வெள்ளி, 10 ஏப்ரல், 2020

ஒப்பந்த தொழிலாளர்கள் பெயரால் வசூல் வேட்டை ?
கடந்த 11 மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும் இந்த அநியாயத்தை வேடிக்கை பார்த்து வருகின்றன. ஊழியர்களுக்கும் அதிகாரிகளும் எல்லாம் (?) தவறாமல் கிடைத்து வருவதால் புரட்சி (?) பேசும் சங்கங்கள் கூட மெளனத்தில். ஆனால் பாவப்பட்ட ஏழைகளான‌ ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெயரில் வசூல் வேட்டையை‌ BSNLEU கனகச்சிதமாக துவங்கிவிட்டது.‌விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கு கிடைக்கும் எக்ஸ்கிரேஷியா , விடுப்பு சம்பளம் ‌போன்ற பெருந் தொகையை குறிவைத்து இந்த வசூல் வேட்டை நடக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் வறுமையைக் கூட காசாக்கும் திறன் படைத்த தலைவர்கள் இன்று பெருந்தொகையினை‌ நன்கொடையாக‌ வசூலித்து குவிக்கிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தேவை அனுதாபமோ நன்கொடையோ அல்ல. மாறாக அவர்கள் வியர்வை சிந்தி உழைத்ததற்கான‌ ஊதியம் தான். ஏறத்தாழ ஒருவருடமாக‌ அவர்கள்‌ வாழ்க்கை‌ நடத்த முடியாமல் அல்லல் படுவதை‌ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சங்கங்கள் இன்று‌ ஊழியர்களுக்கு கிடைக்கும் பெருந் தொகையை குறிவைத்து நன்கொடை வசூல் என நாடகமாடுவது அநியாயம்.
கடந்த வாரம் பிஎஸ்என்எல் நிர்வாகம் பெருகிவரும் கோவிட்-19 தொற்று நோயை‌ எதிர்த்து போராட ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டுகோள் விடுத்ததை நிர்தாட்சண்யமாக‌ நிராகரித்த‌ BSNLEU சங்கம் அதற்கு காரணமாக கூறியது ஒப்பந்த தொழிலாளர்களின் பெயரால் அது நடத்தும் வசூல் வேட்டையைத் தான். இது அநியாயமான அணுகுமுறை. கண்டிக்கத்தக்க தவறான போக்கு.
சி.கே.எம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக