்; அமானுஷ்ய ஆற்றல் கொண்ட மோடியால்தான் அது முடியும் என முன்னிறுத்துகிறார்கள். ஒரு சர்வாதிகாரத்தின் துவக்கமும் அடித்தளமும் இதுதான்.
வைகோ உட்பட பலரும், மோடி பிரதமரானால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பதுபோலப் பேசிவருகிறார்கள். இது நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. ஒரு அதிபர் தேர்தலைப் போலத் தேர்தல் நடத்துவதும், அதில் ஒருவரைப் பிரதமராக முன்னிறுத்துவதும் நாம் ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக முறையை உள்ளிருந்தே சீர்குலைப்பதாகும்.
ஹிட்லருடன் மோடியைச் சிலர் ஒப்பிடுகிறார்களே?
தற்போது இந்தியாவில் நிலவுவது போன்ற ஒரு சூழல் ஜெர்மனியில் இருந்தது. அந்தச் சூழலில் ஹிட்லர் ஒருவர்தான் வலுவான தலைவர் என்று சித்தரிக்கப்பட்டார். ஜெர்மனியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பவர் என்றே ஹிட்லர் முன்னிறுத்தப்பட்டார். இன்றைக்குப் பெரும் தொழில் நிறுவனங்கள் மோடியை நம்புகின்றன. அவரை வலுவாக ஆதரிக்கின்றன. இந்தியாவைக் காப்பாற்ற ஒரு தலைவர் வேண்டும், அது மோடியால்தான் முடியும் என்ற வலதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து, நாம் ஏற்றுக்கொண்டிருக்கிற இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இப்போது வீசும் அலை காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? மோடிக்கான ஆதரவு அலையா?
இது ஜனநாயகத்துக்கு ஆதரவான ஜனநாயக அலை என்றோ காங்கிரஸ் மீதான கோப அலை என்றோ சொல்ல லாமே தவிர, நிச்சயமாக மோடிக்கான ஆதரவு அலை அல்ல.
தேர்தலுக்குப் பின், மூன்றாவதாக ஒரு அணி உங்கள் பங்கேற்புடன் அமைந்து, அதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க முன்வருவீர்களா? அல்லது வறட்டுத்தனமாக மறுத்து பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைய விட்டுவிடுவீர்களா?
தேர்தலுக்குப் பின் வெளியாகும் முடிவுகளின்படி ஏற்படும் அரசியல் சூழலை வைத்துதான் எந்த முடிவும் எடுக்க முடியும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத மாற்றுக் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெறுகிறார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான சூழல் ஏற்படுகிறது என்பதையெல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மாற்று அணிகுறித்து பா.ஜ.க-வுக்கு ஒரு பயம் உருவாகியிருக்கிறது.
மூன்றாவது அணியின் முக்கிய நோக்கம் என்ன?
காங்கிரஸ் கட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். மதவெறி அரசியலை முன்னிறுத்துகின்ற பா.ஜ.க. அதிகாரத்துக்கு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கான ஒரு மாற்று அரசியல் உருவாக வேண்டும். இதுதான் மூன்றாவது அணியின் நோக்கம்.
காங்கிரஸ்-பா.ஜ.க-வின் பொருளாதரக் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று சொல்லிவருகிறீர்கள். ஆனால், நாட்டிலுள்ள இதர தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் எதற்கும் அப்படிப்பட்ட மாற்றுப் பொருளாதாரச் சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் உங்களால் எப்படி மாற்று அணியை உருவாக்க இயலும்?
இன்றைய நிலையில் பல அரசியல் கட்சிகள் பொருளாதாரச் சிந்தனையில் வேறுபட்டிருக்கின்றன. அந்நிய முதலீடு உட்பட பல கொள்கைகளில் மாறுபடுகிறார்கள். அதற்காக அவர் கள் இடதுசாரிகளாகிவிட்டதாக நான் சொல்ல மாட்டேன். இடதுசாரியாகவும் இல்லாமல் வலதுசாரியாகவும் இல்லாமல் ஒரு மையநிலையை அவர்கள் பின்பற்றினால் நாட்டுக்கு நல்லது. அப்படிப்பட்ட ஒரு முயற்சியைத்தான் நாம் மேற் கொண்டுவருகிறோம்.
கம்யூனிஸ்ட் நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா ஆகியவை உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளில் பங்குவகித்தும், டபிள்யு.டி.ஓ. போன்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உலக மயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகியவற்றை முன்னெடுத்தும் செல்லும்போது, இந்தியா மட்டும் இவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவதன் நியாயம் என்ன?
டபிள்யு.டி.ஓ-விலிருந்து வெளியேறும்படி இடதுசாரிகள் கூறவில்லை. இது ஒரு பன்னாட்டு முறையைப் பயன்படுத்தக் கூடியதற்கான ஒப்பந்தம்தான். இந்த அமைப்புக்குள் நம்முடைய பொருளாதாரச் சுதந்திரம், தொழில், விவசாயம் ஏற்றுமதி ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தனித்த முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஒற்றுமையை உருவாக்கி, அவர்களுடைய ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் சொல்கிறோம்.
பன்னாட்டு நிதிநிறுவனங்களுக்கு இந்தியா அடிபணிந்து போகக் கூடாது. கடந்த காலங்களில் இது நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் அனைவரும் அப்படி ஒரு போக்கை மேற்கொண்டனர். அதனால்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடிநிலை உருவானது. அதனால்தான் நாம் அதை எதிர்க்கிறோம்.
அ.தி.மு.க. அரசின் ‘பி டீம்' போலத்தான் தமிழகத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செயல்பட்டன என்று சொல்லப்படுகிறது. இந்தப் புகாரை எப்படி மறுப்பீர்கள்? மேலும், அ.தி.மு.க. தற்போது உங்களைக் கழட்டிவிட்டதால் ஏற்பட்ட நஷ்டம் என்ன?
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எங்கள் தமிழகத் தலைமையே பதில் சொல்லும். அரசியலில் லாப, நஷ்டம் பார்க்க முடியாது. கொள்கைகள் தான் முக்கியம். கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேற்றப் பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல, அ.தி.மு.க-தான் பொறுப்பு.
முதன்முறையாக பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு சக்தியாக வளர்கிறதா?
பா.ஜ.க. தனிப்பட்ட முறையில் போட்டியிட்டால் தமிழகத்தில் வளராது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்துதான் வளர முடியும். பா.ஜ.க-வுக்கும் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கும் இடையிலான கொள்கை உடன்பாடு என்ன? தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாகியிருக்கிறது. இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் ஆதாயம் தேடிக்கொள்ள பா.ஜ.க. முயல்கிறது.

நன்றி: தமிழ் ஹிண்டு 


மே 5 மாமேதை மார்க்ஸ் பிறந்த தினம் 

வாக்கு எண்ணிக்கையின்போது : இவர், தூத்துக்குடி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு.மோகன்ராஜ். இது போன்ற எளிய மக்கள் தொண்டர்களுக்கு, இனிமேல் தேர்தல் அரசியலில் மதிப்பில்லையா? இந்த அலையில், கம்யூனிஸ்ட்களின் தோல்வி கண்டுதான் மனம் வலிக்கிறது. இத்தனை சாதி,மத,வர்க்கப் பிரிவினை கொண்ட நாட்டில் அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் மிக அவசியம். ம்... மக்கள் தீர்ப்பே...நேர்மையே உன் விலை என்ன?


நல்லக்கண்ணு | கோப்புப் படம்
நோட்டா சொல்வது என்ன?
கேட்கச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் இது நேரடியாக உணர்ந்த உண்மை. அப்போது 49 ஓ, நோட்டா என்கிற நவீன தேர்தல் மறுப்பு வடிவங்களெல்லாம் வரவில்லை. இப்போது முன் னேற்றம். நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் தமிழகத் தில் மட்டும் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித் திருக்கிறார்கள். அதாவது 1.4%. புதுவையில் 3%. அகில இந்திய அளவில்1.1% - சுமார் 59 லட்சம் பேர். இது தவிர, வாக்களிக்காமலே இருந்துவிட்டவர்கள் சில கோடிப் பேர். இந்த விதமான புறக்கணிப்பு மனோபாவம் ஏன் வளர்ந்துவருகிறது என்று எந்த அரசியல் கட்சியாவது சுயபரிசீலனை செய்திருக்கிறதா?
இப்படி இருந்தாலும், எதை அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்களுக்கான பிரதிநிதிகளை வாக்காளப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு தொண்டுநிறுவனம் கொடுத்திருக்கிற கணக்கு வியக்கவைக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி-க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, அ.தி.மு.க. என்று பல கட்சிகளும் இதில் அடக்கம். மொத்த எம்.பி-க்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் (அவர்கள் காட்டியுள்ள குறைந்தபட்ச சொத்துக் கணக்குப்படி).

பலங்கள் தேவை
இதன்படி வாக்காளர்கள் என்ன அளவுகோலின்படி வாக்களிக்கிறார்கள் என்பதைவிட, வேட்பாளர்கள் என்னென்ன தகுதிகளின் அடிப்படையில் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. குற்றப் பின்னணி, அடியாள் பலம், தேர்தல் செலவுக்கான பணபலம், பணப் பட்டுவாடாவுக்கான தனிபலம், இவற்றைத் தவிர, விளம்பரப்படுத்திக்கொள்வதற்கான பலம் - எல்லாம் சேர்ந்தால்தான் இப்போது வேட்பா ளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது.

நேர்மையாளர்களுக்குத் தண்டனை
சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா? நேர்மையான, எளிமையான, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை கொண்ட, சொத்து சேர்க்காத அரசியல்வாதியான காமராஜர் 1967-ல் விருதுநகரில் மாணவர் தலைவரான சீனிவாசனைவிட 1,285 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியடைந்தபோது சொன்னார்: ‘‘மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்.’’
எளிமைக்குப் பெயர்போன இன்னொரு தலைவரான கக்கன் 1967 தேர்தலில் மேலூரில் ஓ.பி. ராமனிடம் தோற்றுப்போனார். பிறகு, 1971-ல் பெரும்புதூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது அங்கும் தோற்கடிக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி 1977-ல் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தார். சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயரெடுத்த இரா. செழியன் 1984-ல் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை வைஜயந்தி மாலாவிடம் தோற்றுப்போனார்.
தற்போது வாழும் அரசியல்வாதிகளில் நேர்மைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு தனது போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றவர்; ஆற்று மணலை எடுப் பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியிருப்பவர். அவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிட்டபோது அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை.
தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு அணை, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் என்று பலவற்றுக்காகவும் போராடிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்காக 19 மாதங்கள் பொடா சிறையில் இருந்தவர். இருந்தபோதும் 2004-ல் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக் தாகூரிடம் தோற்ற வைகோ, நடந்துமுடிந்த தேர்தலில் அதே விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.
அணுசக்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் 15,314 மட்டுமே.

எந்த அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்?
தமிழகத்தின் மீது அசலான அக்கறையுடன், தன்னுடைய குறைந்தபட்ச நேர்மையை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் நின்ற பல வேட்பாளர்களுக்குத் தமிழகம் தந்திருக்கிற எதிர்வினை இதுதான். காம ராஜர், கக்கனில் துவங்கி வைகோ வரை நீள்கிற இந்த விதமான எதிர்வினைகள், தமிழக அரசியலில் சற்று ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழாதா என்று எதிர்பார்த்திருந்தவர்களைச் சலிப்பில் ஆழ்த்தியிருக் கின்றன. கருத்துக் கணிப்பாளர்களையும் கூடக் குழப்பியிருக்கின்றன.
ஏற்கெனவே, தேர்தல் ஜனநாயக முறையில் நம்பிக்கை இழந்த நிலையில், நோட்டாவுக்கு வாக்களிப் பவர்களும், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் இருப்பவர்களும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் - பலரிடம் எழக்கூடிய இயல்பான கேள்வி.

‘‘எந்த அடிப்படையில் இங்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்?வாக்காளர்களின் தகுதியும் நேர்மையும், அவர் கடந்து வந்திருக்கிற வாழ்க்கையும்கூட இங்கு ஒரு பொருட்டில்லையா? வேட்பாளர்களின் தகுதியைப் புறம்தள்ளி அவர் மீதிருக் கும் குற்றப் பின்னணி, வழக்கு இத் யாதிகள், சாதியம் அல்லது மதம் சார்ந்த ஆதிக்கம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய உளவியலை எப்படிப் புரிந்து கொள்வது? தேசிய அளவிலும் மாநில அளவிலும் வெவ்வேறு ஊழல் வழக்குகளில் பிணைக்கப் பட்டிருப்பவர்களின் பின்னணி இங்கு அநாவசியமான ஒன்றா? தொடர்ச்சியான இலவசங்கள், கவர்ச்சியாகக் கட்டமைக்கப்படும் விளம்பரங்கள், இறுதி நேரத்துப் பட்டுவாடாக்கள்தான் படிப்படியாக வாக்காள மனங்களை நகர்த்தி வாக்குப்பதிவு இயந்திரத்திடம் கொண்டுசேர்க்கின்றனவா?’’
இதைப் படிக்கும் உங்களுடைய மனதில்கூட இதே கேள்விகள் வேறு வடிவில் தோன்றியிருக்கலாம். நெருக்கடி நிலையை அடுத்து நடந்த தேர்தலைத் தவிர்த்து, அனுதாபம், பணபலம், மதம், சாதி உணர்வு கள்தான் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் என்றால், ஜனநாயகத்தை அர்த்தமிழக்க வைப்பது யார்?

Saturday, 24 May 2014

தோழர்களே!!  தோழியர்களே!!! 
   
                                              வணக்கம் 14-05-2014 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCLஇணைப்பு மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யபட்டனர் 

 தலைவர்                                      :     தோழர்  G.வேதாச்சலம்     விழுப்புரம்                 


மாவட்ட செயல்  தலைவர்  :       தோழர்  E.டில்லிபாபு CL     சிதம்பரம்
                                                                 
    து.தலைவர்கள்                      :      "    S.ராமசாமி   CL              விழுப்புரம்
                                                                                
                                                                     "   முருகானந்தம் CL         கடலூர் 

                                                                     "   S.வீரமணி                         விழுப்புரம் 

                                                                     "       V.வீராசாமி  CL            விருதை 

                                                                     "         ரமேஷ்  CL                   சிதம்பரம் 

மாவட்ட செயலர்                        :  தோழர்  S.ஆனந்தன் TTA        கடலூர் 

மாவட்ட துணை செயலர்       :  தோழர் P.சுந்தரமூர்த்தி TTA   கடலூர் 
                                                                                             
  மாவட்ட உ .செயலர்கள்       தோழர் P.தமிழ்ச்செல்வன் CL நெய்வேலி 
                                                                              
                                                                      "        R.ரவி                           கானை 

                                                                      "        K.கோதண்டராமன்   கடலூர் 

                                                                     "        N.சண்முகம்                       சிதம்பரம் 

                                                                     "        பால் பிரான்சிஸ்    CL   கடலூர் 

                                                              தோழியர் P.விண்ணரசி   CL    விழுப்புரம் 

பொருளர்                                        :    தோழர்  K.மதிவாணன்  CL     கடலூர்

உ. பொருளர்                                 :         “        S.ஜெயகாந்தன் CL      கடலூர்


அ. செயலர்கள்                            :    தோழர்  M.மஞ்சினி                  கடலூர்

                                                                     "        S.பன்னீர்செல்வம் CL  பண்ருட்டி

                                                                    "         V.குமாரவேல்             நெய்வேலி

                                                                    "         C.ராமநாதன் A/C PLANT -விருதை

                                                                    "        K.சுப்பிரமணியன் CL     விருதை

                                                                    "         R.மணிகண்டன்  CL      சிறுபாக்கம்

                                                                    "        G.தமிழரசன்  CL                சிதம்பரம்

 தணிக்கையாளர்                               தோழர்   P.சுப்பிரமணியன்         கடலூர்

சட்ட ஆலோசகர்                             : தோழர்  M.சேகர் AITUC      கடலூர்

               
                                                        தோழமையுடன் 

 G.வேதாச்சலம்                                                          E.டில்லிபாபு            
தலைவர்                                                                      செயல் தலைவர்          

 ஆனந்தன்                                                           K.மதிவாணன்                            செயலர்                                                                      பொருளர்              
                                                                      

Thursday, 22 May 2014

தோழர்களே தோழியர்களே
   
               வணக்கம் 20-05-2014 அன்று கேரளா மாநிலத்தில் உள்ள   பத்தனம்திட்டா மாவட்டத்தில் வடசேர்ரிக்கரா என்ற இடத்தில்  NFTCL  மாவட்ட சங்கம் துவக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .மாவட்டத்தலைவராக AITUC -யின் மாவட்டச்செயலர் தோழர் வித்யாதரன்.செயல் தலைவராக தோழர் P.S.அனில்குமார் CL அவர்களும் செயலராக தோழர் சுரேஷ்குமார் அவர்களும் பொருளராக தோழர் ஆப்ரகாம் சாக்கோ  அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகளின் பனி மேலும் சிறக்க NFTCL தமிழ்நாடு மற்றும் கடலூர் மாவட்ட சங்கம் மற்றும் நெய்வேலி கிளையின் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியை அடைய அயராது பாடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் குறிப்பாக தோழர் S.P.மோகன்குமார் மாநில செயலர் கேரளா அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் 
PATHTHANAMTHITTA DISTRICT COMMITTEE FORMED AT VADASSERIKKARAA NEAR RANNI ON 20th May 2014
 ELECTED Com VIDHYADHARAN AITUC Dist. Secretary. Paththanamthitta. ELECTED AS Dist.President .
Com PS.ANILKUMAR Working President.
Com.S.SURESHKUMAR Dist Secretary.
Com.ABRAHAM CHACKO Treasurer . State Secretary Attended
  

Wednesday, 21 May 2014


வெற்றி!!!! வெற்றி!!!! வெற்றி !!!!!
கடந்த   முறை   குளுக்களில் கூட வெற்றி பெற முடியாத சங்கம் என்று சொன்ன BSNLEU சங்கத்தை ஒரு சிட் கூட   வெற்றி பெறம  செய்த NFTE   தலைவர்களுக்கு  !!!
இனி என்றும் வெற்றி எதிலும் வெற்றி என்று கூறி வெற்றிகள் தொடர NFTCL மாநில சங்கதின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ***************************************************************  

 


VICE PRESIDENT Com.K.RAGHUNATHAN BEING HONOURED
  
        


 கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு !

      நமது சென்னை கூட்டுறவு சங்கத்தின் புதிய 
21 இயக்குநர்கள் 21-5-14 அதிகாலையில் கூடி 
புதிய நிர்வாகிகளை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.

 தலைவராக தோழர் S.வீரராகவன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணைத் தலைவராக தோழர் K.ரகுநாதன் ( NFTE-BSNL), பொருளராக தோழர் திரிசங்கு (FNTO)  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  புதிய நிர்வாகிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவும் சிறப்பாக செயலாற்றவும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்   

                                 
சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள்

 தேர்தல்...நமது NFTEகூட்டணி...வரலாற்று

 சிறப்புமிக்க...மகத்தான வெற்றி...!

 வெற்றி...!வெற்றி...!    
20-05-2014 செவ்வாய் கிழமை அன்று  நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்கஇயக்குனர்கள் தேர்தலில் 
21 இடங்களையும்நமது NFTE  தலைமையிலான
அணி வெற்றி பெற்றுள்ளது.            இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்
  தமிழ்நாடு
மொத்த வாக்குகள் : 127
மொத்த இடங்கள் : 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10
K. அசோகன்சென்னை : 70
A. ஞானசேகர்திருச்சி : 67
A. குல்சார் அஹமதுஈரோடு : 69
P. இளங்கோவன்மதுரை : 70
V. கிருஷ்ணமூர்த்திகடலூர் : 69
V. நாகராஜாபெங்களூர் : 70
S. பார்த்திபன்சென்னை : 70
R. ராஜேந்திரன்தஞ்சாவூர் : 71
P. சண்முகம்திருநெல்வேலி : 68
S. வீரராகவன்வேலூர் : 75


 சென்னை தொலைபேசி 

மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8

V. 
பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42


 பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2

பிரேமா ஜீவானந்தம்திருச்சி : 106
M. செல்விசென்னை : 114

பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
 

NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1

G. 
ராஜ்குமார்வேலூர் : 107