வியாழன், 10 ஏப்ரல், 2014

அணியின் பெயரால் அடிமரத்தை வெட்டுபவர்கள்-----திருச்சி வலைதளத்திலிருந்து........


தோழர் பட்டாபி தலைமையிலான NFTE சங்கமே உண்மையான NFTE – BSNL சங்கம்!
ஏப்ரல் மாத வெயிலில், RGP தேர்தல் பித்தத்தில் சிலர் இப்படி பிதற்ற தொடங்கி விட்டனர்! திருச்சி மாவட்டத்தில்!!

“பட்டாபி தலைமையிலான NFTE சங்கம்” இந்த பதத்தை தோழர். பட்டாபி அவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே நம்புகிறோம்.

பட்டாபி அணி என்ற முகமூடி அணிந்த சில சுயநல பேர்வழிகள், எங்களுக்கு நாலு சீட்டு கொடு! என வீண் விவாதம் செய்ய வைத்து, மற்ற கூட்டணி சங்கங்களுக்கும் தர வேண்டுமே, மூன்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகும், ஒரே ஒரு சீட்டு குறைவுக்காக, ஓடி சென்று ஐந்தே நிமிடத்தில் BSNLEU செல்லப்பா அணியுடன் ஒரு கூட்டணி போட்டனர். (நம்மிடம் பேசியதே ஒரு நாடகம் தான் என பின்பு அறிந்துகொண்டோம்)

இன்று, NFTE சங்கத்தை, NFTE சங்க தலைவர்களை, NFTE திருச்சி மாவட்ட சங்கத்தை தர குறைவாக செல்லப்பா அணியினர் விமர்சிக்கும் பொது அதை கைகொட்டி ரசிப்பவர்களுக்கு பெயர் பட்டாபி அணியாம்! கேட்க நமக்கு வெட்கமாக இருக்கிறது.

தமிழகத்தில், சென்னை தொலைபேசியில் இதுவரை நடந்துள்ள RGB தேர்தல்களில் BSNLEU சங்கம் பெற்ற படுதோல்வியை மறைக்க பட்டாபி அணி வெற்றி பெற்றுள்ளதாக செல்லப்பா அணி தில்லுமுல்லு பிரச்சாரம் செய்கிறது.

அணியின் பெயரில், அதையே FLEX பேனராக அடித்து BSNLEU சங்கத்திற்கும் சேர்த்து வோட்டு கேட்கும் அவலத்தை இங்கு சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்.( இந்த தரமற்ற செயலுக்கு கடலூர், கும்பகோண இணைய தளங்களில் இலவச விளம்பரம் வேறு! )

மதுரை மாநாட்டில் போட்டி ஏற்பட்டது உண்மை!
தோழர்.பட்டாபி வெற்றி பெற்றதும் உண்மை!
அதை அனைவரும் எற்றுகொண்டதும் உண்மை!

அதே சமயம், மாவட்ட சங்க நிதி இரண்டு லட்சத்தை கையாடல் செய்தவர்களும், அரியலூர் மாவட்ட மாநாடு கணக்கை இதுவரை சமர்பிக்காதவர்களும், கிளை மாநாடு முடிந்து புதிய பொருளரிடம் எதையும் கொடுக்காதவர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு தங்கள் தவறுகளை மறைக்க, நாங்கள் பட்டாபி அணி என்று சொல்லி தப்பிக்க முயல்வதை, உண்மையான, தன்மானமுள்ள எந்த NFTE உறுப்பினரும் ஏற்க மாட்டான் என்ற உண்மையையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

NFTE சங்கத்திற்கு தலைவர் தோழர்.இஸ்லாம் அஹமது, பொது செயலர் தோழர். C. சிங், என்று தானே எனக்கு தெரியும். தோழர் பட்டாபி தலைமையில் NFTE சங்கம் ஒன்று இருக்கா சார்?

இது ஒரு NFTE உறுப்பினரின் கேள்வி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக