வெள்ளி, 1 நவம்பர், 2019

அருமை அருமை பட்டுக்கோட்டையார் வரிகள் என்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்ற வரிகளாக அமையும் என்பதில் எடுத்துகாட்டு இதோ இந்த பாடல் வரிகளில் ஒப்பந்த தொழிலாளர்களே சிந்திக்க வேண்டிய விஷயம் உங்களிடத்தில், போன மாதமே வேலையில் விட்டு போ என்ற அதிகாரிகள் உங்களை இதுவரையில் வேலைக்கு வைத்து இருக்க செய்த ஒரே சங்கம் தேசிய தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மெளனம்(NFTCL ) இனியும் வேலைதான் முக்கியம் என்று பயத்தில் இருந்தால் உங்களை காப்பாற்ற எந்த சங்கத்தாலும் முடியாது 

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்கச் செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி - இனி
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
படம்: நாடோடி மன்னன்
இசை: S.M.சுப்பையா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்கள்: T.M.சௌந்தரராஜன் & பானுமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக