சனி, 18 ஜனவரி, 2020

NFTCL போராட்டம் ஒத்திவைப்பு !
********************
கோயமுத்தூரில் 30/12/2019 அன்று நடைபெற்ற தமிழ்நாடு NFTCL மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக
22/01/2020 அன்று மாவட்ட தலைநகரங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கோரிக்கையின் பால் தீர்வு எட்டப்படவில்லை என்றால் 29/01/2020 அன்று தஞ்சாவூரில் தார்ணா போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இதனை முறைப்படி நிர்வாகத்திற்கும் - சென்னை மண்டல தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கும் தெரிவித்து விட்டோம்.
போராட்ட அறிவிப்பினை பற்றி விவாதிக்க திரு.அண்ணாதுரை , RLC / சென்னை நமது மாநிலச் சங்கத்தை 17/01/2020 அன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பினை ஏற்று 17/01/2020 அன்று நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில பொருளாளர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய தொழிலாளர் மண்டல ஆணையர் அவர்கள் ஏற்கனவே NFTCL சங்கம் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் தருவாயில் எந்த ஒரு போராட்ட நடவடிக்கைகளில் உங்கள் சங்கம் ஈடுபடக் கூடாது அது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்றும் வலியுறுத்தினார் அதேசமயம், இரண்டு CGM களும் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிது காலஅவகாசம் கோருவதாகவும் NFTCL 2020 ஜனவரி 22 மற்றும் 29 தேதிகளில் நடத்த அறிவித்துள்ள இரண்டு கட்ட போராட்டங்களை கைவிட வேண்டும் என்று திரு.அண்ணாதுரை , RLC வேண்டுகோள் ( Appeal) விடுத்தார். இந்த வேண்டுகோளை நிராகரிக்கும் சூழலில் நமது சங்கம் இன்று இல்லை. எனவே வேறுவழியின்றி இரண்டு போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில் RLC அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பத்து மாத சம்பள நிலுவையை விரைவில் வழங்கிட சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு CGM களுக்கு கூடுதல் அழுத்தம்/ நிர்பந்தம் அளிக்கும் படியான கடிதத்தை அனுப்ப விருப்பதாக தெரிவித்தார் . எனவே நாம் இம்மாவட்டத்தின் இறுதியில் நடத்தவிருந்த இரு இயக்கங்களையும் ஒத்திவைத்துள்ளோம். நமது மாநிலச் சங்க நிர்வாகிகள்/ மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவினை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி!
தோழமையுடன்
S.ஆனந்தன்
மாநிலச் செயலாளர்
NFTCL-தமிழ்நாடு.
18/01/2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக